பணம் கொடுத்து Google Adsense Account வாங்கலாமா ? | கற்போம்

பணம் கொடுத்து Google Adsense Account வாங்கலாமா ?

 கடந்த  Adsense பதிவு பலரது சந்தேகங்களை தீர்த்து இருக்கும். ஆனால் இன்னும் சில சந்தேகம் சிலருக்கு உள்ளது. அதாவது Adsense Account ஒன்றை பணம் கொடுத்து வாங்கலாமா என்பது அது. அது பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

முதலில் நேரடியாக பதிலைக் கூறி விடுகிறேன். கண்டிப்பாக Adsense Account பணம் கொடுத்து வாங்கக் கூடாது. அது முற்றிலும் தவறு.

உங்களுக்கு தகுதி இருந்தால் கூகிள் தந்துவிட்டுப் போகிறது. அதை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்.

நானும் கூட ஆரம்பத்தில் பத்து முறை Apply செய்தேன் அதன் பின்னர்தான் எனக்கு கிட்டியது.


உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு காரணம்  நான் கடந்த Adsense பதிவுகளில் கூறியது போல மொழி, கால அளவு, அத்துடன் உங்கள் பதிவின் தரம் என்பதை பொறுத்து அமையலாம்.


அப்படி மீறி நீங்கள் வாங்கி பயன்படுத்தினால், அதை கூகிள் கண்டுபிடித்தால் கண்டிப்பாக உங்கள் அக்கௌன்ட் முடக்கப்படும். அதன் பின்னர் உங்கள் ஈமெயில்க்கு நீங்கள் மறுபடி அக்கௌன்ட் பெறுவது என்பது குதிரைக்கொம்பாகி விடும்.

என்னுடைய  கேள்வி:
இன்னொரு  விஷயம் ஒரு ஈமெயில் ID க்கு நீங்கள் வாங்கிவிட்டு மறுமுறை திரும்பவும் மாற்றம் செய்ய முடியாது. எனவே உங்கள் பெயர், முகவரி போன்றவற்றை மிகத் தெளிவாக கொடுக்க வேண்டும். அவை சரியானபடி இருத்தலும் அவசியம். குறிப்பாக உங்கள் பெயர் உண்மை பெயராக மட்டும் இருக்கட்டும். உங்கள் பெயரில் பேங்க் அக்கௌன்ட் இருப்பின் அது போல கொடுக்க வேண்டும். 10$ க்கு அதிகமாக சேர்த்த பின் இதை மாற்ற முடியும். ஆனால் அப்போதும் சரியான பெயரை தரவும். 


அதே போல உங்கள் ஒரு ஈமெயில் ID க்கு Adsense Account Approval வாங்கிவிட்டு மற்றொரு ஈமெயில் ID க்கும் வாங்கக் கூடாது. இதை பெரும்பாலும் கூகிள் Reject செய்து விடும். இந்த விபரம் தெரியாமல் நான் முயற்சித்து இருக்கிறேன். ஆனால் நாம் ஒரு தளத்துக்கு Approve வாங்கிவிட்டால் அதை எத்தனை தளத்துக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது கடந்த பதிவில் நான் சொல்லி உள்ளேன்.

31 comments

தமிழ்மணத்தில் யாரேனும் இணைக்கவும்.

Reply

அட்சென்ஸ் பெயரும் BANK ACCOUNT NAME ஒரே மாதிரி இருந்தா தான் அட்சென்ஸ் வாங்க முடியுமா......

Reply

@ stalin

அப்படிதான் என்று கட்டாயம் இல்லை. உங்களுக்கு காசோலை வரும்போது நீங்கள் பதிவு செய்த பெயர் போட்டுதான் வரும். எனவே ஆரம்பத்திலேயே இதை சரியாக செய்ய வேண்டும்.

Reply

பயனுள்ள தகவல்தான் !

Reply

வணக்கம் மச்சி,
கமர்சியல் பதிவர்கள் மொக்கைப் பதிவர்கள் தளத்தில் வடை, பஜ்ஜி கேட்பது போல
உங்ககிட்ட லப்டாப்,
மவுஸ்,
கீபோர்ட் இப்படியேதாச்சும் கேட்டுக் கும்மியடிக்கலாமா?;-))))))))

நான் படிச்சிட்டு வாரேன்.

Reply

@ நிரூபன்

கேட்ட அத்தனையும் கூகிள் இமேஜ் தேடுதளத்தில் இருந்து எடுத்துத்தரப்படும் பரவாயில்லையா....

