இப்போது தினமும் அனுப்பலாம் NewsLetter | கற்போம்

இப்போது தினமும் அனுப்பலாம் NewsLetter

வலைப்பதிவு வைத்துள்ள நாம் தங்கள் போஸ்ட் தம்மை பின் தொடர்பவர்களுக்கு எப்படி தெரிவிப்பது என்பதற்கு பல வழிகளை பயன்படுத்துவோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சனைகளை கொண்டுள்ளது. இவற்றை தவிர்த்து ஒரு எளிய வழியை உங்களுக்கு சொல்லவே இந்த பதிவு.பெரும்பாலும் நம்மவர்கள் Friend Connect மூலமாக அனுப்புவோம். ஆனால் வாரம் முழுக்க இதை பயன்படுத்தி அனுப்ப முடியுமா என்றால் இல்லை. வாரத்தில் நான்கு நாட்கள் (?) மட்டுமே அனுப்ப முடியும்.

என்னைப் போன்ற தொழில்நுட்ப பதிவர்கள் Feedburner மூலம் இதை எளிதாக செய்து வருகிறோம்.வலைப்பதிவுக்கு நீங்கள் புதியவர் என்றால் இதை உடனே செய்து விடுங்கள்.

இப்போது கொஞ்சம் பிரபலம் ஆகிவிட்ட நண்பர்கள் என்றால், குறிப்பாக தமிழ்மணத்தில் உங்கள் Feed மூலம் பதிவுகள் இணைத்து விட்டால் நான் மேலே கூறியது நமக்கு பிரச்சினைதான். சரி இதற்கு என்னதான் வழி???

கூகிள் ஒரு பழைய வழியை வைத்துள்ளது அதைத்தான் சொல்லப் போகிறேன்.
உங்களுக்கு உள்ள வசதி. முதலில் இந்த முகவரியில் சென்று உங்கள் வலைப்பூ பெயரில் ஒரு குரூப் பதிவு செய்யுங்கள்.


இதில் சிவப்பு கட்டமிட்டதை மறந்துடாதீங்க நண்பர்களே.....

இப்போ அடுத்தபடியாக Add Members  என்பதை skip செய்து விடவும்.

இப்போது உங்கள் குரூப் முகப்பிற்கு வருவீர்கள். இதில் Tune your group's settings என்பதற்கு  செல்லவும்

இதில் Public website என்பதில் Promotion Box என்பதை Click செய்யவும்.

இப்போது அடுத்த பக்கத்தில்


Subscribe box for your web page

Google Groups
Subscribe to பலே பிரபு வலைத்தளம்
Email:
Visit this group

(இங்கு யாரும் Subscribe செய்ய வேண்டாம்)

இதேபோல் உங்கள் தளத்தின் பெயருடன் உள்ளதற்கு கீழே HTML Coding இருக்கும். அதனை காபி செய்து கொள்ளவும்.

இதை ஒரு புதிய "HTML/Java Script" Gadget இல் Paste செய்து விடவும்.

இத்தோடு முடியவில்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது....

இப்போது Settings பகுதியில் Access என்பதில் கீழே படத்தில் உள்ளபடி செய்து விடவும்.


மேலும் Settings பகுதியில் Email delivery என்பதிலும் கீழே படத்தில் உள்ளபடி செய்து விடவும்.Message Footer என்பது உங்கள் விருப்பம். ஆனால் Replies to messages கட்டாயம் படத்தில் உள்ளபடி இருக்க வேண்டும். 

இப்போது  அடுத்தபடியாக Discussions---> New Post என்பதில் உங்கள் பதிவின் தலைப்பு, லிங்க்(URL) , சிறு முன்னுரை போன்றவற்றை போட்டு அனுப்பி விடவும்.  இதுவும் NewsLetter போலவே நீங்கள் செய்யவேண்டும்.  

 முக்கிய குறிப்பு: இதில் உங்கள் பதிவின் லிங்க் கொடுக்கும் போது URL மட்டுமே கொடுக்க இயலும். HTML பயன்படுத்தி கொடுக்கலாம். ஆனால் எளிதாக URL கொடுத்து விடவும். 


அவ்வளவுதான் நண்பர்களே. இது Feedburner வேலை செய்தால் தமிழ்மணம் வேலை செய்யவில்லை, தமிழ்மணம் வேலை செய்தால் feedburner வேலை செய்யவில்லை  என்பவர்கள் பயன்படுத்தலாம்.மறக்காமல் உங்கள் வாசகர்களை Subscribe செய்து கொள்ளசொல்லுங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.... ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும். 

8 comments

நல்ல பதிவு.. நன்றி

Reply

எனக்கு இப்போழுதுதான் அந்த பிராப்ளம் இருந்து feed burnerஐ தூக்கி விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி

Reply

நல்ல தகவல்

Reply

மிகவும் பயனுள்ள தகவல்கள் அளிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

பலே பிரபு said...
//கொஞ்சம் தாமதமாக படிக்கிறேன்.

அருமை ஐயா. ஒரு திருச்சிகாரன் ஆக எனக்கு இதில் மிகவும் பெருமை. (நான் முசிறி வட்டம் தும்பலம் கிராமம்).

எதைக் குறிப்பிடுவது எதை விடுவது என்றே தெரியவில்லை, அவ்ளோ சொல்லி இருக்கீங்க.

அதிகமாக கோவில்களுக்கு சென்றது இல்லை. ஆனால் இப்போது போக வேண்டும் எனத் தோணுகிறது.

தமிழ்மொழி பல ஊர்களிலும் பல விதமாக பேசப்பட்டாலும் நம்ம ஊர்ப் பேச்சுதான் பொது மொழி. எந்தக் கலப்பும் இல்லாதது.

ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த பதிவை எங்கள் ஊர் என்று போட்டு என் வலைப்பூவில் இணைத்துக் கொள்ளப்போகிறேன்.

நன்றி ஐயா.//

திருச்சி பற்றிய என் படைப்பு ஒன்றை தங்கள் வலைப்பூவில் இணைத்து பலரும் படிக்கும் விதமாக பிரபலப்படுத்தியுள்ளதற்கு, என் மன மகிழ்ச்சியையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்.

Reply

மிக அருமையாக எழுதுகிறீர்கள்.. சபாஷ்.

Reply

சிறந்த பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கும் தங்களுக்கு
எனது மனபூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
சகோதரரே!...........

Reply

இப்படி அனுப்புவதன் மூலம் நம்ம மெயில் ஐடி எல்லாருக்கும் போகுமா?

Reply

@ ஆமினா

முடியும் அக்கா. உங்கள் Group Private ஆக இருந்தாலும் உங்கள் குரூப் member ஆக உள்ளவர் தெரிந்து கொள்ள முடியும்.தினமும் எழுதி பிரபலம் ஆகுபவர்களுக்கே இது தேவைப்படும். நீங்கள் Friend Connect பயன்படுத்தி Newletter அனுப்ப முடியும். பதிவு எழுதிய உடன் இதை நீங்கள் அனுப்பிவிட முடியும்(வாரத்துக்கு 3 அல்லது 4 முறை அனுப்ப முடியும்). இதில் உங்கள் இமெயில் Id தெரியாது. http://www.google.com/friendconnect/ இதில் சென்று பாருங்கள். சந்தேகம் இருப்பின் கேட்கவும்.

Reply

Post a Comment