கற்போம்: Facebook | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 7

கடந்த சில கட்டுரைகளில் YouTube மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதை முயற்சி செய்து சில நண்பர்கள் வெற்றி பெற்றுள்ளதை பகிர்ந்தனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள் :). இந்த கட்டுரையில் பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.
இன்றைக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களை கிட்டத்த்ட்ட விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு பேஸ்புக் அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது. பேஸ்புக்கில் ஒரு நாளில் சராசரியாக ஒருவர் 1 மணி நேரம் பேஸ்புக்கில் இருக்கிறார். அந்த ஒரு மணி நேரத்தை நான் சொல்லும் படி செலவிட்டால் யாராய் இருந்தாலும் ஓரளவிற்கு சம்பாதிக்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.




பேஸ்புக் பேஜ்:

இந்த முறையில் பேஸ்புக் பேஜ்கள் மிக முக்கியமான வேலையை செய்கின்றன. இன்றைக்கு பேஸ்புக்கில் நாம் பல பேஜ்களை லைக் செய்து தொடர்ந்து வருகிறோம். நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இணையதளங்கள், நிறுவனங்கள் என்று பல. இது மட்டுமின்றி தனிநபர்கள் தொடங்கும் பேஸ்புக் பேஜ்களும் நம் மத்தியில் பிரபலம். Troll Pages, Meme Pages என பல இதில் அடக்கம். இவற்றில் தனி நபராக இரண்டாவதை நீங்கள் செய்ய முடியும்.

பேஜில் என்ன செய்ய வேண்டும்?

பேஸ்புக் மூலம் சம்பாதிக்க நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஒரு பேஸ்புக் பேஜ் உருவாக்க வேண்டும் [எப்படி பேஸ்புக் உருவாக்குவது என்பதை www.karpom.com இல் படிக்கலாம் ]. மேலே சொன்னது போல Troll, Meme போன்றவற்றை அதில் பகிரலாம். YouTube போலவே இதிலும் Copyright என்பது உள்ளது. எனவே வீடியோ, போட்டோக்களை பகிரும் போது கவனம் அவசியம். அடுத்தவர்களுக்கு சொந்தமானதை பகிர்ந்தால் உங்களுக்கு பிரச்சினை வரலாம்.

அப்படி பார்த்தால் பெரும்பாலானவை அடுத்தவர்களுக்கு சொந்தமானது தானே என்ற கேள்வி எழலாம். Troll, Meme போன்றவற்றில் நீங்கள் சினிமா அல்லது வேறு நபர்களுக்கு சொந்தமானதை பகிர்ந்தாலும் அதில் உங்கள் க்ரியேட்டிவிட்டி இருக்கும் பட்சத்தில் அதை Fair Use என்று கூறலாம். பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இதை அனுமதிக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு சொந்தமானதை அப்படியே உங்கள் பேஜில் பகிரும் போது குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திடம் அனுமதி பெற்றும் பகிரலாம்.

இது எல்லாமே பேஜில் நீங்கள் லைக்ஸை அதிகமாக்க மட்டுமே. இதன் மூலம் நிறைய லைக்ஸ் பெற முடியும். நிறைய லைக்ஸ் என்றால் நிறைய ஆடியன்ஸ்.

எப்படி பணம் சம்பாதிப்பது?

இந்த தொடரின் முதல் கட்டுரையில் எப்படி ஒரு இணையதளம்/ப்ளாக் தொடங்குவது என்று சொல்லி இருந்தேன். அது மாதிரியான தளங்களை கொண்டிருப்பவர்கள் தங்கள் தளத்திற்கு வாசகர்களை வர வைக்க பல ப்ரமோஷன்களை செய்கிறார்கள். அதில் சில தளங்கள் பேஸ்புக் பேஜ்கள் மூலம் தங்கள் தளத்திற்கு வாசகர்களை வரவழைத்தால் குறிப்பிட்ட பேஜ் அட்மின்களுக்கு பணம் கொடுப்பார்கள். எவ்வளவு வாசகர்கள் வருகிறார்களோ அதற்கேற்றார் போல பணம் கிடைக்கும். நீங்களும் உங்கள் பேஸ்புக் பேஜில் அந்த தளங்களின் பதிவுகளை பகிர்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இந்த தளங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் தான் இருக்கும். தமிழில் இதுவரை எதுவும் அப்படி கிடையாது.

