Lava Xolo A1000 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்

Lava Xolo A1000 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


தினம் தினம் ஒரு Android மொபைல் வெளிவரும் இந்த வருடத்தில் சமீபத்திய வரவு Lava Xolo A1000. அசத்தலான வசதிகளுடன் வந்துள்ள இந்த போனின் விலை ரூபாய் 13999* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை காண்போம். 

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 3264 x 2448 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging, touch focus, face detection போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் 1.2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 5.0 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM, 4GB ROM மற்றும் 1 GHz Dual Core Processorr கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே 

Lava Xolo A1000 Specifications

Operating System Android OS v4.1 Jelly bean
Display 5-inch IPS LCD Capacitive Touch screen with 1280 x 720 Pixels
Dual Sim Yes, GSM+GSM and Dual Standby
Processor 1 GHz Dual Core Processor
RAM 1 GB RAM, 4 GB ROM
Internal Memory 4 GB
External Memory Yes, microSD, upto 32 GB
Camera Rear Camera  - 8 MP, Front Camera – 1.2 MP
Battery 2100 mAh
Features GPRS, EDGE, 3G, Bluetooth, Wi-Fi, Micro USB 2.0 connector

கற்போம் Review: 

கிட்டத்தட்ட Micromax A116 Canvas HD போனின் Specifications (Processor தவிர) இது குறைந்த விலையில் அதிக வசதி உள்ள போனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்தது.

* - விலை Update செய்த தேதி 18-02-2013. 

நன்றி - Tech Hints


- பிரபு கிருஷ்ணா

5 comments

சீக்கிரம் ஒரு நல்ல போன் வாங்கணும்... சங்கம் என் கோரிக்கையை நிறைவேற்றுமா

Reply

ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தால் சங்கம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் :P

Reply

//ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தால் சங்கம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்//

அப்படியெல்லாம் சொல்ல கூடாது... சங்க உறுப்பினருக்கு தள்ளுபடியுடன் கொடுக்கணும்...

@சீனு

ரூபாய் 99,999 மட்டுமே! :)

Reply

தகவலுக்கு நன்றிங்க...

Reply

எனக்காக ரூபாய் 99,999 தள்ளுபடி செய்த சங்கத்தை நான் மனமார வாழ்த்துகிறேன்.. அந்த ஒரு ரூபாயை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் கொடுங்கள் , என் வீட்டு முகவரி தருகிறேன், மொபைல் அனுப்ப வசதியாய் இருக்கும் :-)

Reply

Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.