மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி | கற்போம்

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி


இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். 

இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். 

இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு  Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும். 

நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள். 

அழைக்க வேண்டிய எண் - 155223

- பிரபு கிருஷ்ணா

18 comments

பலருக்கும் பயன் தரும் தகவல்... பகிர்கிறேன்... நன்றி...

Reply

Great job prabhu..

Reply

நன்றி பிரபு,

அநேகமாக அத்தனை சர்வீஸ்களிலுளும் மக்கள் இந்த வேல்யூ ஆடட் சர்வீஸ்களில் மாட்டிக்கொண்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு பின்பு அதுவே பழகிவிட்ட கோடானு கோடி பேர்க்கு இது (155223) ஒரு வரபிரசாதம்.

Reply

டெக் எழுதற நிறைய பதிவர்கள் இந்த மாதிரி சின்ன விசயங்கள் எழுத தயங்குவாங்க..

ஆனால் இந்த மாதிரி சின்ன விசயமா நினைச்சுக்கிட்டு இருக்கறதுதான் நிறையா பேருக்கு தெரியரதில்ல ..

இந்த மாதிரி பதிவுகள் போடும் பொழுது '' ஒரு ஆசிரியர் ஒரு ஆரம்ப பள்ளி மாணவனுக்கு அவனுக்கு புரியற மாதிரி சொல்லிக்கொடுப்பதை '' போல இருக்கிறது ..

மிக்க நன்றிங்க ..

Reply

தகவலுக்கு நன்றி நன்பா .
இது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரிவில்லை.
ஒரு குறிப்பிற்கு, நாம் இனையும் சேவைக்கு நமக்கு எஸ்ஸெம்ஸ் மூலம் உறுதி படுத்தினாள் மட்டுமேசேவையை தொடர ( அதாவது நாம் அவர்களுக்கு நமதுசெல் மூலம் பாஸ்வேர்டு ரிப்பிளை) வழிமுறையை ஏற்படுத்தினால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

Reply

நன்றி. கணக்கில் பணம் அதிகமிருந்தால், அவர்களே , பதிவு இறக்கம் செய்ததற்கு நன்றி என்று சொல்லி நூறு ரூபாய் வெட்டிக்கொள்கிரார்கள். கொடுமை. கஸ்டமர் கேர் வேஸ்ட்

Reply

Thanks hfor the useful info

Reply

Thanks for your valuable info..

Reply

usfull information for me
Thanks brother

Reply

Useful information for me . Thanks brother

Reply

பயனுள்ள தகவல் , மிக்க நன்றி .....

Reply

anaivarukkum payanulla padhivu nandri
surendran
surendranath1973@gmail.com

Reply

ரொம்ப நன்றி சகோ :-)

Reply

Good information, Keep it up

Reply

ITS NOT FREE CALL IF YOU HAVE BALANCE ONLY YOU CAN CALL THIS NUMBER.

Reply

Romba arumai nanba, karthikeyan

Reply

Post a Comment