Viral9

இது இந்தியாவை சேர்ந்த தளம். இதில் அக்கவுண்ட் உருவாக்க உங்கள் பேஜ் 50000 லைக்குகளை கொண்டிருக்க வேண்டும். தினமும் எந்த போஸ்ட் அதிகமாக பார்க்கப்படுகிறது உட்பட பல ஐடியாக்களை கொடுக்கிறார்கள். எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை உடனடியாக பார்க்கும் வசதி இதன் சிறப்பு. இந்திய தளம் என்பதால் கொஞ்சம் பாலிவுட், இந்தியா பற்றிய பதிவுகளை இதில் பார்க்க முடியும்.
100$ சம்பாதித்த உடன் உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவார்கள். மாத முறையில், நமக்கு தேவைப்படும் நேரத்தில் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

தள முகவரி - www.viral9.com

MyLikes

வைரல்9 போலவே தான் இதுவும். ஆனால் இவ்வளவு லைக்ஸ் தேவை என்ற கட்டுப்பாடு இதில் இல்லை. எத்தனை லைக்ஸ் இருந்தாலும் எளிதில் அக்கவுண்ட் உருவாக்கி கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் வெள்ளி அன்று அல்லது மாதாமாதம் பணம் உங்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.
இதில் 3 வழிகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம். Paypal மூலம் பெற 20$ உங்கள் கணக்கில் இருந்தால் போதும். இந்த முறையை ஒவ்வொரு வாரமும் பணம் பெற்றுக் கொள்ளலாம். வங்கி கணக்கில் பெற அக்கவுண்டில் 50$ இருக்க வேண்டும். இதில் மாதாமாதம் பணம் கிடைக்கும். Amazon Gift Card என்பது மூன்றாவது வழி. இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் Amazon தளத்தில் பொருட்களை வாங்கலாம்.

Fan2Cash

இந்த தளமும் மேலே உள்ளவற்றை போலவே தான். இதில் குறைந்தபட்சம் 200$ சம்பாதித்து இருந்தால் மட்டுமே வங்கி கணக்கில் பணம் பெற முடியும். இதில் அக்கவுண்டை உருவாக்க குறைந்தபட்ச லைக்ஸ் எதுவும் இருக்க தேவையில்லை.

பேஸ்புக்கில் இதுவரை எவ்வளவு நேரம் நீங்கள் வீண் செய்துள்ளீர்கள் ?

பத்தாண்டுகளை கடந்துள்ள பேஸ்புக்கில் நாம் இழந்துள்ள நேரம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகம். இன்று பலர் இணையத்திற்கு  வருவதே பேஸ்புக் தான் பயன்படுத்த தான் என்று ஆகிவிட்டது.



நேரம் காலம் இல்லாமல் அப்படி எவ்வளவு நேரம் தான் நீங்கள் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் ? அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள பாக்ஸில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து ஓபன் ஆகும் பாப்-அப் விண்டோவில் "Okay" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது Next என்பது Start என்று மாறி இருக்கும்.

இப்போது நீங்கள் ஒரு நாள்/வாரம்/மாதத்திற்கு எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை முடித்தவுடன் "Start" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது சில நிமிடங்கள் காத்திருங்கள், நீங்கள் பேஸ்புக்கில் கணக்கை ஆரம்பித்த நாளில் இருந்து எவ்வளவு நேரம் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

(Letters க்கு மேலே உள்ள நம்பர்களை பயன்படுத்தவும். Num Lock பகுதியில் உள்ள எண்கள் மூலம் டைப் செய்ய முடியாது)

கற்போம் மார்ச் மாத இதழ் – Karpom March 2014

கற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:


  1. பேஸ்புக் சந்தித்த 10 திருப்புமுனைகள்
  2. இந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப்
  3. பேஸ்புக் மூலம் சிறுவனுக்கு கிடைத்த 20 லட்சம் நண்பர்கள்
  4. சாம்சங் கேலக்சி எஸ் 5 சிறப்பம்சங்கள்
  5. விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்
  6. கணினி துறையை விட்டு விலகுகிறது சோனி நிறுவனம்
  7. அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் - வழிகாட்டும் இணையதளங்கள்
  8. Windows Reboot எதனால் அவசியமாகிறது ?
  9. ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்
  10. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கிய பின்னணி
  11. ஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?
தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கில் Trusted Contacts என்றால் என்ன? ஏன் அதை பயன்படுத்த வேண்டும் ?

