கற்போம்: Blogger | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே கொண்டு வருவது எப்படி ?


இன்று பதிவர்கள் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் ஓட்டுப்பட்டைகளில் ஒன்று தமிழ்மணம். ஆனால் அவர்கள் தளத்தில் சொல்லி உள்ளபடி நாம் அதை இணைக்கும் போது அது பதிவுக்கு மேல் வரும். அதனை எப்படி பதிவுக்கு கீழே கொண்டு வருவது என்று இந்த பதிவில் பார்ப்போம். 

முதலில் Blogger >> Template >> Edit HTML பகுதியில் Template Coding பகுதியில்  CTRL+F மூலம் tamilmanam என்பதை தேட வேண்டும். 

இப்போது குறிப்பிட்ட வரியில் <!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --> என்று ஆரம்பித்து இருக்கும். இது தான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையின் ஆரம்பம். 

அதில் ஆரம்பித்து <!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --> என்பது முடியும் வரை உள்ள Coding-களை Cut செய்து கொள்ளுங்கள். [நீக்கியும் விடலாம்.]

இப்போது அவற்றை ஒரு Notepad File ஒன்றில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அது கீழே உள்ளது போல இருக்க வேண்டும். 

<!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'></script><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'></script></b:if><!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->

இப்போது அதே Edit HTML பகுதியில் மறுபடியும் CTRL+F கொடுத்து <data:post.body/> என்பதை தேடுங்கள். 

அதற்கு அடுத்த லைனில் மேலே உள்ள Coding - ஐ பேஸ்ட் செய்து Save Template என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

சில Template களில் ஒன்றுக்கும் மேற்பட்ட <data:post.body/> இருக்கலாம். அப்படி இருந்தால்எதில் வரவில்லையோ அதை நீக்கி விட்டு மற்றதின் கீழே பேஸ்ட் செய்து பாருங்கள். 

இப்போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டை உங்கள் பதிவின் கீழே இருக்கும். புரியாதவர்கள் கீழே கமெண்ட் மூலம் சொல்லவும். 

- பிரபு கிருஷ்ணா

YouTube Video - க்களை Audio ஆக Embed செய்வது எப்படி?


YouTube வீடியோக்களை நம் வலைப்பூக்களில் Embed செய்யும் போது சில சமயம் வெறும் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படுவதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில் இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் இல்லாமல் வெறும் ஆடியோ மட்டும் வரும் வண்ணம் எப்படி  தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

நீங்கள் Embed செய்யும் வீடியோ கீழே உள்ளது போல வரும். 




இதை செய்ய முதலில் கீழே உள்ள Coding-ஐ Copy செய்து உங்கள் Post Edit பகுதியில் HTML பகுதியில் Paste செய்து கொள்ளுங்கள். 

<div style="position:relative;width:267px;height:25px;overflow:hidden;">
  <div style="position:absolute;top:-276px;left:-5px">
    <iframe width="300" height="300"
      src="https://www.youtube.com/embed/youtubeID?rel=0">
    </iframe>
  </div>
</div>

இப்போது எந்த வீடியோவை, ஆடியோ ஆக Embed செய்ய வேண்டுமோ அதன் வீடியோ ஐடியை காபி செய்ய வேண்டும். அது வீடியோவின் URL பகுதியில் இருக்கும்.


இது சில சமயம் வேறு மாதிரி வர வாய்ப்பு உள்ளது. அப்போது v= என்பதற்கு அடுத்து உள்ள சில வார்த்தைகளை மட்டும் Copy செய்து கொள்ளுங்கள். கீழே உள்ளது ஒரு உதாரணம்.



இதை நீங்கள் ஏற்கனவே Paste செய்த Coding - இல் youtubeID என்பதற்கு பதில் Copy செய்த Video ID  - ஐ பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது கோடிங் கீழே உள்ளது போல இருக்கும்.


அவ்வளவுதான் இனி வீடியோவின் ஆடியோ மட்டும் உங்கள் தளத்தில் வரும். 

- பிரபு கிருஷ்ணா

Follow செய்யும் Blog - ஐ Unfollow செய்வது எப்படி?


