கற்போம்: google | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

Google Terms of Serviceஇல் மாற்றம் & Mozilla வின் புதிய Flash Player

இணையத்தின் இரண்டு மாபெரும் நிறுவனங்களான Google மற்றும் Mozill சமீபத்தில் இரண்டு புதிய விசயங்களை அறிமுகம் செய்துள்ளன. Google அதன் Terms of Serviceஇல் ஒரு மாற்றத்தையும், Mozilla Adobe Flash Player க்கு மாற்றாக புதிய Flash Player ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம். 


Google Terms of Serviceஇல் மாற்றம்:

Google, Google+ நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், தரப்படுத்தல், logoபடம் (comments, ratings photos) போன்றவற்றை தனக்கு சாதகமாக விளம்பரங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் நவம்பர் 11 இல் இருந்து செயல்பட தொடங்கும். அந்த முறையை விரும்பாதவர்கள் settings இல் சென்று disable செய்து கொள்ளலாம். அப்படி செய்யாவிட்டால்,உங்கள் கருத்துக்கள் உங்கள் பட லோகோ வுடன் படத்தில் உள்ளது போல் வெளியாகும்.

இதை தடுக்க நீங்கள் Shared Endorsements என்ற பக்கத்தில் "Based upon my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads." என்பதை Uncheck செய்து விடுங்கள்.



Mozilla வின் Shumway-Flash Player:

Mozilla Firefox பலர் விரும்புவதற்குக் காரணம் பல Extensions & Plug-ins கள் கிடைப்பதும், அவற்றை நாம் இணைத்துப் பயன்படுத்த முடியும் என்பதாலும் ஆகும். இந்த Mozilla Firefox 2002 September 23 இல் Phonix 0.1 ஆக Dave Hyatt, Blake Ross என்பவர்களால் தொடங்கப்பட்டு BIOS தயாரிப்பாளர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக Mozilla Firefox ஆக மாற்றம் பெற்று November 9, 2004 இல் Mozilla Browser Firefox-1.0 என வெளியிடப்பட்டது.



தொடர்ந்து வெற்றிப் பாதையில் வந்த Mozilla, தற்போது 2013 செப்.17 இல் Firefox 24 ஐயும், Firefox 24 ESR ஐயும், Firefox Nightly builds (version 27) -Beta வையும் வெளியிட்டுள்ளது. இந்த Firefox Nightly builds (version 27) இல் Flash Player ற்குப் பதில் 64 bit ற்கு ஏற்புடையதும், HTML5 and JavaScript அடிப்படையிலும் Shumway என்ற புதிய flash player ஐயும் அறிமுகப்படுத்தி உள்ளது.

1997 இல் Macromedia வால் உருவாக்கப்பட்ட Macromedia’s Flash Player 2005 இல் Adobe நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த adobe flash player ஆனது SWF files (ShockWave Flash-Small Web Format ) களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த adobe flash player ற்கு விடை கொடுக்கிறது Shumway Flash Player. பரீட்சிக்க விரும்புவோர் Firefox Nightly builds (version 27) -Beta இல் Shumway ஐ enable செய்து பார்க்கலாம்.

21 ஜனவரி 2014 இல் Firefox 27 உடன் வரவிருக்கும் Shumway கணினி விளையாட்டுக்கள், வீடியோக்களுக்கு நன்றாக இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஆகும்.
- சக்தி
இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

Google Project Glass - ஒரு பார்வை

கூகிள் கிளாஸ் பற்றி ஏற்கனவே கற்போமில் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" எழுதிய பதிவை படித்திருப்பீர்கள். அது பற்றிய இன்னும் சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.



இந்தக் கண்ணாடி ஒரு சிறிய கணினியைப் (அணியக்கூடிய கணினி) போல் செயல்படுகிறது. இதில் படங்கள்,வீடியோ எடுக்கும் காமெரா, GPS உட்பட WIFI, Bluetooth முறையில் இணையத் தொடர்பு, speakers, microphone, touchpad, gyroscope, tiny screen மற்றும் Google Maps, Google+,கால நிலை அறிவது போன்ற பல வசதிகளும் உண்டு. இது தவிர siri app போன்று இந்த கண்ணாடியும் நமது உத்தரவுகளை ஏற்று செய்யக் கூடியது. அதாவது படம் பிடி, வீடியோ எடு, மொழி பெயர், செய்தியை அனுப்பு, தேடு, பயண விபரங்கள் போன்ற செய்திகளை நாம் சொல்லி செய்விக்க முடியும். அதே சமயம் சிலர் கைத்தொலைபேசியை வைத்து தவறான படங்களைப் பிடிப்பது போல், சம்பந்தப்பட்டவர்களை அறியாமலேயே படம்பிடிப்பது மிகச் சுலபமானதாகும். சமீபத்தில் பொது இடத்தில் அனுமதி இன்றி, சிலரை Google Glass கொண்டு சில விதமாகப் படம் பிடித்தவர்களை போலீசார் கைது செய்தது.

இதில் என்னென்ன பாகங்கள் எங்கே உள்ளன என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.