இன்றைக்கு நம் பேஸ்புக் பக்கத்தை யாரேனும் ஹாக் செய்து விட்டால், கிட்டத்தட்ட நம் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இன்னொருவர் கைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதனாலேயே பேஸ்புக் தனது பயனர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதில் ஒரு புதிய பாதுகாப்பு வசதி தான் "Trusted Contacts". அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.



Trusted Contacts என்றால் என்ன? 

பாஸ்வேர்டை மறந்துவிட்ட காரணத்தினாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாதாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயில் மூலம் நம் கணக்கை திரும்ப பெறலாம். நம்மால் ஈமெயில் கணக்கை அக்செஸ் செய்ய முடியவில்லை என்றால் நம் Trusted Contacts மூலமும் நம் கணக்கை திரும்ப பெற இயலும்.

இதன் முக்கிய அவசியம் என்னவெனில் நம்மால் ஈமெயில், போன் மூலமும் நம் பேஸ்புக் கணக்கை திரும்ப பெற முடியவில்லை என்றால் Trusted Contacts இல்லை என்றால் நம் கணக்கை திரும்ப பெறுவது மிக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் இந்த வசதியை நாம் பயன்படுத்தினால் நம் கணக்கை திரும்ப பெறுவது எளிதாகும்.

அதே சமயம் Trusted Contacts என்பதில் பெயருக்கு ஏற்றார் போல உங்களுக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் சேருங்கள், அதே போல பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்தும் நண்பராகவும் அவர் இருக்கட்டும்.

எப்படி Trusted Contacts-ஐ சேர்ப்பது? 

உங்கள் பேஸ்புக் கணக்கில் Settings >> Security என்ற பக்கத்திற்கு செல்லவும். இப்போது கீழே உள்ளது போல Trusted Contacts என்ற ஒரு பகுதி இருக்கும்.



அதில் "Choose Trusted Contacts" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது எப்படி Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற இயலும் என்ற சொல்லப்பட்டிருக்கும். அதிலும் "Choose Trusted Contacts" என்பதை கிளிக் செய்யுங்கள்.



இப்போது அடுத்த விண்டோவில் உங்களின் Trusted Contacts-ஐ நீங்கள் Add செய்யலாம்.



இதில் 3-5 நண்பர்களை நீங்கள் சேர்க்கலாம்.



இவர்கள் மூலம் எப்படி பேஸ்புக் கணக்கை மீட்க முடியும் என்பதை இன்னொரு பதிவில் காண்போம்.
- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கில் புதிய வசதி - ஷேர் செய்த பிறகு Statusஐ எடிட் செய்யலாம்

பேஸ்புக் தளம் அவ்வப்போது புதிய வசதிகளை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தான் எப்போதும் ராஜா என்பதை நிரூபித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வந்துள்ள புதிய வசதி நாம் பகிர்ந்த Status களை Edit செய்யும் வசதி. இதன் மூலம் நாம் ஒரு Status - இல் ஏதேனும் எழுத்துப் பிழை செய்திருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம்.

இதை செய்ய நீங்கள் ஏற்கனவே பகிர்ந்த Status ஒன்றிற்கு செல்லுங்கள். அதில் வலது மூலையில் உள்ள Options Icon ஐ கிளிக் செய்யுங்கள். அதில் Edit ஒன்று ஒரு புதிய வசதி வந்திருக்கும்.



இப்போது மாற்றம் செய்யும் வசதி வரும். தேவையான மாற்றத்தை செய்யுங்கள். பின்னர் Done Editing என்பதை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவு தான் உங்கள் Status எடிட் செய்யப்பட்டு விட்டது. ஆனால் இதை வைத்து ஏதும் ஏமாற்றும் வேலைகளை நீங்கள் செய்ய முடியாது. காரணம் Edit செய்து முடித்தவுடன் Done Editing என்று வந்து விடும். இதனால் நீங்கள் எப்போது, என்ன மாற்றம் செய்தீர்கள் என்று எல்லாமே வந்து விடும். யாரெல்லாம் போஸ்டை பார்க்க முடியுமோ அவர்களால் நீங்கள் எடிட் செய்ததையும் பார்க்க முடியும்.



