பேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல் | கற்போம்

பேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல்

Facebook Page - களில் ஒரு முக்கியமான வசதி Insights. இதன் மூலம் உங்கள் Page குறித்த முழுத் தகவல்களையும் நீங்கள் காண முடியும். Likes, Shares, Comments, Reach, Engagement என்று பலவற்றை இதில் நீங்கள் பார்க்கலாம். இதைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால் உங்கள் Page Likes, shares போன்றவற்றை மேம்படுத்த இயலும். பல மாதங்களாக Insights இருந்தாலும் தற்போது அறிமுகம் ஆகி உள்ள புதிய Insights பற்றி இந்த பதிவில் காண்போம்.

உங்கள் Facebook Page-இல் Cover Photo-வுக்கு மேலே Insights என்று ஒன்று இருக்கும்.அதில் See All என்பதை கிளிக் செய்யுங்கள்.


1. Overview


இந்த பக்கத்தில் கடந்த ஏழு நாட்களுக்கான Page Likes, Post Reach, Engagement போன்றவற்றை காணலாம். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் உங்கள் Page எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


2.  Page


இதை கிளிக் செய்தால் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் Page Likes, Post Reach, Page Visits போன்றவற்றை அறியலாம்.

Page Likes பகுதியில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு Likes, Unlikes வந்துள்ளது. எங்கிருந்து லைக் செய்துள்ளார்கள் போன்ற தகவல்களை காணலாம். ஒவ்வொன்றையும் கிளிக் செய்து ஒரு நாளில் வந்த Like எங்கிருந்து வந்தது Dislike செய்த இடம் எது போன்ற தகவல்களை அறியலாம். Dislikes அதிகமாக இருப்பின் அதை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.இதே பகுதியில் Post Reach என்பதில் உங்கள் போஸ்ட்களை எத்தனை பேர் பார்த்தார்கள், அதற்கு வந்த Likes, Comments, Shares, Hide, Report as Spam and Unlikes போன்ற தகவல்களை காணலாம். Hide, Report as Spam and Unlikes பகுதி மிக முக்கியமானது. இதில் எந்த போஸ்ட்டை நீங்கள் பகிர்ந்த போது அதிக Negative Response கிடைத்தது என்பதை அறியலாம்.இதற்கு அடுத்து உள்ள Page Visits என்ற பகுதியில் உங்கள் Page - இல் நடந்த Activity-களை காணலாம். குறிப்பிட்ட Tab-ஐ பார்த்தவர்கள் எண்ணிக்கை, உங்கள் Page-ஐ Tag செய்தவர்கள் எண்ணிக்கை, Page-இல் போஸ்ட் செய்தவர்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களை காணலாம். இதில் இன்னொரு முக்கிய வசதி எந்த தளத்தில் இருந்து உங்கள் Page க்கு அதிகாக வந்துள்ளார்கள் என்று. அது External Referrers என்ற பகுதியில் இருக்கும்.

3. Posts


இதில் மூன்று வகையான தகவல்களை காணலாம்.  All Posts, When Your Fans Are Online, Best Post Types என்ற இந்த மூன்றுமே மிக முக்கியமானவை.All Posts என்பதில் நீங்கள் பகிர்ந்த போஸ்ட் ஒவ்வொன்றும் எவ்வளவு Likes, Comments, Shares, Reach போன்றவற்றை பெற்றுள்ளது என்று காணலாம். இதன் மூலம் எது குறித்த தகவல் அதிகம் பேரை கவர்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

When Your Fans Are Online - இந்த வசதி ரொம்பவே முக்கியமானது. நாம் போஸ்ட் செய்யும் நேரத்தில் Fans ஆன்லைனில் இல்லாவிட்டால் போடும் போஸ்ட் நிறைய பேரை சென்றடையாது. அதனால் இதன் மூலம் என்று அதிகமான Fans ஆன்லைனில் இருக்கிறார்கள், அதுவும் எந்த நேரத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்து பகிரலாம்.

Best Post Types - உங்கள் Facebook பக்கத்தில் போஸ்ட்களை Status, Photo, Link என்ற பகிரலாம். இதில் எந்த வகையான போஸ்ட் அதிகம் பேரை சென்றடைந்துள்ளது என்று இதன் மூலம் அறியலாம். பெரும்பாலும் போட்டோவுடன் பகிர்ந்தால் நிறைய பேருக்கு Reach ஆகும்.

4. People 


இந்த பகுதியில் Your Fans, People Reached, People Engaged போன்ற தகவல்களை காணலாம்.

Your Fans என்பதில் யார் அதிகம் லைக் செய்துள்ளார்கள் ஆண்களா? பெண்களா ? என்று அறியலாம். அத்தோடு எந்த இடத்தில் இருந்து லைக் செய்துள்ளார்கள், எந்த மொழி அறிந்தவர்கள் என்றும் காணலாம்.People Reached என்பதில் கடந்த ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு முறையேனும் உங்கள் போஸ்ட்களை பார்த்த நபர்களை காணலாம். இதிலும் ஆண், பெண், இடம், மொழி போன்றவற்றை அறியலாம்.

 People Engaged என்பதிலும் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் பேஜ் போஸ்ட்களை Like, Comment, Share செய்த ஆண், பெண், இடம், மொழி போன்ற தகவல்களை அறியலாம்

இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு பல ஐடியாக்கள் கிடைக்கும். அதன் படி உங்கள் Facebook Page-ஐ நீங்கள் மேம்படுத்த இயலும். இந்த தகவல்களை Export Data என்ற வசதி மூலம் டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

- பிரபு கிருஷ்ணா

Post a Comment