முதலில் சாதாரண பிரேமாக உருவாக்கப்பட்ட போதிலும்,இதில் நாம் கிட்டப்பார்வை தூரப்பார்வை என பார்வைக் குறைவு உள்ளவர்களும், மற்றும் sunglass ஐயும் பொருத்தி வைத்துக் கொள்ளலாம். சுலபமாக முன் பக்கத்தை அசைப்பதன் மூலம் அனைத்து வடிவங்களையும் தூரத்தையும் துல்லியமாக பார்க்க,படம் பிடிக்க முடிகிறது. Start Trek இரசிகர்களுக்கு ஒரு அதிசமாக இருந்தாலும், வாகனத்தில் செல்பவர்கள்,ஓட்டுனர்கள் இப்படி பலருக்கும் இது ஒரு சிறந்த உதவிதான். இந்தக் கண்ணாடி உருவாக கருவைக் கொடுத்தது Star Trek என்ற அமெரிக்க சினிமாத் தொடர் தான். விரைவில் Crossbar- nano தொழில் நுட்பம், Google apps போன்றவை இதில் சேர்க்கப்படும்.

OS-android 4.0.4

Lithium Polymer Battery

4430 SoC DualCore

16 GB Flash with 12 GB usable memory

1 GB RAM

MyGlass app.


வாகன ஓட்டுனர்கள்,பெற்றோர்கள்,மருத்துவர்கள் என பலருக்கு உதவினாலும் கூட, கைத்தொலைபேசி, சினிமா, தொலைக்காட்சி, இணையம், சமூக தளங்கள் போன்றவற்றை தவறான வழியில் பாவிப்பதைப் போல், வளர்ந்து வரும் இது போன்ற தொழில் நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தாவிட்டால், அனைவரும் பயன் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

ChromeCast, Crossbar - இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்

ChromeCast மற்றும் Crossbar இரண்டும் சமீபத்தில் அறிமுகமான புதிய தொழில்நுட்ப வசதிகள். இதில் ChromeCast கூகுள் நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதமும், Crossbar கடந்த ஆகஸ்ட் மாதமும் அறிமுகமானது. இரண்டையும் பற்றி இங்கே காண்போம். 

ChromeCast



Google ஜூலை மாதம் அறிமுகப்படுத்திய ChromeCast என்ற சிறிய பென்ட்ரைவ் dongle மூலம் தொலைக்காட்சியில் Netflix, HDTV—movies, TV shows, music, YouTube, Google Play, Chrome மற்றும் ஆடியோ/வீடியோ ஆகியவற்றை சிறிய கணினி, மடிக்கணினி, smartphone திரைகளில் பார்க்காமல் WiFi மூலம் HDMI Port வழியாக இணைத்து பெரிய TV திரையில் காணலாம். The Roku, Apple TV ஐ விட நன்றாகவும், 30/35 டாலரில் கிடைக்கவும் செய்கிறது. அமெரிக்காவில் செயல்படும் ChromeCast விரைவில் மற்றைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள்.

Crossbar Flash Memory - நானோ முறையில் இன்னொரு தொழில்நுட்பம்



Internal Memory எனும் Flash Memory இல் புதிய அறிமுகம் Crossbar Memory ஆகும். வழமைக்கு மாறாக GB இல் இருந்து 1TB வரையான Chip இல் சேமிப்பு, ஆனால் மிகச் சிறியதும், 20 மடங்கு குறைந்த மின்னைப் பயன்படுத்தி, 20 மடங்கு அதி வேகமாகவும், அதே சமயம் 140MB/s வேகமாக எழுதும் சக்தியும்,7 MB/s படிக்கும் சக்தியும் இந்த Crossbar Memory க்கு உள்ளது. இதை Crossbar நிறுவனத்தின் இணை அமைப்பாளரும், மிச்சிக்கன் பல்கலைக்கழக பேராசிரியருமான Wei Lu உருவாக்கி உள்ளார்.

இந்த புதிய200mm2 chip நினைவகம் மூலம் கையடக்க கருவிகளில் 250 மணி நேர HD வீடியோக்களை சேமித்து பார்க்கவும், 250,000 பாடல்களை சேமித்து கேட்கவும் முடியும். NAND based flash ற்கு மாற்றாக ReRAM (resistive random-access memory)- ( RRAM) மூலம் உருவாக்கி தொழில் நுட்பத்தில் புதிதாக கால் பதித்துள்ளது.



DR.Fujio Masuoka வால் உருவாக்கப்பட்ட,NAND Flash Memory (NAND gate (Negated AND or NOT AND) தொழில் நுட்பம், Digital cameras, portable MP3 players, USB (Flash) sticks போன்றவற்றில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. Crossbar தொழில்நுட்பம் இதற்கு மாற்றாக விளங்கக் கூடிய அற்புதமான தொழில்நுட்பம் என்று தொழில்நுட்ப வல்லுனர்களால் நம்பப்படுகிறது.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் "சக்தி" அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

Google Play Movies தற்போது இந்தியாவிலும்

டெக் உலகின் மிகப் பெரிய சந்தை இந்தியா என்பதை கொஞ்சம் தாமதமாகத் தான் கூகுள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. Google Play Books, Nexus 7 போன்றவற்றை போலவே Google Play Movies தற்போது கொஞ்சம் தாமதமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. 



எல்லாமே ஆங்கில திரைப்படங்களாக தான் உள்ளது. ஹாலிவுட்  பட ரசிகர்களுக்கு இது பலனளிக்கும். இவற்றை டவுன்லோட் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் கணினி அல்லது ஆன்ட்ராய்ட் போனில் இணைய இணைப்பின் மூலம் பார்த்துக் கொள்ளலாம். 