ஏதேனும் தவறாக எழுதி இருப்பின் இதை பயன்படுத்தி மாற்றம் செய்யலாம். இது நிறைய பேருக்கும் பயன்படும் வசதியாக இருக்கும்.

Facebook Android App-ஐ பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் ஆகியுள்ளது. iPhone பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி கிடைக்கும்.

பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? - எச்சரிக்கை

அவ்வப்போது பேஸ்புக்கில் ஏதாவது ஒரு ஸ்பாம் வந்து நிறைய பயனர்களின் வயிற்றில் புளியை கரைக்கும். அந்த வகையில் தற்போது வந்துள்ள விஷயம் நமக்கே தெரியாமல் ஆபாச பக்கங்களை லைக் செய்துள்ளதாக வருவது. இந்த பிரச்சினையின் முழு விவரம் இன்னும் தெரிய வரவில்லை. எனவே ஒரு தற்காலிக வழி ஒன்றை இப்போது பகிர்கிறேன். முழு விவரமும் தெரியும் போது மற்ற விவரங்கள் பகிரப்படும்.


இதற்கு முன்பு இம்மாதிரி நடந்த விஷயங்களுக்கு முக்கிய காரணம் Facebook Apps. எனவே அவற்றை நீக்குவது இதற்கு ஒரு தற்காலிக தீர்வாக இருக்கும். இந்த பிரச்சினை இல்லாதவர்கள் கூட இதை செய்யலாம்.

இதை செய்ய உங்கள் பேஸ்புக் கணக்கில் Privacy Settings பகுதிக்கு வரவும்.



இதில் இடது பக்கம் Apps என்று உள்ளதை தெரிவு செய்யவும்.



இப்போது App Settings-ல் Apps you use பகுதியில் நீங்கள் பயன்படுத்தி வரும் Apps இருக்கும். அதில் உங்களுக்கு சந்தேகமான, தேவையற்ற அல்லது எல்லாவற்றையும் வலது பக்கம் உள்ள x மீது கிளிக் செய்து Remove செய்யுங்கள்.



நான் இதுவரை எந்த App-ம் பயன்படுத்தியது இல்லை, இனிமேலும் பயன்படுத்தட்ட மாட்டேன் என்பவர்கள், "Use apps, plugins, games and websites on Faceook and elsewhere ?" என்று உள்ளதில் On என்று இருப்பதை Edit என்பதை கிளிக் செய்து Off செய்யலாம்.



இதை செய்து முடித்த பிறகு. ஒரு முறை உங்கள் பேஸ்புக் கணக்கில் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் பக்கம் பிரச்சினை இல்லை.

இனி நீங்கள் என்ன செய்யக்கூடாது ?

  • உங்கள் பேஸ்புக் போஸ்ட்/போட்டோ/லிங்க்கிற்கு நண்பர்கள் யாரேனும் தொடர்பில்லாத கமெண்ட்டை பகிர்ந்தால் முக்கியமாக ஏதேனும் லிங்க்குடன் இருந்தால் அதை கிளிக் செய்யாதீர்கள். அது பெரும்பாலும் ஸ்பாம் ஆக இருக்கும். இதில் சந்தேகம் இருப்பின் குறிப்பிட்ட நண்பரை கூப்பிட்டு அவர்தான் பகிர்ந்தாரா என்று கேளுங்கள்.
  • அதே போல எந்த நண்பரேனும் அவருக்கு சம்பந்தம் இல்லாத, தெரியாத விஷயத்தை பகிர்ந்தால் அதையும் நம்பாதீர்கள். இதுவும் ஸ்பாம் ஆக இருக்கும்.
  • இந்த வகையான App ஆபாச பெயரிலோ அல்லது படத்துடன் தான் இருக்கும் என்ற அவசியமில்லை. மாறாக சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை, படத்துடனும் வரலாம். எனவே தொடர்பில்லாத எதையும் தொடாதீர்கள் :-)


பேஸ்புக்கில் உங்கள் Privacy ஐ பாதுகாக்க Facebook Privacy Settings பகுதியில் நீங்கள் செய்ய வேண்டியவை என்ற பதிவை படியுங்கள்.