குறிப்பிட்ட வலைப்பூவை தொடர்வது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை எப்படி unfollow செய்வது என்பது குறித்து யோசிக்கும் போது நிறைய பேருக்கு தெரியாது. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

1. முதலில் குறிப்பிட்ட வலைப்பூவுக்கு செல்லுங்கள். 

2. நீங்கள் ஏற்கனவே Follow செய்வதால், Sign In என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. Sign in செய்த பின் உங்கள் படத்துக்கு கீழே வரும் "Options >> Site Settings" என்பதை கிளிக் செய்யுங்கள். 


4. இப்போது வரும் Pop-up விண்டோவில் "Stop following this site" என்பதை கிளிக் செய்யுங்கள். 


5. இப்போது பாருங்கள் Follow செய்பவர்கள் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து இருக்கும். 

- பிரபு கிருஷ்ணா

Youtube Video -க்களை அதன் லோகோ இல்லாமல் பிளாக்கரில் Embed செய்வது எப்படி?


பல நேரங்களில் நம் வலைப்பூவில் Youtube வீடியோக்களை இணைக்க வேண்டி வரும். அம்மாதிரியான சமயங்களில் அதை பார்க்கும் நண்பர் அந்த வீடியோவில் இருக்கும் Youtube Logo மீது கிளிக் செய்தால் அவர் Youtube - சென்று விடுவார். திரும்ப அவர் நம் தளத்துக்கு வருவார் என்று சொல்ல முடியாது. எனவே அந்த Youtube logo-வை நீக்கி விட்டால் அவர் நம் தளத்திலேயே அந்த வீடியோவை பார்ப்பார். எப்படி என்று பார்ப்போம். 

இப்போது இங்கே இரண்டு வீடியோக்களை நான் இணைக்கிறேன். இரண்டையும் சாதரணமாக பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். முதலாவதில் வீடியோ தலைப்பின் மீது உங்களால் கிளிக் செய்ய முடியும். அதே சமயம், Play ஆகும் போது கீழே YouTube Logo இருக்கும். இரண்டாவதில் இந்த இரண்டுமே கிடையாது. 








இதை எப்படி செய்வது ? 

மிக எளிது. ஒரு வீடியோவின் Embed Code - ஐ அதன் பக்கத்தில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதில் வீடியோ ID க்கு அடுத்து ?modestbranding=1 என்பதை நீங்கள் சேர்க்க வேண்டும். எப்படி என்பது கீழே. 

சாதாரண Youtube Embed Code: 

<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/idaqINS3ADo" frameborder="0" allowfullscreen></iframe>

Logo Less Youtube Embed Code: 

<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/idaqINS3ADo?modestbranding=1" frameborder="0" allowfullscreen></iframe>

அவ்வளவே. முதலாவதாக உள்ளது Youtube - இல் உங்களுக்கு கிடைப்பது, சிவப்பு நிறத்தில் வீடியோ ஐடி மட்டும் ஹைலைட் ஆகியுள்ளது.  இரண்டாவது நீங்கள் Edit செய்தது. இனி வாசகர் வீடியோவை பார்க்கும் போது உங்கள் தளத்தில் இருந்தே தான் பார்ப்பார். 

- பிரபு கிருஷ்ணா

PPT File ஒன்றை Blogger - இல் Embed செய்வது எப்படி?


சில நேரங்களில் நாம் உருவாக்கிய Powerpoint Presentation களை நமது தளத்தில் இணைக்க வேண்டி இருக்கும். அவற்றை படங்களாக காட்டுவதை விட அப்படியே நம் தளங்களில் Embed செய்தால் எளிதாகவும் இருக்கும், சீக்கிரம் Load ஆகவும் செய்யும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். பிளாக்கர் மட்டுமின்றி மற்ற தளங்களிலும் இதை பயன்படுத்த முடியும். 

மிக எளிதாக செய்யும் வழியை உங்களுக்கு சொல்கிறேன். இதை செய்ய நீங்கள் Hotmail அல்லது Outlook.com இல் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இப்போதே ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

1. இப்போது skydrive தளத்தில் உங்கள் Microsoft Account மூலம் நுழையவும். 