படங்களை நீங்கள் வாடகைக்கு வாங்கலாம் அல்லது முழு விலை கொடுத்தும் வாங்கலாம். வாடகை விலை ரூபாய் 80 - இல் இருந்து தொடங்குகிறது. 

படங்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SD மற்றும் HD என இரண்டு Version - களில் படம் கிடைக்கும். SD யின் விலை HD ஐ விட குறைவு. ஆனால் HD வீடியோ தான் அதிக தரமானது என்பது உங்களுக்கே தெரியும். TED என்ற சமீபத்திய ஆங்கில திரைப்படத்தின் விலை கீழே உள்ளது.



தேவையானவை: 

Google Play Movies - இல் படங்களை வாங்கி பார்க்க தேவையானவை 

  • Adobe Flash Player 10.0.22+ 
  • Google Chrome, Firefox 1.1+, Internet Explorer 7.0+, Safari 1.0+ or Opera - இதில் ஏதேனும் ஒரு உலவி
  • 500+ Kbps வேகம் உள்ள இணைய இணைப்பு
  • Ubuntu/Linux பயனர்கள் HAL module இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
தகவல் - Specs Of All
 - பிரபு கிருஷ்ணா

5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?


ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த வசதிகளுள் ஒன்று தான் 10 GB வரையிலான File - களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி. 

10 GB வரை File களை அனுப்பும் வசதி நமக்கு கூகுள் டிரைவ் மூலம் தரப்படுகிறது. கூகுள் டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச Space தரப்பட்டிருக்கும். எனவே இலவசமாக 5 GB வரை அனுப்ப முடியும். 10 GB வரை அனுப்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இலவசமாக அனுப்ப வழி தரும் 5GB யை நாம் பார்ப்போம்.

ஜிமெயிலில் இருந்து அனுப்ப: 

கூகுள் டிரைவ் மூலம் என்றாலும் File - களை நீங்கள் உங்கள் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம். இதற்கு நீங்கள் புதிய Composing Method ஐ உபயோகிக்க வேண்டும்.

புதிய மெயில் Compose செய்யும் போது + Icon மீது கிளிக் செய்தால் Google Drive Icon வரும் அதை கிளிக் செய்து File ஐ Upload செய்திடலாம்.


ஏற்கனவே Upload செய்திருந்த File என்றால் My Drive என்பதில் இருந்து File - ஐ தெரிவு செய்து கொள்ளலாம். 

கூகுள் டிரைவில் இருந்தே அனுப்ப

முதலில் Google Drive தளத்துக்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் Sign in செய்து கொள்ளுங்கள். இப்போது வரும் பக்கத்தில் இடது புறம் உள்ள Upload Icon மீது கிளிக் செய்யுங்கள்.

அதில் Files அல்லது Folder என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஒரு File என்றால் File, நிறைய File என்றால் Folder.

இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு File அல்லது Folder  - ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 5GB க்கு மேல் இருந்தால் Not enough storage என்று வந்து விடும். எனவே 5GB உள்ளதை கொடுத்து விட்டால் சில மணி நேரங்களில் அது Upload ஆகி விடும்.



Upload ஆன பின் குறிப்பிட்ட File அல்லது Folder - ஐ நீங்கள் Drive - இல் காணலாம். அந்த File ஐ Check செய்து விட்டு More என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது Share பகுதியில் நீங்கள் Email As Attachment என்பதை கிளிக் செய்து File - ஐ குறிப்பிட்ட நபருக்கு மின்னஞ்சல் செய்து விடலாம்.

- பிரபு கிருஷ்ணா

Google Image தேடுதலில் வந்துள்ள புதிய மாற்றங்களும் வசதிகளும்


கூகுள் தேடுதல் எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளது, அதே அளவுக்கு பயனுள்ளது Google Images, நமக்கு வேண்டிய படங்கள் முழுவதையும் இணையத்தில் இருந்து தேடித் தரும் இது தற்போது சில சிறிய மாற்றங்களை செய்துள்ளது, அதன் மூலம் நமக்கு புதிய வசதிகளும் கிடைத்துள்ளது. அதைப் பற்றி இன்று பார்ப்போம். 

மாற்றம் 1:

சில மாதங்களுக்கு முன்பு Goolge Images தளத்தில் படங்களை தேடும் போது Search Tools என்னும் வசதி பக்கத்தின் இடது புறம் இருக்கும். இதில் படத்தின் Size, Color, Type போன்ற வசதிகளை நமக்கு தேவையானபடி தெரிவு செய்து கொள்ளலாம். 

இப்போது இந்த வசதி Search க்கு கீழேயே வந்து விட்டது. (காண்க கீழே படம்) 


Search Tools குறித்து அறியாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். 

இதன் மூலம் உங்களுக்கு தேவையான படத்தை சரியான நிறத்தில், அளவில், வகையில், தேட முடியும். இதனால் உங்கள் தேவைக்கேற்ற படத்தை நீங்கள் பெற முடியும். 

மாற்றம் 2: 

இந்த வசதி மிக அருமையானது என்று சொல்லலாம். முன்பெல்லாம் தேவையான படத்தின் மீது கிளிக் செய்தால் அது ஓபன் ஆகும் போது அதன் பின்னணியில் அது எந்த தளத்தின் உள்ளதோ அந்த தளம் வரும். 

