9 இந்திய மொழிகளுடன் Samsung Galaxy Smartphones & Tablets | கற்போம்

9 இந்திய மொழிகளுடன் Samsung Galaxy Smartphones & Tablets

Samsung நிறுவனம் இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Samsung Galaxy Smartphones மற்றும் Tablets இனி 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வண்ணம் வெளியாகும் என்பதே அந்த அறிவிப்பு. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, மராத்தி மற்றும் குஜராத்தி ஆகிய 9 மொழிகள் தாம் அவை. இந்த அறிவிப்பின் படி Samsung Galaxy Smartphones & Tablets பயன்படுத்தும் இந்திய பயனர்கள் இந்த வசதியை பெற முடியும்.



Galaxy Grand, Galaxy S4 and the Galaxy Tab 3 ஆகிய மூன்றிலும் இந்த வசதி இன்று முதல் கிடைக்கும், விலை குறைவாக கிடைக்கும் Galaxy Star போனில் இந்த வசதி இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும், அடுத்த மாதத்தில் இருந்து மற்ற மாடல்கள் அனைத்தும் இந்த வசதியை பெற ஆரம்பிக்கும் என்று Samsung India சொல்லி உள்ளது.. இந்த வசதியை Reverie Language Technologies என்ற நிறுவனத்துடன் இணைந்து Samsung அதன் பயனர்களுக்கு தருகிறது.



அதே போல Samsung App Store-லும் சில Applications குறிப்பிட்ட மொழிகளில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. Facebook, Gmail, Mydala, BSE and Bharat Matrimony போன்றவை தற்போது குறிப்பிட்ட மொழிகளில் கிடைகின்றன. இது தவிர இன்னும் சிலவும் உள்ளன விரைவில் நிறைய Applications கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.



- பிரபு கிருஷ்ணா

Post a Comment