இது தற்காலிக தீர்வு மட்டுமே. இதுவே நிரந்த தீர்வாக கூட இருக்கலாம். முழு விவரமும் தெரிந்த பின்னர் இன்னொரு பதிவை விரிவாக எழுதுகிறேன்.

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல்

Facebook Page - களில் ஒரு முக்கியமான வசதி Insights. இதன் மூலம் உங்கள் Page குறித்த முழுத் தகவல்களையும் நீங்கள் காண முடியும். Likes, Shares, Comments, Reach, Engagement என்று பலவற்றை இதில் நீங்கள் பார்க்கலாம். இதைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால் உங்கள் Page Likes, shares போன்றவற்றை மேம்படுத்த இயலும். பல மாதங்களாக Insights இருந்தாலும் தற்போது அறிமுகம் ஆகி உள்ள புதிய Insights பற்றி இந்த பதிவில் காண்போம்.

உங்கள் Facebook Page-இல் Cover Photo-வுக்கு மேலே Insights என்று ஒன்று இருக்கும்.அதில் See All என்பதை கிளிக் செய்யுங்கள்.


1. Overview


இந்த பக்கத்தில் கடந்த ஏழு நாட்களுக்கான Page Likes, Post Reach, Engagement போன்றவற்றை காணலாம். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் உங்கள் Page எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


2.  Page


இதை கிளிக் செய்தால் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் Page Likes, Post Reach, Page Visits போன்றவற்றை அறியலாம்.

Page Likes பகுதியில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு Likes, Unlikes வந்துள்ளது. எங்கிருந்து லைக் செய்துள்ளார்கள் போன்ற தகவல்களை காணலாம். ஒவ்வொன்றையும் கிளிக் செய்து ஒரு நாளில் வந்த Like எங்கிருந்து வந்தது Dislike செய்த இடம் எது போன்ற தகவல்களை அறியலாம். Dislikes அதிகமாக இருப்பின் அதை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.



இதே பகுதியில் Post Reach என்பதில் உங்கள் போஸ்ட்களை எத்தனை பேர் பார்த்தார்கள், அதற்கு வந்த Likes, Comments, Shares, Hide, Report as Spam and Unlikes போன்ற தகவல்களை காணலாம். Hide, Report as Spam and Unlikes பகுதி மிக முக்கியமானது. இதில் எந்த போஸ்ட்டை நீங்கள் பகிர்ந்த போது அதிக Negative Response கிடைத்தது என்பதை அறியலாம்.



இதற்கு அடுத்து உள்ள Page Visits என்ற பகுதியில் உங்கள் Page - இல் நடந்த Activity-களை காணலாம். குறிப்பிட்ட Tab-ஐ பார்த்தவர்கள் எண்ணிக்கை, உங்கள் Page-ஐ Tag செய்தவர்கள் எண்ணிக்கை, Page-இல் போஸ்ட் செய்தவர்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களை காணலாம். இதில் இன்னொரு முக்கிய வசதி எந்த தளத்தில் இருந்து உங்கள் Page க்கு அதிகாக வந்துள்ளார்கள் என்று. அது External Referrers என்ற பகுதியில் இருக்கும்.

3. Posts


இதில் மூன்று வகையான தகவல்களை காணலாம்.  All Posts, When Your Fans Are Online, Best Post Types என்ற இந்த மூன்றுமே மிக முக்கியமானவை.



All Posts என்பதில் நீங்கள் பகிர்ந்த போஸ்ட் ஒவ்வொன்றும் எவ்வளவு Likes, Comments, Shares, Reach போன்றவற்றை பெற்றுள்ளது என்று காணலாம். இதன் மூலம் எது குறித்த தகவல் அதிகம் பேரை கவர்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

When Your Fans Are Online - இந்த வசதி ரொம்பவே முக்கியமானது. நாம் போஸ்ட் செய்யும் நேரத்தில் Fans ஆன்லைனில் இல்லாவிட்டால் போடும் போஸ்ட் நிறைய பேரை சென்றடையாது. அதனால் இதன் மூலம் என்று அதிகமான Fans ஆன்லைனில் இருக்கிறார்கள், அதுவும் எந்த நேரத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்து பகிரலாம்.