2. Upload  என்பதை கிளிக் செய்து  உங்கள் PPT File - ஐ தெரிவு செய்யுங்கள். 

3. File Size - ஐ பொறுத்து அது Upload ஆன உடன் அதன் வலது மேல் மூலையில் கிளிக் செய்து அதை தெரிவு செய்ய வேண்டும். 



4. இப்போது மேலே உங்களுக்கு சில வசதிகள் வரும். அதில் Embed என்பதை கிளிக் செய்யுங்கள். 


5. இப்போது வரும் பகுதியில் Generate என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Coding கிடைக்கும். அதை காபி செய்து கொள்ளுங்கள். 

6. இப்போது உங்கள் Post Edit பகுதியில் HTML-ஐ கிளிக் செய்து வரும் பகுதியில் அதை Paste செய்ய வேண்டும். 


7. மிகச் சரியான இடத்தில் Paste செய்ய வேண்டும் என்றில்லை. ஒரு இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள், பின்னர் மீண்டும் Compose பகுதிக்கு வந்து Presentation - ஐ காபி செய்து வேறு இடத்தில் Paste செய்து கொள்ளலாம். 

அது கீழே உள்ளது போல இருக்கும். 


இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 


- பிரபு கிருஷ்ணா

Blogger Custom Domain Settings - சில மாற்றங்கள்


பிளாக்கரில் தங்கள் சொந்த டொமைன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் கூகுள், பிளாக்கர் Domain Add செய்வதற்கு CNAME செட்டிங்க்ஸ் பகுதியில் ஒரு புதிய Record சேர்த்துள்ளது. இதன் காரணமாக புதியதாக டொமைன், சப்-டொமைன் போன்றவற்றை சேர்ப்பவர்களுக்கு Domain Verify -யில் பிரச்சினை என்று வரும். அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். 

நீங்கள் டொமைன் அல்லது சப்-டொமைன் Add செய்யும் கீழே உள்ள பிரச்சினை வரும். 

“We have not been able to verify your authority to this domain. Error 12. Please follow the settings instructions.”

படம் : 

உங்கள் டொமைன் பெயருக்கு கீழே உள்ள "Settings Instructions" என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் "Blogger Custom domain Instructions" பக்கத்துக்கு வருவீர்கள். 

அதில் நீங்கள் Domain அல்லது Sub-domain என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். [நீங்கள் எதை Add செய்கிறீர்களோ அதை]


இப்போது வரும் பக்கத்தில் CNAME Add செய்வதற்கான வழி முறை இருக்கும். பெரும்பாலும் நீங்கள் முதல்  CNAME  Add செய்து இருப்பீர்கள். (www, ghs.google.com என்பது). 

இப்போது புதியதாக இரண்டாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அதையும் CNAME Record - இல் தான் Add செய்ய வேண்டும். அது கீழே படத்தில் சிவப்பு கட்டத்தில் உள்ளது [படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணவும்]


இதே போன்று உங்களுக்கும் ஒன்று இரண்டாவது  CNAME  ஆக வரும். அது சில மாற்றங்களுடன் இருக்கும். ஒவ்வொரு டொமைன்க்கும் ஒவ்வொன்று.

இப்போது நீங்கள் டொமைன் வாங்கிய தளத்திற்கு சென்று, உங்கள் டொமைன் Settings பகுதியில் DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும்.  இதில் Destination ஆக உள்ள மிகப் பெரிய ஒன்றில் .com க்கு பிறகு ஒரு முற்றுப் புள்ளி இருக்கும் [dot] அதை கொடுக்க வேண்டாம்.

Bigrock தளத்தில் டொமைன் வாங்கியவர்கள் கீழே படத்தில் உள்ளது சேர்க்க வேண்டும். உங்களுக்கான  CNAME  Settings ஐ என்பதை மறந்து விடாதீர்கள்.


