கற்போமில் தொழில்நுட்ப பதிவு எழுத விருப்பமா? | கற்போம்

கற்போமில் தொழில்நுட்ப பதிவு எழுத விருப்பமா?

நிறைய புதிய பதிவர்களுக்கு தொழில்நுட்பம் குறித்து எழுதும் ஆசை உள்ளது. ஆனால் தான் எழுதுவது எல்லோரிடமும் சென்று சேருமா என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும். அந்தக் கவலையை போக்கவே "கற்போம்" உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது. உங்களுக்கும் ஆசை இருந்தால் வாருங்கள் கை கோர்ப்போம். 
புதிய பதிவரோ அல்லது தொழில்நுட்ப பதிவு ஒன்றை நிறைய பேர் படிக்கும்படி எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலோ நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.  "கற்போம்" தளம் மூலம் நிறைய வாசகர்களை சந்திக்க முடியும்,பெறமுடியும்.

சில கட்டுப்பாடுகள்: 


1. Copy/Paste பதிவாக இருத்தல் கூடாது.

2. நேரடியாக கற்போம் தளத்தில் தான் பகிர வேண்டும். (உங்கள் தளத்தில் ஏற்கனவே உள்ளதை சில மாற்றங்கள் உடன் பகிரலாம்)

3. பதிவு 100 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதிகமாக இருந்தால் பகுதி 1,2 என்றும் எழுதலாம். 

எந்த மாதிரியான பதிவுகளை எழுதலாம் ?
1. ஆங்கில தளத்தில் உள்ள பதிவை தமிழில் மொழி மாற்றம் செய்தும் எழுதலாம்.

2. பதிவர்களுக்கு பயன்படும் Blogger,Wordpress போன்ற தொழில்நுட்ப பதிவுகள்

3. குறிப்பிட்ட தொழில்நுட்ப விசயத்துக்கான விளக்கம். (உதாரணம்: Cloud Computing, Tablet PC போன்றவற்றை தமிழில் எழுதலாம்/ மொழி பெயர்த்து எழுதலாம்)

4. இணையம்,கணினி போன்றவை குறித்த தகவல்கள் பகிரலாம். 

5. குறிப்பாக இது தொழில்நுட்ப பதிவு என்று நீங்கள் நினைக்கும் எல்லாவற்றையும் எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் பரிசீலித்து பிரசுரம் செய்கிறோம். 

எப்படி அனுப்புவது ?


வலைப்பூவில் ஒரு பதிவு எழுதிய பின் அதை Word Document ஆகவோ அல்லது நேரடியாக மின்னஞ்சல் மூலமோ எங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். (படங்கள் இருப்பின் அவற்றையும் சேர்த்து அனுப்பவும்)


admin@karpom.com

பதிவின் முடிவில் உங்களைப் பற்றியும்,உங்கள் வலைப்பூ பற்றியும் சில வரிகளில் சொல்லவும்.


எல்லாவற்றையும் தமிழில் செய்வோம். 

8 comments

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.! இது பல புதிய தொழில்நுட்பப் பதிவர்களை அடையாளப்படுத்த பயன்படும்.

Reply

நல்ல முயற்சி .. நானும் இதுபோல செய்யலாம் என இருந்தேன் .. நீங்கள் ஆரம்பித்திவிட்டிர்கள்

Reply

எல்லாவற்றையும் தமிழில் செய்வோம்.

Reply

நல்ல முயற்சி. நன்றி.

Reply

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

Reply

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பல பதிவர்களுக்கும் படிப்போர்க்கும் பயனளிக்கும் முயற்சி.பாராட்டுக்கள்,

Reply

நல்ல முயற்சி.... முடிந்தால் நானும் பங்களிக்கிறேன் பிரபு....

Reply

நல்ல முயற்சி வாழ்த்துகள்

Reply

Post a Comment