Best Post Types - உங்கள் Facebook பக்கத்தில் போஸ்ட்களை Status, Photo, Link என்ற பகிரலாம். இதில் எந்த வகையான போஸ்ட் அதிகம் பேரை சென்றடைந்துள்ளது என்று இதன் மூலம் அறியலாம். பெரும்பாலும் போட்டோவுடன் பகிர்ந்தால் நிறைய பேருக்கு Reach ஆகும்.

4. People 


இந்த பகுதியில் Your Fans, People Reached, People Engaged போன்ற தகவல்களை காணலாம்.

Your Fans என்பதில் யார் அதிகம் லைக் செய்துள்ளார்கள் ஆண்களா? பெண்களா ? என்று அறியலாம். அத்தோடு எந்த இடத்தில் இருந்து லைக் செய்துள்ளார்கள், எந்த மொழி அறிந்தவர்கள் என்றும் காணலாம்.



People Reached என்பதில் கடந்த ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு முறையேனும் உங்கள் போஸ்ட்களை பார்த்த நபர்களை காணலாம். இதிலும் ஆண், பெண், இடம், மொழி போன்றவற்றை அறியலாம்.

 People Engaged என்பதிலும் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் பேஜ் போஸ்ட்களை Like, Comment, Share செய்த ஆண், பெண், இடம், மொழி போன்ற தகவல்களை அறியலாம்

இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு பல ஐடியாக்கள் கிடைக்கும். அதன் படி உங்கள் Facebook Page-ஐ நீங்கள் மேம்படுத்த இயலும். இந்த தகவல்களை Export Data என்ற வசதி மூலம் டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி?

பேஸ்புக் பேஜ்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். பல தனியார்/அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நபர்கள் இவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் ஒரு பேஜ் வைத்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பேஜில் பகிர நினைத்து அந்த நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் பகிர முடியாமல் போகலாம். அதை சமாளிக்க பேஸ்புக் பேஜ்களில் உள்ள ஒரு வசதி தான் போஸ்ட்களை Schedule செய்வது. 

பேஸ்புக் சாட்டில் Sticker வசதி - தற்போது கணினிகளுக்கும்

அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல் கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.



Facebook Game மற்றும் Application Request-களை தடுக்க புதிய வழி


எப்போது நாம் பேஸ்புக்கில் நுழைந்தாலும் யாரேனும் நண்பர்கள் நமக்கு Game மற்றும் Application Request களை தந்திருப்பார்கள். அது போன்ற அழைப்புகளை நாம் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது. 

அவற்றை தடுக்க முன்பு Privacy Settings பகுதியில் Block செய்யும் முறையை பகிர்ந்திருந்தேன். இம்முறை சொல்லப்போகும் வழி இன்னும் எளிதானது. 

உங்களுக்கு வந்திருக்கும் Request -கள் வலது புற Side Bar பகுதியில் இருக்கும். 


இப்போது அதன் மீது Mouse ஐ Hover செய்தால் வலது புறம் ஒரு சிறிய பெருக்கல் குறி (X) தோன்றும். அதன் மீது கிளிக் செய்யுங்கள். 

அதில் இரண்டு வசதிகள் இருக்கும் ஒன்று Remove All Requests மற்றொன்று Block. Block என்பதில் Game பெயரும் இருக்கும். 


Remove All Requests என்பதை கொடுத்தால் தற்போது வந்துள்ள Game மற்றும் Application Request கள் நீக்கப்பட்டு விடும். Block என்பதை கிளிக் செய்து பின்னர் Confirm செய்தால் குறிப்பிட்ட Game அல்லது Application ஐ நீங்கள் Block செய்து விடலாம். 

மறுபடி வேறு நண்பர்கள் குறிப்பிட்ட Game அல்லது Application Request ஐ உங்களுக்கு அனுப்பும் போது அது வராது. 

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக் பேஜில் Threaded Comments வசதியை Enable செய்வது எப்படி?