Bigrock மூலம் Domain வாங்கியவர்கள் முதல் டொமைன் Add செய்வது பற்றிய தெளிவான பதிவை இங்கே படிக்கவும் - BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

இதை செய்து முடித்த பின் 6-8 மணி நேரங்களுக்கு பிறகு உங்கள் டொமைன் அல்லது சப்-டொமைனை Add செய்து பாருங்கள். வேலை செய்யும். 

மீண்டும் பிரச்சினை என்றால் மீண்டும் பதிவை படிக்கவும். சரியாக செய்யாவிட்டால் மட்டுமே இது வேலை செய்யாது. 

வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேட்கவும். 

ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

நன்றி - Tech Hints

-பிரபு கிருஷ்ணா

Blogger- இல் Contact Form வைப்பது எப்படி?

நமது வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வலைப்பூவின் மூலம் தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன. பலர் தமது ப்ரொஃபைலில் தங்கள் ஈமெயில் ஐடி தந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஸ்பாம் மெயில்கள் வருவது தவிர்க்க முடியாது. இன்னும் சிலர் கமெண்ட் மாடரேசன் வைத்திருக்கும் நிலையில், ஏதேனும் சொல்ல விரும்பினால் அதில் சொல்லி, இதை வெளியிட வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். அவ்வாறு வைக்காத போது தொடர்பு கொள்வது ஒரு பிரச்சினை தான்.

பிளாக்கர்க்கு மிக அழகான Email Subscription Widget


நம் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க நினைப்பவர்களுக்கு நாம் Email Subscription என்ற வசதியை பயன்படுத்துகிறோம். பெரும்பாலோனோர் Feedburner மூலமாக இதை செய்கிறோம். அதற்கு மிக எளிதான கோடிங் உடன் அழகான Widget ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

அது கீழே படத்தில் உள்ளது போல இருக்கும். [கற்போம் தளத்தில் பதிவுகளுக்கு கீழே உள்ளது]


இதை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, 

1. முதலில் Blogger >> Layout பழைய Interface என்றால் Blogger >> Design 

2. இப்போது Sidebar - இல் Add A gadget >> HTML/Java Script

3. கீழே உள்ளதை Copy/Paste செய்யவும். 


