விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 2 | கற்போம்

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 2

நேற்றைய பதிவில் Google Easter Eggs பற்றி சொல்லி இருந்தேன். பதிவின் நீளம் கருதி பத்து Easter Egg பற்றி சொல்லி இருந்தேன். இன்றைய பதிவில் இன்னும் சிலவற்றை காண்போம்.

Easter Egg என்றால் என்ன?

"ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன."
- விக்கிபீடியா

முதல் பத்தை இங்கே படிக்கலாம் -

விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1

11. jason isaacs


jason isaacs ஐ ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு தெரிந்து இருக்கும். அந்த படங்களின் வில்லனான இவர் பெயரை கூகுளில் தேடினால் கீழே உள்ளது போல வரும்.

12. recursion


எப்போதும் கூகுளில் தவறாக தேடினால் மட்டுமே Did you mean என்று கேட்கும். ஆனால் இதை தேடினால் இதே வார்த்தையை காட்டி Did you mean என்று கேட்கும். இதன் தமிழ் பொருள் "மறுநிகழ்வு". 

13. do a barrel roll


உங்கள் தேடுதல் முடிவை ஒரு சுற்று சுற்றி விட்டு தரும்.

14. anagram


இதை தேடினால் கூகுள் Did You Mean  "nag a ram" என்று காட்டும். anagram என்பதன் பொருள் "ஒரு சொல்லின் எழுத்துக்களில் இருந்து அமைக்கப்பட்ட இன்னொரு சொல்"15. "world cup", "world cup usa vs england", or "world cup brazil"  - இப்போது இல்லை


இவற்றை 2010 உலகக் கோப்பையின் போது நீங்கள் தேடி இருந்தால். தேடுதல் பக்கத்தின் கீழே Goooooooooogle என்பதற்கு பதில் Gooooooooooal என்று இருந்திருக்கும்.16. Games on Google


என்னைப் போன்று வெகு சிலருக்கு மட்டுமே கணினியில் விளையாட்டு விளையாட பிடிக்காது. ஆனால் பெரும்பாலோனோருக்கு பிடிக்கும் இதையும் விட்டு வைக்கவில்லை கூகுள். google.com/pacman என்ற முகவரியில் Pacman Game எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். 


அதே போல Angry Birds ரசிகர்களுக்கு அதை Chrome-இல் விளையாடும் வசதியும் உள்ளது. Angry Birds

கீழே உள்ள இரண்டும் வேறு தளத்தில் Chrome Experiment ஆக செயல்படும் Project-கள்

17. Google floating sphere


இது வேறு ஒரு Project தளத்தில் செயல்படுகிறது. உங்கள் படங்களை தேட இது பயன்படுகிறது. தேடுதலும், அதன் முடிவுகளும் ப்லோட்டிங் ஆவது அருமையாக இருக்கும். 


18. Google Gravity falling


கூகுள் முகப்பு பக்கம் போல இருக்கும் இந்த பக்கத்திற்கு நீங்கள் சென்றால் தேடுதல் பக்கம் கீழே சரிவதை காணலாம். எதையேனும் தேடினாலும் புவியீர்ப்பால் அவை கீழே விழுவது போல இருக்கும்.


- பிரபு கிருஷ்ணா

4 comments

விளையாட்டுகள் எல்லாம் நல்லா இருக்கு சகோ.!

Reply

நேற்றைய பதிவில் என்றிருக்கும் இடங்களில் முதல் பதிவிற்கான இணைப்பை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் நண்பா.!

Reply

ada - இப்படியும் இருக்கிறதா - மகிழ்ச்சி - பகிர்வினிற்கு நன்றி பிரபு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

நீங்கள் சொன்ன உடனே மாற்றி விட்டேன். நன்றி சகோ.

Reply

Post a Comment