இப்போது அப்படி இல்லாமல் கீழே உள்ளது போல வரும். [பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்]



இது Google Images பக்கத்திலேயே ஓபன் ஆகி உள்ளது. இதில் View Page என்பதை கிளிக் செய்தால் படம் பகிரப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்றுவிடும். View Original Image என்பதை கிளிக் செய்தால் படத்தின் முழு அளவும் Open ஆகும். Image Details என்பதை கிளிக் செய்தால் Image குறித்த தகவல்கள் மற்றும் Visually similar images சில புதிய பக்கத்தில் வரும்.

இந்த மூன்றும் மேலே உள்ளதில் படம் எந்த தளத்தில் உள்ளது, என்ன அளவு என்பது சொல்லப்பட்டு உள்ளதை காணலாம். 

இரண்டுக்கும் அடுத்து உள்ள More Sizes என்பது தான் இதில் அருமையான வசதி. அதை கிளிக் செய்தால் இப்போது காட்டப்படும் படத்தையே வெவ்வேறு அளவுகளில் இணையத்தில் இருந்து தேடி உங்களுக்கு காட்டும். இதனால் உங்களுக்கு தேவையான படம் கிடைத்த பின், அது உங்களுக்கு வேறு அளவில் வேண்டுமானால் இதை கிளிக் செய்து கிடைக்கிறதா என்று தேடலாம். 

அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும். 


படங்கள் இரண்டும் வெவ்வேறு அளவிலானவை என்பது படத்தின் மேலேயே இருப்பதை காணலாம்.

புதிய வசதிகளை பயன்படுத்தி பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.

-பிரபு கிருஷ்ணா

Google Books - ஐ டவுன்லோட் செய்வது எப்படி?


Google வழங்கும் பயனுள்ள வசதிகளில் ஒன்று Books. இது இணையத்தில் பல புத்தகங்களை நமக்கு படிக்கும் வாய்ப்பை தருகிறது. இதில் இலவசமாக மற்றும் விலைக்கு என பல புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் இவற்றை நாம் ஏதேனும் ஒரு ப்ரௌசெரை பயன்படுத்தி மட்டுமே படிக்க முடியும். அவற்றை எப்படி pdf ஆக தரவிறக்கம் செய்வது என்று இன்று பார்ப்போம். 

கவனிக்க இதன் மூலம் கட்டணம் செலுத்தி வாங்கக்கூடிய புத்தகங்களை உங்களால் இலவசமாக டவுன்லோட் செய்ய முடியாது. இலவச புத்தகங்களை மற்றும் நீங்கள் வாங்கி உள்ள புத்தகங்களை டவுன்லோட் செய்யவே இது பயன்படும். 

1. முதலில் Google Books Downloader என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

இன்ஸ்டால் செய்யும் போது இறுதியில் கீழே உள்ளது போல ஒரு பகுதி வரும். அப்போது Decline என்பதை கொடுத்து விடுங்கள், இதற்கு அடுத்தும் இதே போலத்தான். இரண்டு முறை Decline கொடுத்த பின் Installation முடிந்து விடும். 


3. இப்போது Google Books இல் நீங்கள் வாங்கிய புத்தகம் அல்லது இலவச புத்தகத்த்தின் முகவரியை இதில் கொடுக்க வேண்டும். உதாரணம் A Dictionary of Tamil Proverbs



இதில் என்ன Format மற்றும் Resolution போன்றவற்றை தெரிவு செய்து விட்டு, start என்பதை கிளிக் செய்யுங்கள். 


மேலே உள்ளது போல டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும். 

 - பிரபு கிருஷ்ணா

"Save to Google Drive" கூகுள் வழங்கும் உதவிகரமான Chrome Extension


கூகுள் டிரைவ் பயனர்கள் அனைவரும் இணையத்தில் கிடைக்கும் File - களை சேமிக்க இதுவரை அவற்றை டவுன்லோட் செய்து அதன் பின் அதை Google Drive க்கு Upload செய்ய வேண்டி இருந்தது. Chrome பயனர்களுக்கு கூகுள் இப்போது நேரடியாக File - களை Save செய்யும் வசதி தந்துள்ளது. 

Save to Google Drive என்ற அந்த Chrome Extension மூலமாக நீங்கள் எளிதாக File - களை உங்கள் Drive கணக்கில் சேர்க்க முடியும். இதில் Google Drive - இல் Save செய்ய முடியும் File வகைகள் கீழே உள்ளன. 
  • HTML Pages
  • HTML5 audio and video
  • Images
  • Uploaded Documents [PPT, PDF, Excel and etc]
File - களை Drive - இல் சேமிக்க குறிப்பிட்ட File மீது Right Click செய்து Save Image/File To Google Drive என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


File ஒன்றை save செய்யும் போது அதை Rename செய்யும் வழியும் உள்ளது. 

இதை உங்கள் Chrome உலவியில் பயன்படுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்

HTML Page - களை Save செய்யும் அதை என்ன Format - இல் save செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும். Default ஆக முழு பக்கத்தையும் PNG Image ஆக சேமிக்கும். இதை மாற்ற Crunch Icon >> Settings >> Extensions சென்று Save To Google Drive Extension - இல் Options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும். 



இதில் உங்களுக்கு தேவையான Format தெரிவு செய்தால் போதும். 