<form name="f1" action="http://feedburner.google.com/fb/a/mailverify?uri=baleprabu" method="post" target="_blank"><input type="hidden" name="_submit" value="0001" /><table width="285" cellpadding="0" cellspacing="0" border="0"> <tbody><tr valign="bottom"><td width="15" height="15" style="font-size:1px;"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjJhofK-OEpppkGp-ekDU6Ftr4T1ijfQfr87wv9np4mICN37KRfPBMD9qINdmy3wvOyDusFEndG2LvjPSUwAJRr_X5Ah5DW8N1JzE3O9B8j8ySlc1YD6VEN7yQFcjW76zVrbwTivowi4Q/s1600/rsssub_nw_999999.gif" width="15" height="15" /></td> <td colspan="2" style="font-size:1px;background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqYHTU-Q7Bf6qefjY-XZrXRW9hqyNrVVT9lXBHt0_BJNQccJJl4_70q6CZ0v2GIVLph0Jn1kuUhH4NmdZluovBXNqVgktZL5xEHx-4RAPUw808cv3SQOw05o9WcAwpplLxZRV6zc2ZZtU/s1600/rsssub_n_999999.gif);repeat:repeat-x;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga8OJpq0XrekzYgSsmPL41IXfmB7G-i9EICng-x32DBL6b9qfLbi0jsBoKFPT68HkYR8IyNy9SCWsQlE61bIbqcsTe_H1ML-ty91cCF1ljJEMAZdXiL5XWTjnp2BE1tx4fGbe3p7a4TXQ/s1600/spacer.gif" width="1" height="1" border="0" /></td><td width="15" height="15" style="font-size:1px;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcSGI81w1OR4akC0khTvxGOKBMHC3L-Pe12mMeLgML4bUMZW7ry02OFVDf8Wc7JQXDnZbNVUVyxIeG1q81mgGa9z-i0VTiRGNZB6_6ynY8nZNmpTJjAnT_BI9BE6vJ-9vRPGvefGbr2wc/s1600/rsssub_ne_999999.gif" width="15" height="15" /></td></tr> <tr valign="top"><td rowspan="2" width="15" style="background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBlFikYJ88lbMu1d6HiGRM_tpvENsNhcuShbQRG9TOhVCMizm_eQXSG4Zbqnat5EyWQ3Z8A9Z_mYt6vzixzGUSYXZAQEoQNDYccYGNOTGIW_ft3lFCRyYaK8hFuGfLKI4yzbTLpzBAAF4/s1600/rsssub_w_999999.gif);repeat:repeat-y;font-size:8px;"> </td><td nowrap="" bgcolor="#ffffff" style="text-align:center;font-family:verdana,arial,helvetica,sans-serif;font-size:12px;color:#333333;font-weight:bold;">Sign-Up To Our Free Newsletter!</td><td align="right"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7RDzZapY1wD058nTF1h9oJgawM9q_zg5LeHqq7oVMc0mVBkWbP4-evjRdJOf3isaI4cfahlqSjsjSwKsgakzpMVEli5MgmySOfmunVocf17HD7lY6lBTZBMMzuSoXMnk3Np9gs7Prr5A/s1600/rsssub_emailicon.gif" width="29" height="23" /></td> <td rowspan="2" width="15" style="background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI3khnPxZluezFQJZl_B6UjdCIC8jpxFfVIvlBeOM58yIwrMUUjDWLiFSsGJBLq45bpCi7KLKOW5OcVYm5RW-ekV-Zawd147DWQYdohzYPOmBczKf6q03GiyspXaM9b-flF52kW1w8_AM/s1600/rsssub_e_999999.gif);repeat:repeat-y;font-size:8px;"> </td></tr><tr valign="top"><td colspan="2" bgcolor="#ffffff">
<table border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr valign="middle"> <td style="padding:2px 5px;"><input type="text" id="email" name="email" value="Your Email Address" onfocus="value=&#39;&#39;" /></td> <td style="text-align:right;padding-left:5px;"><input type="submit" value="Sign Up Now!" /></td> </tr></tbody></table></td></tr><tr valign="top"><td width="15" height="15" style="font-size:1px;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiobHT207FF8I9Htf1rpuOa8bqKmEF1Bi1w54kIO_8s0CgtRKv5BOpdavoeP6Ve0Qc7he6DIC60CQa4lBM50YtJU9UQOkMDaAjd_gRtwU1yUvnlWxLCm-kn_Z5JqqfCqge1wGeif0TEIFI/s1600/rsssub_sw_999999.gif" width="15" height="15" /></td><td colspan="2" style="font-size:1px;background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZlKvYKyegehg9l21JOYrNc_ggxpxFXFkFesVBHGhglvEkRyq_YyCALfLh4TcDv-1pQyqVnWcWrwDGuVqOe3PUHux4iMVmEpQNOgwka6cxoFiBTOwonNO96GGzr6IN6oXrvVZ74PUnFQk/s1600/rsssub_s_999999.gif);repeat:repeat-x;font-size:8px;"> </td><td width="15" height="15" style="font-size:1px;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiziYsSVmmmqVWr8NjPzN7nl2SEWufVQn7lXHxkhYY_LpYH9eSDkixtYWLZx-w2Wprwaw40hXKnsZokLQq51VMuNUr9NQk470SLO-JXAyiO0Q6vOSE9bBKCQ1DyTbdcWdprATFJpFPDXsM/s1600/rsssub_se_999999.gif" width="15" height="15" /></td></tr></tbody></table></form>



4. இதில் baleprabu என்று உள்ளதை உங்கள் Feedburner ID க்கு மாற்றிக் கொள்ளவும்.

5. உங்கள் Feedburner ID - ஐ அறிய, feedburner.google.com சென்று கீழே உள்ளது போல செய்யவும்.


இப்போது Widget - ஐ Save செய்து விடுங்கள்.

இந்த பதிவிற்கு ஐடியா கொடுத்த வரலாற்று சுவடுகள் அண்ணனுக்கு :-)  நன்றி

- பிரபு கிருஷ்ணா

Blogger : Mobile View என்றால் என்ன? அது ஏன் அவசியம் ?


