இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராசசர்களுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன. நேற்று இன்டெல் நிறுவனம் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது. இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பசம்சங்கள்:
- கணினி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி
- பழைய மடிக்கணினிகளை* விட 50% அதிக Battery Life (படங்கள் - Upto 11.2 hrs, வேலைகள் - upto 10.3 hrs)
- ஆன் செய்த 3 நொடிகளில் கணினி இயங்க ஆரம்பித்துவிடும்.
- Gaming Experience பழைய கணினிகளை* 20 மடங்கு சிறப்பானதாக இருக்கும்.
- பழைய கணினிகளை* விட நான்கு மடங்கு அதிக வேகம்.
- 20 நிமிட HD Video - களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி.
- Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8rSBND2fbBVWXt0M0f4oM1RAy5Y23f2jRgjDpPO_TMui647dqVAQEN82K9-plOL0ELYeQSpREoXbB-6rcVY7Fu92Cr4TYqLCnPhAfj8890fOYLnJ-IAgywsCsZp-_xDQzjflr3PkXCn4/s640/intel4thgen.jpg)
Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட பிரபலமான கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த 4ம் தலைமுறை இன்டெல் ப்ராசசர்களுடன் கணினி, மடிக்கணினிகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
* பழைய கணினி - நான்கு வருடம் பழையது
- பிரபு கிருஷ்ணா
Post a Comment