- பிரபு கிருஷ்ணா

கூகுள் சேவைகளின் உதவிப் பக்கங்கள்


இணையத்தில் உள்ள ஒவ்வொருவருமே ஏதோ ஒரு கூகுள் சேவையை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள்.இதில் நாம் பயன்படுத்தும் ஒன்றில் நமக்கு சந்தேகங்களும், பிரச்சினைகளும் வரும் போது அவற்றுக்கு தீர்வை  தர கூகுள் உதவி பக்கங்களை தந்துள்ளது. Help Forums என்ற பெயரில் இயங்கும் இவை, ஒவ்வொரு கூகுள் சேவைக்கும் தனித்தனியே உள்ளன. 

உங்களுக்கு வரும் சந்தேகம், பிரச்சினை போன்றவற்றை அந்த பக்கங்களில் கேட்டால் அதற்கான தீர்வை பலரிடம் இருந்து பெறலாம். பெரும்பாலும் Top Contributor - கள் தரும் தீர்வுகள் பயன்படும். 

சில சமயங்களில் வேறு யாராவது உங்களைப் போன்றே பிரச்சினையை எதிர்கொண்டு, இவற்றில் அதற்கான தீர்வை பெற்று இருந்தால் அதையும் நீங்கள் பார்க்கலாம். 

ஒவ்வொரு சேவைக்கும் உள்ள குறிப்பிட்ட உதவி பக்கம் கீழே உள்ளது. அதன் பெயரிலேயே அது எதற்கானது என்பது உங்களுக்கு தெரிந்து விடும். பெரும்பாலும் கேள்வி/பதில்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். 

நன்றி - Tech Hints
 - பிரபு கிருஷ்ணா

கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?

இன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் மேப் என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம். நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கொண்டுள்ள இதில், பெரும்பாலான கிராமங்களை குறித்த தகவல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களை, ஊர்களை எப்படி கூகுள் மேப்பில் சேர்ப்பது என்று பார்ப்போம். 

உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்

கூகுளின் முகப்பு பக்கம் முக்கிய நாட்களுக்கு ஏற்றபடி மாறுவதை நாம் பார்த்திருப்போம், இதை விட ஒரு சூப்பர் மேட்டரை கூகுள் நமக்காக செய்கிறது.நீங்கள் இதை கவனிக்க மறந்திருக்கலாம்....நம் பிறந்த நாளுக்கு ஏற்றபடி கூகுள் தன் முகப்பு (Home Page) பக்கத்தை மாற்றி நம்முடன் சேர்ந்து நம் பிறந்த நாளை கொண்டாடுகிறது



கூகுள் இதை எப்படி செய்கிறது ?

நீங்கள் உங்கள் கூகிள் அக்கவுன்ட் டில் Log inசெய்யும் போது அது உங்கள் பிறந்தநாளை செக் செய்கிறது.அது அன்றைய தினத்துடன் மேட்ச் ஆகினால் உங்கள் கூகுள் ஒரு புதிய டூடுளை (doodle)(கூகிள் முகப்பு படம்) உங்கள் முகப்பு பக்கத்தில் காட்டி உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.

கேக் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் உங்களுக்கு மட்டும் காட்டப்படும் இந்த பிரத்யேக முகப்பு பக்கத்தின் அருகே நீங்கள் உங்கள் மவுஸின் கர்சரை கொண்டு சென்றால்."Happy birthday..............(உங்கள் பெயர்)" என்று எழுதி காட்டும்.அதை நீங்கள் க்ளிக் செய்தால் உங்கள் கூகிள் பிளஸ் Profile திறக்கப்படும்.


இந்த விசயத்தை கூகிள் எப்போதிருந்து செய்கிறது?


2010 ம் வருடத்திலிருந்து இந்த "பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்' கூகிளின் முகப்பு பக்கம் நடைமுறையில் உள்ளது இது ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் முகப்பு பக்கத்தில் கேக் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்கிறது (பார்க்க படம்).



சில மாதங்களுக்கு முன் கூகுள் இந்த டூடிலை(Doodle) மறு வடிவம் செய்திருக்கிறது.(இதுல 6 கேக் இருக்கு!!!).


கூகிள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல:

1.கூகிளில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கனும்

2.கூகிள் பிளஸ் -ல் உங்கள் பிறந்த நாளை (Date of birth) கொடுத்திருக்க வேண்டும்.

3.உங்க பிறந்த நாள் அன்று நீங்கள் அக்க்வுன்டில் லாக் இன் ஆகியிருக்க வேண்டும்.

இதெல்லாம் நீங்க செய்திருந்தீர்கள் என்றால் கூகுள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.

Google நிறுவனத்தினர் எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ???
இணைய உலகின் தல கூகுள் தான்.தல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல.


About The Author: 

பதிவை எழுதிய விஜயன் துரைராஜ் கடற்கரை என்னும் வலைப்பூவில் தொழில்நுட்பம், கட்டுரை, கவிதை என பல எழுதி வருகிறார். கற்போம் தளத்திற்கு தன் தொழில்நுட்ப பதிவுகளையும் தருகிறார்.


நீங்களும் கெஸ்ட் போஸ்ட் எழுத - கற்போமில் பதிவு எழுத விருப்பமா? 

