நோக்கியாவின் நான்கு புதிய போன்கள் - Nokia 105, 301, Lumia 520, Lumia 720 | கற்போம்

நோக்கியாவின் நான்கு புதிய போன்கள் - Nokia 105, 301, Lumia 520, Lumia 720


நேற்று தொடங்கிய MWC எனப்படும் Mobile World Congress மாநாட்டில் பல மொபைல் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. முழுக்க முழுக்க மொபைல் பற்றிய இந்த மாநாட்டின் முதல் நாளில்  இரண்டு ஸ்மார்ட் போன்கள், இரண்டு பட்ஜெட் போன்கள் என  நான்கு புதிய போன்களை வெளியிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். அவை பற்றிய விவரங்களை காண்போம். 

Nokia 105



மிகக் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த போன். போனை வெறும் அழைப்புகளுக்கு பயன்படுத்தும் நபர்களுக்கு உகந்த மாடல் இது. FM Radio மற்றும் சில கேம்ஸ் உடன் வருகிறது. இதன் பாட்டரி 35 நாட்கள் Standby என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு - Nokia 105 Full Specifications

Nokia 301



குறைந்த விலையில் கேமராவுடன் வரும் போன் இது. 3.2 MP கேமராவுடன் வரும் இந்த போன் 3G வசதி உடையது குறிப்பிடதக்கது. அத்தோடு ப்ளூடூத், FM Radio வசதியும் இதில் உள்ளது. பட்ஜெட் போன் வாங்க விரும்பும் நபர்களுக்கு உகந்த போன். 

மேலும் விவரங்களுக்கு - Nokia 301 Full Specifications

Nokia Lumia 520


Microsoft Windows Phone 8 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போன் 4.0 Inch IPS LCD capacitive touch screen உடன் வருகிறது.5 MP Camera, 1 GHz Dual-core Processor, 512 MB RAM, 8 GB Internal Memory போன்ற வசதிகளும் இதில் உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு - Nokia Lumia 520 Specifications

Nokia Lumia 720



இதுவும் Microsoft Windows Phone 8 இயங்கு தளத்தில் இயங்கும் போன். இது 4.7 Inch TFT capacitive touch screen உடன் வருகிறது.6.7 MP Camera, 1 GHz Dual-core Processor, 512 MB RAM, 8 GB Internal Memory போன்ற வசதிகளும் இதில் உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு - Nokia Lumia 720 Specifications

இவற்றில் எந்த போனும் இன்னும் வெளியிடப்படவில்லை. விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நன்றி - Tech Hints & Specs Of All

- பிரபு கிருஷ்ணா

5 comments

ஒரு நல்ல கேமரா மொபைல் Rs 15000 ரேஞ்சுல சஜஸ்ட் பண்ணுங்களேன்...!
(> 5 MP, autofocus, Carl-zeiss lens)

Reply

Samsung Galaxy S Duos, Lava XOLO X900, Sony Xperia U, Xperia Sola, Xperia U, Xperia Go

இதில் ஏதோ ஒன்றை வாங்கலாம்.

Reply

how about htc mobiles prabhu

Reply

That also good only. but the above mobiles i suggested are better than HTC, when you want a mobile below 15,000.

Reply

நன்றி பிரபு, எக்ஸ்பீரியாவை தேர்வு செய்திருக்கிறேன்.....!

Reply

Post a Comment