Reply

அட்சென்ஸ் பற்றிய அருமையான விளக்கப் பகிர்விற்கு நன்றி..

Reply

தமிழக காங்கிரஸ்க்கு நன்றி. நீங்கள் இவ்விடயத்தில் எங்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் எல்லாம் நாசமாயிருக்கும்.#stopdeathpenalty//

அவ்....இது டைம்மிங் பஞ்ச் ஆக இருக்கே.

Reply

@ Prabu Krishna (பலே பிரபு) said...

கேட்ட அத்தனையும் கூகிள் இமேஜ் தேடுதளத்தில் இருந்து எடுத்துத்தரப்படும் பரவாயில்லையா.//

எனக்கு எப்பவுமே...ரியல் பொருட்கள் தான் வேண்டும்,

Reply

@ நிரூபன்

ரியலா இமேஜ் தரப்படும்.

Reply

ஆஹா இங்கே நண்பர்கள் இருவரும் டெக்னிக்கல் கும்மி அடித்துக்கொண்டிருக்கிறீர்களா இதோ நானும் வாரேன் ஓட்டு போட்டு விட்டு

Reply

ஆஹா ஆட்சென்ஸ் பற்றி அருமையான பதிவு.... உங்கள் ஆங்கில பதிவுக்கும் வருகிறேன்... புரிஞ்ச மாறி பீட்ட்ர் உடுவேன் கண்டுக்காதிங்கோ...ஹி ஹி

Reply

மன்னிக்கவும் நண்பரே... உங்களது ஆங்கில பதிவில் கருத்துபெட்டியில் வோர்டு வெரிஃபிகேசன் பிராப்ளமாக அமர்ந்து கருத்துக்களை அள்ளிக்கொட்ட முடியாமல் போகிறது....

Reply

@ மாயஉலகம்

வேர்ட் Verification இப்போது சரி செய்து விட்டேன்.

Reply

அருமையான தகவல்களை அள்ளித் தரும் பிரபுவிற்கு வாழ்த்துக்கள்.

Reply

ஆங்கில பதிவின் ஆட்சென்ஸ் மெயில் ஐடியை தமிழ் பதிவுக்கு கொடுத்தால் ஆட்சென்ஸ் கிடைக்கும் ஆனால் அங்கே விளம்பரங்கள் வெளியே தெரியாது

page impression க்கு மாத்திரம் பணம் கிடைக்கும் ஆனால் இது எந்தவிதத்தில் சட்டபூர்வமானது எனத்தெரியாது

Reply
This comment has been removed by a blog administrator.

@ Anonymous said...
//
உங்களுடைய அட்சையின் தொடர்பான செய்திகளை வாசிப்பதில் நானும் ஒருவன் நல்ல முயற்சி ஆனால் நான் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் குறிப்பிட்டது போன்று நான் அடசையின் கணக்கு ஒன்று வாங்கி அதன் மூலம் ஐந்து மாதங்களாக பணம் பெற்றுக் கொண்டிருக்கிறேன். எநதப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது. ஆனால் கொஞ்சம் கண்குளிச்சிரியான சினிமா படங்கள் போட்ட மாத்திரம் உரிய தளம்கள் தடை செய்யப்படுகிறது.
அதற்கு என்ன காரணம்.

அதாவது செக்ஸி போட்டோ கொஞ்சம் கூடியது போட்டால் அதற்கு அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் ஆனால் இந்த விலாசத்திற்கு போய் பாருங்கள் இங்கே எவ்வாறு இருக்கு அதனை ஏன் தடை செய்யவில்லை?

http://#######.com/news/2011-08-30-4349#comments
இந்த விலாசத்திற்குப் பாருங்கள் இதனை எந்த ஜனநாயகத்தி் சேர்த்துக் கொள்ளவது. இதற்கு கண்டிப்பாக பதில் தரவும்.//


அட்சென்ஸ் மூலம் பணம் வாங்கலாம் நண்பரே. ஆனால் தமிழ் தளம் எனும்போது எப்போதடா வந்து கூகுள் தடை செய்யும் என்ற எண்ணத்துடனேயே நீங்கள் செயல்பட வேண்டி இருக்கும்.

ஒரு வேலை நீங்கள் அதிகமாக சம்பாதித்த பின் தடை செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் குறிபிட்டுள்ள தளத்தில் அட்சென்ஸ் பற்றிய எதையும் நான் பார்க்கவில்லை. உங்கள் கமெண்ட் Delete செய்யப்பட்டு உள்ளது. ஆனால் உங்கள் கருத்தை அந்த தள Link தவிர்த்து நான் காபி செய்து தெரிவுபடுத்தி உள்ளேன்.

