இலவச தொழில்நுட்ப மின்னிதழ் "கற்போம்" | கற்போம்

இலவச தொழில்நுட்ப மின்னிதழ் "கற்போம்"

தமிழில் தொழில்நுட்ப பதிவர்கள் நிறைய. எல்லோரும் ஒவ்வொரு வகை. அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய முயற்சியில் கற்போம் குழு இப்போது இயங்க உள்ளது. ஒவ்வொரு பதிவரின் சிறந்த பதிவையும் மாதா மாதம் உங்களுக்கு அனுப்பப் போகிறோம்.

ஆம் எங்களின் புதிய முயற்சி. 

"கற்போம் மின்னிதழ்"
மாதம் ஒரு முறை தமிழ் தொழில்நுட்ப இதழாக வெளியிடப்படும். இதற்கு நீங்கள் இந்த தளத்தில் தொடர்பவர் ஆக இருக்க வேண்டியது இல்லை, ஈமெயில் முகவரி கொடுக்க தேவை இல்லை.

எந்த கட்டண விளம்பரமும் இல்லமால் வெளியிடப்படும் இதில் தமிழின் முன்னணி தொழில்நுட்ப பதிவர்கள் பலர் இதற்கு தங்கள் பதிவுகளை தர இசைந்துள்ளனர். 

 1. வந்தேமாதரம் சசி
 2. பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்
 3. பொன்மலர் 
 4.  தமிழ்CPU ராஜ்குமார் 
 5. GNU/Linux கதிர்வேல் 
 6. கௌதம் இன்போடெக் வடிவேலன் 
 7. தமிழ்கிழம் ஜெயச்சந்திரன்
 8. தமிழ்வாசி பிரகாஷ்
 9. கணினி அறிவியல் மணிகண்டன்
 10. காரணம் ஆயிரம் கார்த்திகேயன் 
 11.  Pangusanthai-eLearn தேவராஜ் 
 12. தங்கம்பழனி
 13. கணினி கல்லூரி பவர்தாசன்
 14. வடகரை தாரிக்
 15. அவிழ்மடல் அருண் பழனியப்பன்
 16. தமிழர்கள் விக்னேஷ் 
 17. காகிதம் எர்னெஸ்டோ பாலாஜி
 18. கடற்கரை  விஜயன் துரைராஜ்
 19. தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கான்
 20. ரவி நாக்
 21. Tamil Geek
இவர்கள் தவிர இன்னும் பல தமிழ் வலைப்பதிவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம்.  

நீங்களும் தொழில்நுட்ப பதிவர் என்றால், உங்கள் பதிவுகளும் இடம்பெற விருப்பம் என்றால் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நிறைய பேரின் மின்னஞ்சல் முகவரி கிடைக்காத காரணத்தால் கேட்க முடியவில்லை. 

admin@karpom.com

 1. ஒரு இதழில் குறிப்பிட்ட பதிவரின் எத்தனை பதிவுகள் வேண்டும் என்றாலும் பகிரப்படும். 
 2. பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கு இலவச விளம்பரம் செய்யப்படும். 
 3. பதிவுகளின் கீழ் பதிவர் பெயர், வலைப்பூ முகவரி பகிரப்படும். 
 4. இதற்கென்று தனியாக பதிவுகள் கூட மின்னஞ்சல் செய்யலாம். 
 5. சிறு சிறு தொழில்நுட்ப துணுக்குகள் கூட தரலாம். 

- பிரபு கிருஷ்ணா 


18 comments

அருமையான முயற்சி...... தொடருங்கள் நண்பா.....

Reply

very good initiative......although im not posting any technology tipis..i would like to contribute for this...i l email u the rest

Reply

வாழ்த்துகள்..
நல்ல முயற்சி!!!

முடிந்தால் பங்கு பெறுகிறேன்!

Reply

பிரபு அருமையான சிந்தனை மற்றும் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் தங்களின் இந்த முயற்சி... இந்த முயற்சியில் வெற்றி பெற்று சிறந்து விளங்க வாழ்த்துக்கள்....

Reply

Good and super brother! Glad that i am in...!

Reply

தங்களின் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துகள்..!!

Reply

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Reply

கௌதம் இன்போடெக்கா.. கௌதமி இன்போடெக்கா. சரிபார்க்கவும்.1

மின்னிதழை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். நன்றி.

Reply

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in


இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in

Reply

bro how i get that book???????

Reply

bro how i get that book pls reply me ???

Reply

@ lakshmikanth

நாளை அல்லது நாளை மறுநாள் பகிரப்படும் சகோ.

Reply

வாழ்த்துக்கள்....

Reply

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Reply

முயற்சியில் வெற்றி பெற்று சிறந்து விளங்க வாழ்த்துக்கள்....

Reply

Links are not working in E book. I tried Powerthasan post free links( Free DVD) But couldn`t get. Unable to find the original post also. Please provide link

Reply

For some of the month this problem happened. But now everything is cleared go to http://www.karpom.com/p/karpom-e-magazine.html and download the Magazines. Links will work.

Reply

Post a Comment