வலைப்பூ வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சந்தேகங்களில் இதுவும் ஒன்று. Template பக்கத்தில் Mobile View என்று ஒன்று உள்ளதே, அதை என்ன செய்ய வேண்டும் என நினைப்பதுண்டு அதைப் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காண்போம். 

Smartphone, Tablet என்று பெருகிவிட்ட இன்றைய நாளில் நிறைய பேர் நம் வலைப்பூவை அவைகளில் படிக்க ஆரம்பித்து விட்டனர். நாம் கணினியில் படிக்கும்படி நமது Template-ஐ வடிவமைத்து இருப்போம், ஆனால் அதில் நிறைய  மொபைலில் படிக்க/பார்க்க முடியாது, எனவே மொபைல் போனில் இருந்து படிப்பவர்களுக்கு நம் வலைப்பூ எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். 

பழைய பிளாக்கர் இன்டெர்பேஸ் என்றால் Settings >> email & mobile என்பதற்கு செல்லுங்கள்.

புதிய பிளாக்கர் இன்டெர்பேஸ் : Blogger >> Template இதில் சென்றால் உங்களுக்கு "Mobile" என்பது இருக்கும்.  அதில் கீழே உள்ளது போல இருந்தால் உங்கள் வலைப்பூவை மொபைல் போனில் படிக்க முடியாது. 


இப்போது கீழே உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள்.  வரும் புதிய விண்டோவில் "Yes. Show mobile template on mobile devices." என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது கீழே உள்ளது போல வரும். 


இதில் Default என்று உள்ளதை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். அதில் ஏற்கனவே உள்ள 7 வகையான Template-களை பயன்படுத்த முடியும். கடைசியாக உள்ள Custom என்பது நீங்கள் பிளாக்கரில் வைத்து இருக்கும் Template ஆகும். 



குறிப்பிட்ட ஒன்றை தெரிவு செய்து Prview என்பதன் மீது கிளிக் செய்தால் குட்டி விண்டோவில் உங்கள் வலைப்பூ மொபைலில் எப்படி இருக்கும் என்பது காட்டப்படும். 

வேறு தளத்தில் இருந்து Download செய்த Template-களை பயன்படுத்தும் நண்பர்கள் Custom என்பதை தெரிவு செய்யக் கூடாது. அந்த Template-கள் மொபைலில் படிக்கும் போது சரியாக தெரியாது, படிக்க முடியாது. இதனால் மொபைலில் படிக்க விரும்பும் வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடலாம். 

ஏற்கனவே பிளாக்கரில் உள்ள Template-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதே பெயருள்ள Template-ஐ நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம், அல்லது Custom என்பதை தெரிவு செய்து கொள்ளலாம். 

மொபைலில் படிக்கும் போது Sidebar எதுவும் தெரியாது. ஆனால் உங்கள் பதிவு அவர்களுக்கு தெளிவாய் படிக்கும் வண்ணம் இருக்கும். 

கற்போம் தளம் Android Mobile-லில் 
  

              
    Post Title
                  Photobucket
                          Post

இதை மேலே சொன்ன Preview என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணினியிலேயே நீங்கள் பார்க்க முடியும். மொபைல்களில் உங்கள் வலைப்பூ எப்படி தெரிகிறது என்று இன்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



- பிரபு கிருஷ்ணா

பதிவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்


ஒரு பதிவரின் கடமை என்பது வெறும் வலைப்பூ தொடங்கி அதில் எழுதுவது மட்டும் அல்ல. தன்னுடைய வலைப்பூவை படிக்க வரும் வாசகர்கள் தொடர்ந்து வந்து படிக்கும் படி அமைக்க வேண்டும்.  என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

Blogger Posts & Sidebar க்கு Border சேர்ப்பது எப்படி?

