பிளாக்கர் பதிவில் இனி மிக எளிதாக Table உருவாக்கலாம் | கற்போம்

பிளாக்கர் பதிவில் இனி மிக எளிதாக Table உருவாக்கலாம்

அதென்னவோ தெரியவில்லை எனக்கும், பதிவிற்குள் ஒரு டேபிள் create செய்வது பற்றிய பதிவுக்கும் அதிக ராசி போல. தொடர்ந்து அதைப் பற்றிய பதிவுகளே எழுதுகிறேன். இந்த முறை என் வாசகர்களுக்கு மிக மிக மிக மிக(எவ்ளோ போட முடியுமோ அவ்ளோ போட்டுக்கோங்க) எளிதாக ஒரு டேபிள் உருவாக்குவது எப்படி என்று சொல்கிறேன்.

என் முந்தைய பதிவான MS-Word மூலம் ப்ளாக்கரில் மிக எளிதாக Table உருவாக்குவது எப்படி? என்பதன் தொடர்பதிவு என்று கூட இதைச் சொல்லலாம். ஆம் அதைப் பின்பற்றியே இந்த பதிவு. 

ஏற்கனவே அந்தப் பதிவை படித்தவர்கள் அதன் முதல் 6 ஸ்டெப்களை நான் இங்கே Copy/Paste செய்து இருப்பதை கவனிக்கவும். 

1. முதலில் Microsoft Word இல் ஒரு Table உருவாக்குங்கள். 

Insert-->Table  


2. இப்போது உங்கள் தகவல்களை நிரப்புங்கள். 

3. Design Tab என்று ஒன்று Table இருக்கும் போது இருக்கும். இல்லை என்றால் முழு Table ஐயும் select செய்து பாருங்கள் வரும். 


4. இதில் உங்களுக்கு தேவையான Table Style நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். New Table Style என்பதன் மூலன் மேலும் பல Style களை நீங்களே உருவாக்கலாம். (Style Based On என்ற பகுதியில் )

5. இப்போது Save As என்பதை கிளிக் செய்யுங்கள். இதில் Other Formats என்பதை தெரிவு செய்து Web Page வடிவத்தில் Save செய்ய வேண்டும். 

6. இப்போது Save ஆன File ஐ Firefox Browser மூலம் Open செய்திடுங்கள்.  

இப்போது தான் விஷயமே. கடந்த பதிவில் View Page Source என்று எல்லாம் சொல்லி இருந்தேன். நிறைய பேருக்கு அதை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால். அதை விட எளிய வழி இப்போது. 

நீங்கள் Firefox என்று இல்லை எந்த  Browser மூலம் வேண்டுமானாலும் ஓபன் செய்து கொள்ளுங்கள்.(நேரடியாக Word-இல் இருந்து ஓபன் செய்து கூட செய்ய முடிகிறது) இப்போது அந்த பக்கத்தில் உங்கள் Table மட்டும் இருக்க வேண்டும். CTRL+A கொடுத்து முழு Table-ஐயும் Copy செய்து விடுங்கள். அடுத்து உங்கள் ப்ளாகர் போஸ்ட்டை ஓபன் செய்து அதை பேஸ்ட் செய்து விடுங்கள். அவ்வளவு தான். மிக மிக மிக எளிதாக ஒரு டேபிள் உங்கள் பதிவுக்குள் வந்துவிட்டது. 


Table In Browser


பதிவிற்குள் அந்த டேபிள்


Table

Table


Table

Table

Content

Content

Content

Table

Content

Content

Content


இதை செய்யும் முன் நண்பர்களே ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். பெரும்பாலும் இது போன்று செய்யும் போது, பதிவிற்குள் Table தவிர மற்ற எல்லா வேலைகளையும் முடித்த பின்னர், கடைசியாக Table ஐ Paste செய்யவும். காரணம் Table க்கு பிறகு கொஞ்சம் Space விட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் அதை உருவாக்க மீண்டும் HTML பக்கம் போக வேண்டி இருக்கும். எனவே இதை நினைவில் கொள்ளவும். 


- பிரபு கிருஷ்ணா


5 comments

சகோ நேரடியாக MS Word டேபிள் உருவாக்கியவுடன் Ctrl+A கொடுத்து அனைத்தையும் copy செய்து பதிவில் PASTE செய்தாலே முழு டேபிளும் வருகிறது

Reply

நல்ல தகவல்..
தேவையெனில் முயற்சிக்கிறேன்

Reply

very good!!!

Reply

Post a Comment