Google Products and Services - இதெல்லாம் கூகுள் ஏரியா


கூகுள் இன்று இணையத்தின் தூண் என்றால் அது மிகையாகாது. இணையத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது வேர் பரப்பி நிற்கும் மிகப் பெரிய ஆலமரம் தான் அது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜிமெயில், கூகுள் பிளஸ், பிளாக்கர், அட்சென்ஸ் என்ற பலவற்றை பற்றி தெரியும். இன்னும் தெரியாத பல உள்ளன. என்னென்ன என்று பார்ப்போம். 

Google search  


கூகுள் தனது கடையை விரித்த போது விற்ற முதல் பொருள் இதுதான். இன்றுவரை இதில் அது தான் கிங் என்றும் நிரூபித்து வருகிறது. சில சமயங்களில் Google.com, google.co.in என்று பார்த்து இருப்பீர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டொமைனில் இயங்கி வரும் இது மொத்தம் 198 டொமைன்களில் உள்ளது. 

வெறும் சர்ச் என்ற வார்த்தையோடு நின்று விடாமல் இதில் பல வசதிகளை வழங்குவது தான் இதன் சிறப்பு. 

  • Accessible Search - பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு
  • Google Alerts  - நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை தேட விரும்பினால், அதன் தற்போதைய தேடுதல் முடிவுகளை மின்னஞ்சலில் பெற. 
  • Blog search - வலைப்பூக்களில் தேடி தரும். 
  • Google Books - புத்தகங்களை தேட. 
  • Google Custom Search - குறிப்பிட்ட தளங்களில் இருந்து தேடுதல் செய்ய. 
  • Google Image Search - படங்களை தேட
  • Google News  - செய்திகளை தேட/ அறிந்து கொள்ள. 
  • Knowledge Graph   - பல தேடுதல்களில் முக்கிய தகவல்களை முகப்பிலேயே காட்டும் வசதி. 
  • Google Doodle - பலரை, பல விசயங்களை நினைவு கூறும் கூகுள் நினைவகம். 
இது மட்டும் இன்றி Experimental Search, Google Finance, Google Groups, Hotpot, Language Tools, Movies, Google News archive, Google Patent Search , Google Schemer, Google Scholar, Google Shopping, SMS, Suggest, Google Video (Closed), Voice Local Search , Web History போன்ற அனைத்தும் இதன் சர்ச் டூல்ஸ். 

Advertising


விளம்பரங்கள் தான் கூகுள்க்கு பிரியமான ஒன்று. அதற்காக நிறைய உழைக்கிறது. ;-) 

  • AdMob - மொபைல் வழி விளம்பரங்கள். 
  • Google AdSense - தளத்துக்கு சம்பந்தமான விளம்பரங்களினை காட்டும் தயாரிப்பு. 
  • Google AdWords - கூகுள் மூலம் விளம்பரம் செய்ய. 
  • Adwords Express - லோக்கல் AdWords என்று சொல்லப்படும் இது பெரும்பாலும் இடம் சார்ந்த விளம்பரங்களுக்கு. (ஹோட்டல், தியேட்டர் போன்று)
  • DoubleClick - Publisher, Advertiser, User என எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வசதி. 
இதில் DoubleClick for Publishers by Google, Google Grants, TV Ads, Google Website Optimizer, Meebo போன்றவையும் அடக்கம். 

Communication and Publishing


இங்கே தான் நாம பயன்படுத்தும் நிறைய வரும். 

  • Gmail - கூகுள் வழங்கும் மின்னஞ்சல் சேவை. 
  • FeedBurner - News Feed உருவாக்க உதவும் வசதி. 
  • YouTube - காணொளிகளை காண. 
  • Blogger - கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை. 
  • Google Docs - Word, Excel, Presentation போன்றவற்றை ஆன்லைன் மூலம் செய்ய. 
  • Google Drive - ஆன்லைன் storage வசதி. 
  • Google+ - கூகுளின் சமூக வலைத்தளம். 
  • Orkut  - காணாமல் போன சமூக வலைத்தளம். 
  • Google Buzz - தமிழர்களின் விருப்பான இடமாக இருந்தது. இப்போது இல்லை
  • Picasa Web Albums - படங்களை பகிர உதவும் தளம். 
  • Google Sites - குருந்தளம் என்று சொல்லலாம். 
  • SMS Channels  -பல வகைகளில் குறுஞ்செய்திகளை பெற உதவும் தளம். 
  • Google Apps  - சொந்த டொமைன் மூலம் கூகுளின் பல வசதிகளை பயன்படுத்தும் வசதி. 
இதில் Google 3D Warehouse, Google Bookmarks, Google Business Solutions, Google Calendar, Google Friend Connect (Closed), iGoogle (Closed), Marratech e-Meeting, Panoramio, Picnik (Closed), Google profile, Google Reader, Speak To Tweet, Google Voice (USA), Web Fonts போன்றவையும் உள்ளன.

Development 


  • Webmaster Tools - உங்கள் Website கூகுளில் எப்படி உள்ளது என்பது பற்றிய தகவல்களுக்கு. 
  • Google Page speed - உங்கள் தளம் லோட் ஆகும் நேரம், மார்க், மற்றும் பல தகவல்களை தரும். 
இதில் AngularJS, Google App Engine, Google Closure Tools, Google Code, Dart, Google Go, OpenSocial, Google Swiffy, Google Web Toolkit போன்றவையும் உள்ளன. 