சில புதிய பிளாக்கர் Tempalte களை நாம் பார்க்கும் போது அதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். பல நேரங்களில் நாம் அதில் Sidebar மற்றும் Post களுக்கு Border எதுவும் இல்லாமல் வெறுமனே இருந்தால் அதை பயன்படுத்த மனமின்றி விட்டு விடுவோம். இனி அவ்வாறு இருந்தால் நீங்களே Border சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

Feedburner என்றால் என்ன? அதன் மூலம் வலைப்பூ வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?


Feedburner என்பது ஒரு வலைப்பூவை தொடர நினைப்பவர்களுக்கு ஈமெயில் அல்லது RSS Feed வழியாக தொடர உதவுவது. இது உங்கள் பதிவை அவர்கள் மின்னஞ்சலுக்கோ அல்லது RSS Reader-க்கோ அனுப்பி வைக்கும்.இதன் மூலம் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

1. முதலில் Feedburner தளத்துக்கு சென்று உங்கள் ஈமெயில் கணக்கை கொண்டு லாகின் அல்லது Sign Up செய்யவும்.(ஜிமெயில் கணக்கு இருந்தால் லாகின் செய்யலாம்.)

2. இப்போது கீழே படத்தில் உள்ளது போல வரும் பக்கத்தில் அம்புக்குறி உள்ள இடத்தில் உங்கள் வலைப்பூ முகவரி தரவும். 


3. அடுத்த பக்கத்தில் வரும் இரண்டு Feed-களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யவும். 

4. அடுத்து உங்கள் Feed-க்கு Title மற்றும் முகவரி தர வேண்டும். இதில் முகவரி மிகவும் முக்கியமானது. இதை பின்னால் நீங்கள் மாற்ற முடியாது. (மாற்றினால் உங்களை பின்தொடர்பவர்கள் கணக்கு பூஜ்ஜியத்துக்கு வந்து விடும்) எனவே இதில் கவனம் செலுத்தவும்.



5. இப்போது உங்கள் Feed தயாராகிவிட்டது. உங்கள் முகவரி இப்போது வரும், அதை கிளிக் செய்தால் உங்கள் Feed-க்கு நீங்கள் செல்லலாம். அதற்கு முன் Next கொடுக்கவும். 

6. அடுத்த பக்கத்தில் எதையும் Clickthroughs, I want more! Have FeedBurner Stats also track என்ற இரண்டையும் கிளிக் செய்யவும்.

7. உங்கள் Feedburner கணக்கு இப்போது ரெடி.

இதில் இனி நீங்கள் செய்யவேண்டியவை.

8. Optimize பகுதியில் Feedflare என்பதில் உங்களுக்கு விருப்பமானவற்றை கிளிக் செய்யவும். 

9. Publicize என்ற பகுதியில் Email Subscriptions, Pingshot, Feedcount, Creative Commons போன்றவற்றை Activate செய்யவும். 

10. Activate செய்த Email Subscriptions பகுதியில் உள்ள கோடிங்கை கோப்பி செய்து புதிய Gadget ஆக உங்கள் வலைப்பூவில் சேர்க்கவும். இது மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர விரும்பும் நண்பர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். 




11. இப்போது பிளாக்கர் கணக்கில் Settings--> Other என்ற பகுதியில் கீழே உள்ளது போல மாற்றவும். Feed URL என்பது http://feeds.feedburner.com/karpomtestblog என்று தர வேண்டும். இதில் karpomtestblog க்கு பதிலாக உங்கள் Feed Address இருக்க வேண்டும். 




மேலே உள்ளது போல Allow Blog Feed என்பதை Short என்று கொடுப்பதால் மின்னஞ்சல் அல்லது RSS Feed-இல் உங்கள் பதிவின் முதல் பத்தியை மட்டுமே தொடருபவர் அங்கே படிக்க முடியும். மீதிக்கு உங்கள் வலைப்பூவுக்கு வருவார். 

அவ்வளவே இனி எளிதாக மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர முடியும். 


Feedburner-இல் மேலும் சிலவற்றை மாற்றலாம். அவை குறித்த பதிவுகள்: 


1. Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி?
2. பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற
3. பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற

இதனை பயன்படுத்தும் போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் ஏதேனும் பிரச்சினை என்றால், இந்த பதிவை படிக்கவும். தமிழ்மணத்தில் பிரச்சனை?

