தேவையற்றவர்கள் Gmail chat-இல் Add ஆவதை தடுப்பது எப்படி? | கற்போம்

தேவையற்றவர்கள் Gmail chat-இல் Add ஆவதை தடுப்பது எப்படி?

ஜிமெயில் பயன்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய உதவியாய் இருப்பது சாட் வசதி. அதே சில சமயம் பிரச்சினை தரும் ஒன்றாக மாறிவிடும். காரணம் சம்பந்தமே இல்லாத பலர் சாட்டில் வந்து சேர்வது. வந்த பின் தடுக்கும் வசதி இருந்த போதிலும், அவர்கள் எல்லாம் வரும் முன்னரே தடுக்கும் வசதியும் உள்ளது. இரண்டையுமே பார்ப்போம். 


முதலில் இதற்கான காரணத்தை பார்த்து விடுவோம். முக்கிய காரணம் Google Plus தான். அதில் உள்ள உங்கள் நண்பர்கள், உங்களுக்கு அதிக நெருக்கமாய் உள்ளவர்கள்(comment மற்றும் Plus One செய்பவர்கள்). இவர்களை எல்லாம் பெரும்பாலும் ஜிமெயில் தானாகவே சாட்டில் சேர்த்து விடுகிறது.

அடுத்த காரணம் உங்கள் contact இல் சேரும் நண்பர்கள், இதுவும் நிறைய பேருக்கு பிரச்சினை தரும் ஒன்று. சரி தீர்வுக்கு வருவோம்.

உங்கள் Chat-இல் Automatic ஆக நண்பர்கள் சேர்வதை தடுக்க:


முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும். அதில் Chat என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இப்போது வரும் பக்கத்தில் Auto-add suggested contacts என்ற பகுதியில் கீழே உள்ளது போல தெரிவு செய்து Save செய்து விடவும்.


இனி, ஒருவர் உங்கள் Chat லிஸ்ட்க்குள் வரவேண்டும் என்றால் கண்டிப்பாய் நீங்கள் அவரது Request- ஐ Approve செய்தாக வேண்டாம். இதன் மூலம் தேவை இல்லாதவர்கள் உங்கள் Chat சேர்வதை தவிர்க்கலாம்.

உங்கள் Chat List-இல் உள்ள தேவையற்றவர்களை நீக்குவது எப்படி?


உங்கள் சாட் லிஸ்ட்டில் நிறைய தேவை இல்லாத நபர்கள் இருந்தாலோ அல்லது, சிலரை நீங்கள் வேண்டாம் என்று நினைத்தாலோ அவர்களை உங்கள் சாட் லிஸ்ட்டில் இருந்து நீக்கலாம்.

எந்த நபரை நீங்கள் நீக்க விரும்புகிறீர்களோ அவரது பெயருக்கு நேரே உங்கள் Mouse Cursor - ஐ கொண்டு செல்லவும். இப்போது ஒரு சிறிய பகுதி தோன்றும். அதில் More என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது வரும் மெனுவில் Block என்பதை கொடுத்து விடவும். அவ்வளவே இனி அந்த நபர் உங்கள் Chat List - இல் வர மாட்டார்.


அவ்வளவு தான், இனி தேவை இல்லாதவர்கள் உங்கள் சாட் லிஸ்டில் இருக்க மாட்டார்கள்.

பிளாக் செய்த நண்பர்களை மீண்டும் சாட்டில் வரவைப்பது என்று அடுத்த பதிவில் காண்போம். 

6 comments

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பா

Reply

உபயோகமான பதிவு நன்றி நண்பா...

Reply

வாரவாவ், கண்டேன் புதையலை ..! ரெண்டு நாளைக்கு முன்னால இதைத்தான் தேடிகிட்டு இருந்தேன்,

நன்றி நண்பரே ..!

Reply

நண்பரே...

"தேவையற்றவர்கள்" என்று எந்த மனிதனுமே இல்லை. எல்லா மனிதர்களுக்கும் பிறரின் சேவை தேவை. அதே போல, ஒவ்வொரு மனிதனும் பிறருக்குத் தேவை..

எனவே, "தேவையற்றவர்கள்" என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு!!

வேண்டுமெனில், அதற்குப் பதில் "நம்முடன் தொடர்பில்லாதவர்கள்" என்று சொல்லுங்கள்!

Reply

அருமையான, பயனுள்ள, அனைவருக்கும் தேவையுள்ள பதிவு..!!! பலருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
சூப்பர் பதிவு !!!
பகிர்வுக்கு நன்றி பிரபு..!!!

Reply

Post a Comment