Reply

நல்ல தகவல்கள்!பலே பிரபு!

Reply

Its a fine thin line when google says about pornography in its Terms of Service. Its'nt fully defined. Google decides on its own without being explicit as far as nudity and pornography are concerned. The onus is on the adsense account holder to be within the limits. There is no use in being sorry after the account is gone. So, stay well clear off the line. Read more about other's experiences in webmaster forums. You will have a better idea then, rather than playing a guessing game.

Reply

For those who think that an adsense account can be bought and used: Yes, some times they do work and there are some who have even got payments. But most of the times (99%), google disables them before the first payment threshold.

Fear Google, the internet almighty. If you want to take risk, its upto you.

Treat publishing similar to an offline brick and mortar business. Believe me, you can not only make money but be rich also. This is not a click click click game. Its a business. Treat it that way.

Reply

//கேட்ட அத்தனையும் கூகிள் இமேஜ் தேடுதளத்தில் இருந்து எடுத்துத்தரப்படும் பரவாயில்லையா....// .

ஹாஹா

Reply

இது குறித்து வெகு நாட்களாக எனக்கு சந்தேகம் இருந்தது
மிகத் தெளிவாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி

Reply

மாப்ள விஷயத்த சூப்பர விளக்கப்படுத்தி இருக்கீங்க...கொஞ்ச நாளா உங்க பதிவுகள் மிஸ் பண்ணிப்புட்டேன்
கோசிக்காதீங்கய்யா

Reply

கடந்த பதிவில் பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் சகோ!

//எப்போதடா வந்து கூகுள் தடை செய்யும் என்ற எண்ணத்துடனேயே நீங்கள் செயல்பட வேண்டி இருக்கும். //

இது தான் உண்மை! பகிர்வுக்கு நன்றி சகோ!

Reply

நான் வாங்கிக்கொடுக்கும் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. நான் வழங்கும் அக்கவுண்ட் யார் கேட்கிறார்களோ அவர்களுக்காகவே நான் அக்கவுணட் உருவாக்கி வாங்கித்தருகிறேன். அதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. வேறு ஒருவருடைய அக்கவுண்டை அவர்களுக்கு வழங்குவதில்லை.
உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

Reply

@ sheik

நீங்கள் செய்வதை சரி என்று நிரூபியுங்கள் நண்பரே. என்ன வழிகளை பின்பற்றி அக்கௌன்ட் வாங்குகிறீர்கள், கூகுள் அதை ஒப்புக் கொள்ளுமா என எல்லாவற்றையும் கூறலாமே...

Reply

நண்பரே உங்கள் முழுபெயர் (பேங்க் அக்கவுண்டில் உள்ளது போல) ஈமெயில் ஐடி, முழு முகவரி எனக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கு ஆட்சென்ஸ் அக்கவுண்ட் உங்களுக்கு வாங்கித்தருகிறேன். உங்கள் பிளாக்கில் நான் வாங்கி தரும் ஆட்சென்ஸ் மூலமாக அதிகபட்சம் 2 மாதத்தில் 100 டாலர் உங்களுக்கு வாங்குவதற்கு நான் வழி செய்து தருகிறேன். அப்புறமாவது நான் சொல்வதை நம்புவீர்களா?
எனது ஈமெயில் gingeeindian@gmail.com

Reply

@ Sheik

உங்கள் அக்கறைக்கு நன்றி நண்பரே. மறுபடி மறுபடி இதைக் கூறுவதால் மட்டும் இது சரியானது ஆகி விடாது. நான் கடந்த பின்னூட்டதில் கூறியுள்ளது போல நீங்கள் எப்படி Adsense வாங்குகிறீர்கள் என்பதை எல்லாம் கூறவே இல்லை. அதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள்.அத்தோடு எனக்கு Adsense Account ஏற்கனவே உள்ளது. தமிழ் தளத்துக்கு என்ன மாற்றம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். எனவே இதற்கு மேல் இந்த விவாதம் தொடர நானும் விரும்பவில்லை.Thank you.

Reply

@ Anony Munna

Sorry Just Now I Found Your Comment In Spammed Comments. I Dont Know How It Happened. But All Your Comments Are Valid One. My Readers Missed Such a Valid Comments.

Reply

Post a Comment