நன்றி நன்றி நன்றி. ஆம் முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லித்தான் இந்தப் பதிவையே நான் ஆரம்பிக்க வேண்டும். கற்போம் இதழ் இதுவரை மொத்தமாக 10219 முறை கற்போம் தளத்தில் பகிர்ந்த இணைப்பில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டு உள்ளது.
கூகுள் தளத்தில் Karpom Magazine என்று தேடினால் நிறைய தளங்கள் வரும். அவைகள் பகிர்ந்த இணைப்புகளில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட எண்ணிக்கையை என்னால் கணக்கிட இயலவில்லை.
ஆனால் இது நான் கண்டிப்பாக எதிர்பாராத ஒன்று. சும்மா, ஆரம்பிக்கலாமே என்று ஒரு நொடியில் விளையாட்டாக தோன்றிய எண்ணம், இன்று இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சில நாட்கள் இது நமக்கு தேவையா என்று தோன்றினாலும், மின்னஞ்சல் மூலமும், பதிவின் பின்னூட்டம் மூலமும், நேரிலும், அலைபேசியிலும் கற்போம் இதழ் குறித்து கருத்து சொல்லும் நண்பர்களை நினைக்கும் போது இதை எந்த நிலையிலும் நிறுத்தக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.
கற்போம் இதழுக்கு தங்கள் பதிவுகளை தரும் தொழில்நுட்ப பதிவர்கள் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அவர்களுக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டு உள்ளேன்.
தொடர்ந்து சில பதிவர்கள் தங்கள் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்து இருப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தவாரம்
கடற்கரை விஜயன் அவர்கள் புதியதாக இணைந்து உள்ளார்.
இதுவரை டவுன்லோட் செய்யப்பட்ட இதழ்களின் எண்ணிக்கை
- ஜனவரி - 1470
- பிப்ரவரி - 1014
- மார்ச் - 707
- ஏப்ரல் - 717
- மே - 626
- ஜூன் - 785
- ஜூலை - 4234
- ஆகஸ்ட் - 666
இந்த மாத கட்டுரைகள்:
- HTML5 என்றால் என்ன ? - ஒரு அறிமுகம்
- BROWSER COOKIES என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன?
- இந்திய ரூபாயினைக் கணிணியில் உள்ளிடுவது எப்படி ?
- உங்கள் கணினி இயங்கவில்லையா எளிய தீர்வு!
- கம்ப்யூட்டர் மூலம் கொசு விரட்டலாம்
- ஆப்பிள் VS சாம்சங் - 5800 கோடி வழக்கு
- YOUTUBE - சில அடிப்படை தகவல்கள்
- பயனுள்ள பத்து குறிப்புகள்
- WINDOWS 7-இல் GODMODE என்றால் என்ன ? பயன்படுத்துவது எப்படி ?
- பேஸ்புக்கில் மொபைல் எண்கள் பத்திரம்
- YOUTUBE மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
- INSTALL செய்த மென்பொருளை UNINSTALL செய்யாமல் வேறு டிரைவ்க்கு MOVE செய்வது எப்படி ?
தரவிறக்கம் செய்ய