Google தேடலில் No. 1 ஆக இருங்கள் | கற்போம்

Google தேடலில் No. 1 ஆக இருங்கள்

Google தான் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தூம் தேடுதல் இயந்திரம். இதை அசைக்க இதுவரை எந்தவொரு தேடுதல் இயந்திரத்தாலும் முடியவில்லை. அப்படிபட்ட Google தேடலில்  நம் பக்கத்தை ஏன் முதலாவதாக கொண்டுவர வேண்டும், எப்படி கொண்டு வருவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் நாம் ஏன் நம் பெயர், வலைப்பக்கத்தை முதலாவதாக கொண்டுவர வேண்டும்?

சமீபத்தில் Optify  என்ற தளம் வெளியிட்ட சில சர்வே ஆய்வுகளின்படி [PDF] Google தேடலில் பெரும்பாலோனோர்(36.4%) முதலாவது Result யே செல்ல விரும்புகின்றனர்.  இதில் இரண்டாவது ரிசல்ட்க்கு செல்பவர்கள் 12.5% மட்டுமே, மற்றவற்றுக்கு இது இன்னும் குறையும். முதல் பத்துக்கு விருப்ப சதவீதத்தை தருகிறேன்.


இப்போது புரிகிறதா ஏன் முதலாவதாக இருக்க வேண்டும் என.

சரி நாம் எப்படி முதலாவதாக வருவது என்று யோசிக்கிறீர்களா. உங்கள் வலைப்பூ பெயரை கொஞ்சம் வித்தியாசமாக வைத்தாலே போதுமானது.எப்படி வைப்பது?? 

நான் முன்னர் என் வலைப்பூ பெயரை "balepandiya.blogspot.com" என வைத்து இருந்தேன். தலைப்பு "பலே பாண்டியா", ஆனால் இதை நான் ஆங்கிலம், தமிழ் என எதில் தேடினாலும் பலே பாண்டியா திரைப்படம் மட்டுமே ரிசல்ட் ஆக  வந்தது. என் வலைப்பூ கடல்லயே கிடையாது என Google சொல்லிவிட்டது. 

பின்னர்தான் நான் "http://baleprabu.blogspot.com/" என்ற முகவரிக்கு மாறினேன். தலைப்பு  "பலே ப்ளாக்". இப்போது நீங்கள் பலே ப்ளாக் என்று தமிழில் தேடினாலும், baleprabu என ஆங்கிலத்தில் தேடினாலும் என் வலைப்பூ முதல் ரிசல்ட் ஆக வரும். (ஆங்கிலம் மட்டும் சில வேறு லிங்க்களை என் வலைப்பூ பெயருடன் தருகிறது.). 

இது என் அனுபவம், நீங்களும் இதுபோல தேடிபார்த்து உங்கள் வலைப்பூவை முதல் ரிசல்டாக  கொண்டுவரப் பாருங்கள்.பெரும்பாலும் வலைப்பூ தலைப்பை மாற்றினாலே போதுமானது. 

14 comments

என்னோடதும் English ல தேடினா நிறைய முடிவுகள் வரும் , ஆனா தமிழ்ல கம்மியாதான் வரும் :-)

Reply

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Reply

ம்ம் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி பிரபு.

Reply

//அது மட்டும் கிடைச்சா போதும் எனக்கு எதுவுமே வேண்டாம் என்கிற உறுதிமொழிகள், அது கிடைத்தவுடன் அடுத்த கனவுகளின் மீது சொல்லப்படுகின்றது!
_selvu@twitter.com// ம்ம்... பாரம்பா... செல்வா தத்துவபித்துலாம் சொல்ல ஆரம்பிச்சுட்டான்...!!! ம்ம் ரைட்டு கலக்குங்க அப்பு..!!

Reply

//அன்று காங்கிரஸ் ஜெயிச்சதும் நண்பன் சொன்னான், இந்தியா இனி எங்கயோ போயிரும்னு. இப்பதான் புரியுது அது ஸ்பெக்ட்ரம் வரைன்னு...!!!
_nanjilmano@twitter.com// ஹி..ஹி..ஹி... கரைக்டா.. சொல்லியிருக்கீங்க.. தலைவா..!!

Reply

சிறப்பான பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி
http://ravi4thepeople.blogspot.com

Reply

நல்ல தகவல். முக்கியமா சினிமா பட பெயர்களில் தலைப்பு வைப்பதை தவிர்த்துக்கொண்டால் நல்லது ..)

Reply

அருமையான தகவல் சகோ, நானும் கூகிளில் தேடினேன், என் பெயரும் நீங்கள் கூறுவது போல வருகிறது.
நன்றிகள் சகோ.

Reply

சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

Reply

இவ்வளவு நாளாக இந்த விசயத்தைப் பற்றி யோசித்ததில்லை உங்கள் பதிவை பார்த்துவிட்டு நானும் எனது " தமிழ்பஜார்" வலைப்பூவை கூகிளில் தேடினேன் முதல் பக்கத்தில் முதலிடத்திலேயே வந்துள்ளது தகவலுக்கு நன்றி.

Reply

நல்ல தகவல் அப்படியே, என்ற Meta tagகினுள் contentல் தளம் பற்றிய குறிப்பைக்கொடுத்தால் அதை மட்டும் கூகுள் எடுத்துக் கொள்ளும் eg) meta content='இணையம் சார்ந்த டிப்ஸ்கள், இணையதள கட்டுமானங்கள்.... பகிர்ந்து கொள்ளும் தளம்.' name='description'/>

Reply

கலக்கிட்டீங்க

Reply

///நான் முன்னர் என் வலைப்பூ பெயரை "balepandiya.blogspot.com" என வைத்து இருந்தேன்.
பின்னர்தான் நான் "http://baleprabu.blogspot.com/" என்ற முகவரிக்கு மாறினேன்.///

இது போல் வலைப்பூ பெயரை மாற்ற இயலுமா ? எப்படி என்பதை கூறவும்

Reply

blogger >> Settings இந்த பகுதியில் இதை செய்ய முடியும். ஆனால் இதனால் உங்கள் வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடும். எனவே உங்களுக்கு விருப்பமானபடி Domain ஒன்று வாங்கி விடுங்கள். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Reply

Post a Comment