கூகிளின் அற்புத கண்ணாடி - Project Glass | கற்போம்

கூகிளின் அற்புத கண்ணாடி - Project Glass

இவர் அணிந்திருப்பது கூகிளின் Project Glass
அதிகமான ஹாலிவுட் படங்களில் அதிலும் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நாம் கனவிலும் கண்டிராத நவீன தொழில்நுட்ப உபகரணங்களை கிராபிக்ஸ் முறையில் பயன்படுத்துவார்கள். அது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அற்புதக் கண்ணாடியை Project Glass என்ற பெயரில் கூகிள் உருவாக்கியுள்ளது.

கூகிள் Project Glass:மேலுள்ள வீடியோவை பார்த்தாலே வித்தியாசமாக உணர்ந்திருப்பீர்கள். இந்த கண்ணாடியில் கேமராவும், மைக்ரோஃபோனும் உள்ளது. இதன் மூலம் இணையத்தை தொடர்புக் கொள்ள முடியும். மேலும் இது ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

கண்ணாடிக்குள் உள்ள சிறியளவு திரை மூலம் Google+ Hangouts வழியாக நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்யலாம். மேலும் நாம் போகும் இடத்திற்கு Google Map மூலம் வழியை அறிந்துக் கொள்ளலாம். மேலும் அன்றைய Traffic நிலவரத்தை அறியலாம். போகும் வழியிலேயே நாம் எடுக்கும் புகைப்படங்களை கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

மேலும் வானிலை நிலவரத்தை அறியலாம். Alarm, Reminder ஆகியவற்றை வைக்கலாம். இப்படி மேலும் பல வசதிகள் உள்ளது.

இந்த  வருட இறுதிக்குள் இந்த கண்ணாடி விற்பனைக்கு வரலாம் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த பிப்ரவரி மாதம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் விற்பனைக்கு வருவதற்கு சற்று தாமதமாகலாம்.

எதிர்கால தொழில்நுட்பத்திற்கு நம்மை அழைத்து செல்லும் இந்த கண்ணாடி  வெற்றியடைந்தால் கூகிள் நிறுவனத்திற்கு நிச்சயம் இது மேலும் ஒரு மைல்கல்லாக அமையும்.

நன்றி: தகவல் சொன்ன சகோதரி பொன்மலர் அவர்களுக்கும், என்னை Guest Post எழுத அனுமதித்த கற்போம் குழுவினருக்கும் எனது நன்றிகள்!

14 comments

நன்றி சகோ. மிகவும் அருமையான பதிவை எங்கள் தளத்தில் எழுதியமைக்கு.

Reply

சரி, இந்தக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ரோடில் போகும் போது நண்பர்களுடன் சாட் செய்கிறேன் என்று எதிரில் வருபவரைப் பார்த்து ஏதாவது சொல்லி விட்டால்? சாட் செய்ய வேண்டுமென்றால் அதற்கென்று ஒரு விசையை அழுத்துவதாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூகுள் இதை சென்ற ஆண்டே வெளிவிடுவதாய் இருந்தது. தாமதத்திற்கு என்ன காரணமென்று தெரியவில்லை.

அன்புடன்
ஞானபூமி.காம்

Reply

நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

Reply

உண்மையில் advance technology.இதன் விலை எவ்வளவு கூறுவார்களோ.நல்ல தகவல் கூறியதற்கு நன்றி.

Reply

அதிசயமாக உள்ளது பாஸ்

Reply

புதிய தகவலுக்கு நன்றி !

Reply

பிரமிப்பாக உள்ளது ....நாம வாங்குற ரேஞ்சில இருக்குமாங்கிறதுதான் கேள்வி....

Reply

Very important & useful message ,thankyou sir

Reply

Very important & useful message ,thankyou sir

Reply

பகிர்வுக்கு நன்றிகள்.. இது பற்றி வந்தே மாதரம் சசியும் பதிவிட்டுள்ளார்.

Reply

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துகளும்..

Reply

அம்மாவிடம் சொல்லி இதனை இலவசமாக மன்னிக்கவும் விலையில்லா கண்ணாடியாக வழங்கினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்..

Reply

அன்பின் அப்துல் பாஸித்

புதிய தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment