விக்கிபீடியா கட்டுரைகளை eBook ஆக டவுன்லோட் செய்வது எப்படி? | கற்போம்

விக்கிபீடியா கட்டுரைகளை eBook ஆக டவுன்லோட் செய்வது எப்படி?

இணையத்தில் உள்ள அனைவரும் கூகுள்க்கு அடுத்த படியாக பயன்படுத்தும் தளம் என்றால் அது விக்கிபீடியாவாகத் தான் இருக்கும். மிகவும் பயனுள்ள பல கட்டுரைகளை கொடுக்கும் அது தரும் புதிய வசதி, அதன் கட்டுரைகளை eBook ஆக PDF Format - இல் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி. எப்படி என்று பார்ப்போம். 

இதன் பெரிய பலன், எத்தனை கட்டுரைகளை வேண்டுமானாலும் ஒரே புத்தகமாக டவுன்லோட் செய்ய முடியும். 

தமிழ் விக்கிபீடியா: 

1. முதலில் உங்களுக்கு வேண்டிய கட்டுரையை விக்கிபீடியா பக்கத்தில் ஓபன் செய்யுங்கள். 

2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் அச்சு/ஏற்றுமதி என்பதில்  "ஒரு புத்தகம் உருவாக்கு" என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள். 

3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள்.இதில் "புத்தக உருவாக்குநரை தொடங்கு" என்பதை கிளிக் செய்யுங்கள், 

4. இப்போது மீண்டும் கட்டுரை பக்கத்துக்கு வருவீர்கள். அதில் கட்டுரையின் மேலே ஒரு பகுதி இருக்கும். 

அதில் "உங்கள் புத்தகத்தில் இப்பக்கத்தைச் சேர்க்கவும்" என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும். 

இதை கிளிக் செய்தால் அந்த பக்கமும் உங்கள் புத்தகத்தில் Add ஆகிவிடும். 

6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள். 

7.  இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள நூலைக் காட்டவும் என்பதை கிளிக் செய்யுங்கள். 

8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து பதிவிறக்கம் செய் என்பதை கிளிக் செய்யுங்கள். 

வேறு வடிவமைப்பு வேண்டும் என்றால் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். 

9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும். 

ஆங்கில விக்கிபீடியா: 

1. முதலில் உங்களுக்கு வேண்டிய கட்டுரையை விக்கிபீடியா பக்கத்தில் ஓபன் செய்யுங்கள். 

2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் Print/Export என்பதில் Create a book என்பதை கிளிக் செய்யுங்கள். 

3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள்.  "Start book creator" என்பதை கிளிக் செய்யுங்கள். 

4. இப்போது மீண்டும் கட்டுரை பக்கத்துக்கு வருவீர்கள். அதில் கட்டுரையின் மேலே ஒரு பகுதி இருக்கும்.

 Add this page to your book என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும்.

இதை கிளிக் செய்தால் அந்த பக்கமும் உங்கள் புத்தகத்தில் Add ஆகிவிடும்.

6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள்.

7.  இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள Show book என்பதை கிளிக் செய்யுங்கள்.

8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து Download என்பதை கிளிக் செய்யுங்கள்.

வேறு Format வேண்டும் என்றால் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.

9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும்.

- பிரபு கிருஷ்ணா

8 comments

தகவலுக்கு நன்றி பிரபு!

Reply

மிகவும் பயனுள்ள பதிவு.

Reply

பயனுள்ள பதிவு... நன்றி...

Reply

நன்றி........உபயோகமான பதிவு....

Reply

நல்ல பயனுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Reply

மிக்க நன்றிங்க...

Reply

thanks fr the best post........fr me

Reply

Post a Comment