முழு தளத்தையும் Screen Shot எடுப்பது எப்படி? | கற்போம்

முழு தளத்தையும் Screen Shot எடுப்பது எப்படி?

Screen Shot எடுப்பது பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். பல விசயங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் இதை எந்த மென்பொருளும் நிறுவாமலேயே பயன்படுத்த இயலும் என்ற போதிலும், அதை பயன்படுத்தி ஒரு முழு தளத்தையும் [scrolling ஆவதை] நம்மால் ஸ்க்ரீன் சாட் எடுக்க இயலாது. அதற்கு சில மென்பொருள்களை பயன்படுத்தி ஆக வேண்டும் . அதற்கு பயன்படும் மென்பொருள், தளம், Plug-in ஆகியவற்றை பதிவில் காண்போம்.1. Capturefullpage.comஇந்த தளத்தில் சென்று உங்களுக்கு ஸ்க்ரீன் சாட் எடுக்க வேண்டிய பக்கத்தின் முகவரி மட்டும் கொடுத்தால் போதும். அது முழு பக்கத்தையும் ஸ்க்ரீன் எடுத்து தந்து விடும்.


2. FireShot - Webpage Screenshots - Firefox Add-On

Firefox Browser பயன்படுத்தும் நண்பர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்க்ரீன் சாட் எடுக்கலாம். அதை முகபுத்தகத்தில் பகிரலாம், உங்கள் கணினியில் சேமிக்கலாம், பிரிண்ட் செய்யலாம்.  இதிலேயே இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது. 


3. Screen Capture - Chrome Add-On

Chrome பயன்படுத்தும் நண்பர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்க்ரீன் சாட் எடுக்கலாம். இதில் ஸ்க்ரீன் சாட் எடுக்க பல வித வசதிகளும் உள்ளன. குறிப்பிட்ட பகுதி, முழு பக்கம், முழு ஸ்க்ரீன் என. இதிலேயும் இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.


4. DuckLinkஸ்க்ரீன் சாட் எடுக்க பயன்படும் மிக அருமையான மென் பொருள் என்றால் அது இது தான். இதை நிறுவி விட்டு, தேவையான பக்கத்தை ஓபன் செய்து வைத்துக் கொண்டு ஸ்க்ரீன் சாட் எடுக்க கிளிக் செய்தால் போதும், அதன் பின்னர் இதிலேயே எடிட் செய்தும் கொள்ளலாம். 

இவற்றில் உங்களுக்கு விருப்பமானதை, எளிதானதை பயன்படுத்துங்கள்.  உங்களுக்கு தெரிந்த ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில்  சொல்லுங்கள், அதையும் பதிவில் சேர்த்து விடலாம்.

 - பிரபு கிருஷ்ணா

12 comments

பதிவர்களுக்கு மிகவும் பயன்படும் பதிவு இது

Reply

பயனுள்ள தளங்கள் மற்றும் நீட்சிகள் பகிர்வுக்கு நன்றி

Reply

பயனுள்ள தகவல்., பகிர்வுக்கு நன்றி நண்பரே ..!

Reply

நல்ல தகவல். நன்றி

Reply

நன்றி நண்பரே

Reply

அன்பின் பிரபு - தகவலுக்கு நன்றி - தேவைப் படும் போது பயன் படுத்துகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

பயனுள்ள தகவல் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Reply

நன்றி ஐயா

Reply

தகவலுக்கு நன்றி நண்பரே..

Reply

Post a Comment