- பிரபு கிருஷ்ணா

Blogger Tips-External Link மட்டும் New Tab இல் ஓபன் ஆக

நமது வலைத்தள நண்பர்கள் நிறைய பேர் வலைப்பூக்களை படிக்கும்போது, பழைய பதிவுகளை படிக்க நினைத்தால் அவர்கள் அதை new Tab இல் ஓபன் ஆகும் படி வைத்திருப்பார்கள். இதனால் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு tab இல் படிக்க வேண்டி இருக்கும். இப்படி இல்லாமல் external links மட்டும் புதிய tab இல் ஓபன் ஆகும்படி செய்தால்?

உங்கள் தளம் லோட் ஆகும் நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொரும் தங்கள் தளம் விரைவில் லோட் ஆக வேண்டும், வாசகருக்கு அதிக நேரம் லோட் ஆகி தொல்லை தரக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சில கோடிங், படங்களை சேர்க்கும் போது லோட் ஆக அதிக நேரம் ஆகலாம். இந்த மாதிரி விசயங்களில் முதலில் நமக்கு எது பிரச்சினை என்று தெரிய வேண்டும். அதை எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை


சில முக்கியமான பதிவுகளை எழுதி முடித்து விட்டு, நாம் திரட்டிகளில் இணைப்பதற்குள் நம்மவர்கள் அதை சுட்டு, சுட சுட தங்கள் தளத்தில் பகிர்ந்து விடுகின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது? பல சமயம் அவர்கள் நமக்கு இணைப்பு தருவதே இல்லை, அப்படி இல்லாமல் அவர்களுக்கு தெரியாமல் நம் தளத்துக்கு ஒரு இணைப்பு தர முடிந்தால்? எப்படி செய்வது அதை?

பிளாக்கர்க்கு மிக எளிமையான Related Posts Widget சேர்ப்பது எப்படி?

நமது பதிவுகளை படிக்கும் நண்பர்கள், அடுத்த் பதிவுகளை படிக்க ஈர்ப்பவை நாம் பதிவிற்கு கீழே சேர்க்கும் தொடர்புடைய பதிவுகள் என்ற Wdiget தான். பெரும்பாலும் படங்களுடன் இருக்கும் இந்த Widget-கள் இருக்கிறது. ஆனால் படங்கள் இன்றி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிக எளிமையான Widget எப்படி சேர்ப்பது என்பது தான் இந்தப் பதிவு. 

பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்

இன்றைய நிலையில் தமிழில் மிக அதிகமான வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் நிறைய எழுதுகிறார்கள். அவர்களில் பலரது வலைப்பூவுக்குள் நுழைந்தால் ஏண்டா நுழைந்தோம் என்ற அளவுக்கு அதிகமாக இடைஞ்சல்கள் இருக்கும். சில பதிவையே படிக்க முடியாத அளவுக்கு இடைஞ்சல் தரும். அவை என்ன? ஒரு பதிவர் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்?

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 

வித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்துவது எப்படி?

நாம் அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நமது ப்ளாக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும்? நம் வலைப்பூவுக்கு வரும் வாசகர்களை வித விதமான வகையில் எழுத்துருக்களை(Font) பதிவில் பயன்படுத்தி கவரும் வழிதான் இன்றைய பதிவு. எப்படி செய்வது என்று காண்போமா? இதன் படி தமிழ் எழுத்துக்களையும் நிறைய ஸ்டைல்களில் காட்ட முடியும்.

Discounts விலையில் Bigrock-இல் டொமைன் வாங்க

பதிவர்கள் பலருக்கும் டொமைன் வாங்கும் ஆசை உள்ளது. அப்படி டொமைன் வாங்க விரும்பும் நண்பர்களுக்கு கடந்த பதிவு ஒன்றில் எங்கே கஸ்டம் டொமைன் வாங்குவது? என்று சொல்லி இருந்தேன். இப்போது bigrock-இல் 10% Discount விலையில் டொமைன் வாங்கும் வாய்ப்பு உள்ளது.