Map


கீழே உள்ள அனைத்தும் Map என்ற ஒன்றுக்காக உள்ளவை.
  • Google Maps - இடங்களை தேட. 
  • Google Maps Coordinate 
  • Google Mars
  • Google Moon
  • Google Sky 
  • Google Transit 
  • Google BodyG
  • Google Map Maker 
  • Google Building Maker

Statistics 


புள்ளியியல் என்று சொல்வோமா, தகவல்களை திரட்டி, அதை அலசி தருவது. அந்த வசதிகள் தான் கீழே உள்ளவை. 
  • Google Analytics - தளங்களின் Traffic தகவல்களை சில உபரிகளுடன் சேர்த்து தரும். 
இதில் Correlate, Google Fusion Tables, Google Insights for Search, Google Refine, Trendalyzer, Google Trends, Zeitgeist. 

Operating systems


ஆம் இயங்கு தளங்களிலும் கால் பதித்துள்ளது கூகுள். 

  • Android - Samrtphone Operating System
  • Google Chrome OS - லினக்சை அடிப்படையாக கொண்டது. முழுக்க முழுக்க இணையம் சார்ந்து இயங்கும். 
இதில் Google TV யும் உள்ளடக்கம். 

Software / Appications

இவை கணினிகளில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டவை. 
  • AdWords Editor 
  • Google Chrome 
  • Google Earth 
  • Gmail Notifier
  • IME
  • Google Japanese Input 
  • Picasa 
  • Picasa Web Albums Uploader
  • Google Pinyin
  • Quick Search Box
  • Wireless access 
  • SketchUp
  • Google Toolbar
  • Visigami

Mobile applications


மேலே உள்ள பல வசதிகளை மொபைல் மூலமும் பயன்ப்டுத்தம் முடியும். Youtube, Gmail, Calender,  என பல. 

Hardware

இவை கூகுள் உருவாக்கி இருக்கும் சாதனங்கள்

  • Motorola Mobility - Motorola நிறுவனம். 
  • Nexus One - கூகுள் போன்
  • Nexus S -  கூகுள் போன்
  • Galaxy Nexus -  கூகுள் போன்
  • Project Glass - ஒரு கண்ணாடி இணையத்தோடு நம்மை ஒருங்கிணைக்க
  • Nexus 7 - Tablet Computer
Google Mini, Google Search Appliance, Nexus Q போன்றவையும் இதில் உள்ளடக்கம். 

Services


இதில் Google Crisis Response, Google Fiber, Google Public DNS போன்றவை இருக்கின்றன. 

இதில் பலவற்றில் கூகுள் தோல்வி அடைந்து அவற்றின் சேவைகளை நிறுத்தி இருக்கிறது. Google Buzz, Friend connect போன்றவை போல பல. அவற்றை இன்னொரு பதிவில் காண்போம். 

ஆனால் கூகுளிடம் இருந்து நான் கற்றுகொண்ட ஒன்று, தோல்வி தான் வெற்றிக்கு புதிய பாதையை தரும். 

- பிரபு கிருஷ்ணா 

உங்கள் கூகுள் கணக்கின் தகவல்களை டவுன்லோட் செய்வது எப்படி?

கிட்டத்தட்ட இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார். சர்ச், மெயில், சோசியல் நெட்வொர்க் என்று பட்டியல் நீளும் இதில் கட்டாயம் ஒன்றை பயன்படுத்துகிறோம். இதில் சிலவற்றில் நம் தகவல்களை  நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். எப்படி என்று பார்ப்போம். 

2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி?

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது கூகுள் தளம் அதை சிறப்பிக்கும் வண்ணம் தினமும் சில Doodles-களை வெளியிட்டது. அதில் சில நாம் விளையாடும் படியும்  இருந்தது. நிறைய பேருக்கு பிடித்து இருந்த அவற்றை மறுபடியும் விளையாடுவது எப்படி என்று பார்ப்போம்.

இரண்டு Chrome Browser-களை Sync செய்வது எப்படி?

இரண்டு இடங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது நமக்கு ஒரு பிரச்சினை வருவது உண்டு. ஒன்றில் பயன்படுத்திய Bookmarks, History போன்றவற்றைஇன்னொன்றிலும் பயன்படுத்த முடியாது.  அலுவலகத்திலும், வீட்டிலும் Chrome ப்ரௌசரை பயன்படுத்தினால்  எப்படி இரண்டையும் Sync செய்வது என்று பார்ப்போம்.

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 2

நேற்றைய பதிவில் Google Easter Eggs பற்றி சொல்லி இருந்தேன். பதிவின் நீளம் கருதி பத்து Easter Egg பற்றி சொல்லி இருந்தேன். இன்றைய பதிவில் இன்னும் சிலவற்றை காண்போம்.

Easter Egg என்றால் என்ன?

"ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன."
- விக்கிபீடியா

முதல் பத்தை இங்கே படிக்கலாம் -

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1

11. jason isaacs


jason isaacs ஐ ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு தெரிந்து இருக்கும். அந்த படங்களின் வில்லனான இவர் பெயரை கூகுளில் தேடினால் கீழே உள்ளது போல வரும்.

12. recursion


எப்போதும் கூகுளில் தவறாக தேடினால் மட்டுமே Did you mean என்று கேட்கும். ஆனால் இதை தேடினால் இதே வார்த்தையை காட்டி Did you mean என்று கேட்கும். இதன் தமிழ் பொருள் "மறுநிகழ்வு". 

13. do a barrel roll


உங்கள் தேடுதல் முடிவை ஒரு சுற்று சுற்றி விட்டு தரும்.

14. anagram


இதை தேடினால் கூகுள் Did You Mean  "nag a ram" என்று காட்டும். anagram என்பதன் பொருள் "ஒரு சொல்லின் எழுத்துக்களில் இருந்து அமைக்கப்பட்ட இன்னொரு சொல்"



15. "world cup", "world cup usa vs england", or "world cup brazil"  - இப்போது இல்லை


இவற்றை 2010 உலகக் கோப்பையின் போது நீங்கள் தேடி இருந்தால். தேடுதல் பக்கத்தின் கீழே Goooooooooogle என்பதற்கு பதில் Gooooooooooal என்று இருந்திருக்கும்.



16. Games on Google


என்னைப் போன்று வெகு சிலருக்கு மட்டுமே கணினியில் விளையாட்டு விளையாட பிடிக்காது. ஆனால் பெரும்பாலோனோருக்கு பிடிக்கும் இதையும் விட்டு வைக்கவில்லை கூகுள். google.com/pacman என்ற முகவரியில் Pacman Game எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். 


அதே போல Angry Birds ரசிகர்களுக்கு அதை Chrome-இல் விளையாடும் வசதியும் உள்ளது. Angry Birds

கீழே உள்ள இரண்டும் வேறு தளத்தில் Chrome Experiment ஆக செயல்படும் Project-கள்

17. Google floating sphere


இது வேறு ஒரு Project தளத்தில் செயல்படுகிறது. உங்கள் படங்களை தேட இது பயன்படுகிறது. தேடுதலும், அதன் முடிவுகளும் ப்லோட்டிங் ஆவது அருமையாக இருக்கும். 


18. Google Gravity falling


கூகுள் முகப்பு பக்கம் போல இருக்கும் இந்த பக்கத்திற்கு நீங்கள் சென்றால் தேடுதல் பக்கம் கீழே சரிவதை காணலாம். எதையேனும் தேடினாலும் புவியீர்ப்பால் அவை கீழே விழுவது போல இருக்கும்.


- பிரபு கிருஷ்ணா

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1


கூகுள் தனது தேடுதலில் பல புதிய விசயங்களை செய்து வருவது எல்லோருக்கும் தெரியும். அது மட்டும் இல்லாமல் தேடும் போது கொஞ்சம் காமெடி ஆக இருக்கும் விசயங்களையும் செய்து வருகிறது.இது போன்று செய்வதை கூகுள் "Easter Eggs" என்று அழைக்கிறது.  சும்மா விளையாட்டு என்று நாம் சொல்வோமே அது போல. அவற்றை பற்றி இன்று பார்ப்போம். 

இவற்றில் பெரும்பாலானவை Google.com - இல் மட்டுமே வேலை செய்யும்.


1.conway's game of life


இது மிக சமீபத்திய உருவாக்கம். Conway's Game of Life என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதை கூகுளில் தேடும் போது வலது பக்கம் கட்டம் கட்டமாக அனிமேஷன் ஆவதை காணலாம். 




2. zerg rush


இதை தேடும் போது உங்கள் தேடுதல்களை வந்து விழும் பூஜ்ஜியங்கள் தின்று கொண்டிருக்கும். எல்லா லிங்க்களையும் தின்ற பிறகு "GG" என்று வந்து நிற்கும். இதன் பொருள் "Good Game"


3. qingming festival


தேடுதலின் வலது புறம் அழகிய மரத்தை வளர்க்கிறது இது.


4. binary


உங்கள் தேடுதல் முடிவுகளை எவ்வளவு, எத்தனை நொடிகளில் என்று Binary-யில் காட்டும். [வெறும் 1,0 ஆக மட்டும் காட்டும்]


5. kerning


தேடுதலில் கிடைக்கும் kerning என்ற வார்த்தையின் எழுத்துக்களின்  இடைவெளி மட்டும் அதிகமாக இருக்கும்.


6. kwanzaa - இப்போது இல்லை


உங்கள் தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் ஏழு மெழுகுவர்த்திகள் கொண்ட தொடர் வரிசையாக இருக்கும். இது பண்டிகை காலங்களில் அமெரிக்காவில் செய்யப்படுவது.



7. santa claus - இப்போது இல்லை


கிருஸ்துமஸ் நேரத்தில் மட்டும் இது வரும் என்று நினைக்கிறேன். தேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் கிருஸ்துமஸ் விளக்குகள் இருக்கும். 




8. hanukkah - இப்போது இல்லை


தேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் Star போன்ற லைட்கள் தொடராக இருக்கும். 




9. let it snow - இப்போது இல்லை


2011 டிசம்பரில் இருந்து 2012 ஜனவரி வரை இருந்தது. இதை கூகுளில் தேடினால் உங்கள் தேடுதல் முடிவுகள் முழுவதும் பனியால் மூடப்படுவது போல் மாறிவிடும்.


10. tilt அல்லது askew


இதை இரண்டையும் தேடும் போது உங்கள் தேடுதல் முடிவில் வலது புறமானது இடது புறத்தை விட உயரம் குறைவாக ஒரு மாதிரி சாய்ந்து இருக்கும். 


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். மற்றவற்றை நாளைய பதிவில் காண்போம்.

- பிரபு கிருஷ்ணா