கடந்த சில மாதங்களாகவே சில பேஸ்புக் பேஜ்களில் கமெண்ட்களுக்கு Reply செய்யும் வசதி இருந்தது. அதை தற்போது அனைத்து பேஜ்களுக்கும் கொண்டு வந்துள்ளது பேஸ்புக். இதை எப்படி Enable செய்வது இதனால் என்ன பலன் என்று பார்ப்போம். 

பலன்கள்: 

பேஸ்பு பேஜில் ஒருவரின் கமெண்ட்க்கு பதில் சொல்லும் போது அவரின் பெயரின் @ Mention செய்து பின்னர் பதில் சொல்வோம். சில சமயம் நாம் Reply செய்தது அவருக்கு தெரியாமல் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் நேரடியாக ஒருவரின் கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் கமெண்ட்டில் Reply செய்திடலாம்.அது கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும். 

எப்படி Enable செய்வது ?

1. முதலில் உங்கள் பேஸ்புக் பேஜ்க்கு செல்லுங்கள். அதில் Edit Page என்பதை கிளிக் செய்து அதில் Manage Permission என்பதை கிளிக் செய்யுங்கள். 



2. இப்போது வரும் பக்கத்தில் Replies என்பதில் Allow replies to comments on my Page என்பதை கிளிக் செய்து விடுங்கள்.  

இப்போது உங்கள் பேஜ் போஸ்ட்களுக்கு ஒருவர் கமெண்ட் செய்தால் அதில் Reply வசதி இருக்கும். 


நீங்கள் கமெண்ட்க்கு Reply செய்தால், கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும். 


- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?

பேஸ்புக் என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி செய்வது எப்படி எப்படி என்று பார்ப்போம். 

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அலுவலகத்தில் இருக்கும் போது பேஸ்புக் பயன்படுத்தினால் மேலாளருக்கு மட்டும் நாம் போடும் பதிவுகள் தெரியக்கூடாது என்று விரும்பினால் அவ்வாறு செய்யலாம். 

முதலில் குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின் கீழே படத்தில் உள்ளது போல Public என்பதை கிளிக் செய்யுங்கள்.சிலருக்கு அது Friends என்று இருக்கக் கூடும். வரும் Drop-Down மெனுவில் Custom என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது வரும் பகுதியில் "Don't share this with These people or lists" என்பதில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு List வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம். 



ஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராக கொடுங்கள். 

நிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டு கொள்ளுங்கள்.பின்னர் லிஸ்ட் பெயரை தெரிவு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது. 


இதை முடித்து விட்டு Save Changes கொடுத்து விட்டு Post செய்து விட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது. 

- பிரபு கிருஷ்ணா

Facebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி?


பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை நம் நண்பர்கள் ஏதேனும் Application அல்லது Game பயன்படுத்தும் போது நமக்கும் அதை பயன்படுத்த சொல்லி Invite வருவது. அது போன்ற அழைப்புகளை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு வரும் Invite கீழே உள்ளது போல இருக்கும்.


இப்போது நீங்கள் இரண்டு விசயங்களை Block செய்யலாம் ஒன்று Invitation அனுப்பும் நபரை அது அனுப்ப இயலாதவாறு செய்யலாம். இதனால் அவர் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் இருப்பார், உங்கள் status களை அவரால் பார்க்க முடியும். அவரால் உங்களுக்கு எதுவும் Game, Application Request அனுப்ப இயலாது அவ்வளவே.

இரண்டாவது குறிப்பிட்ட Game அல்லது Application- ஐ Block செய்வது. இதனால் யார் அந்த Game அல்லது Application invite அனுப்பினாலும் உங்களுக்கு வராது.

நான் பரிந்துரைப்பது முதலாவது. வேண்டும் என்றால் இரண்டாவதையும் நீங்கள் செய்து கொள்ளலாம்.

இப்போது Facebook >> Privacy Settings பகுதிக்கு வரவும் (காண்க கீழே படம்)



வரும் பக்கத்தின் இடது புற Side Bar பகுதியில் Blocking என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது Manage Blocking என்ற இந்த பக்கத்தில் "Block app invites" என்ற பகுதியில்  Invite அனுப்பும் நண்பரின் பெயரை கொடுக்க வேண்டும். இதனால் இனிமேல் அவரிடம் இருந்து உங்களுக்கு Invite எதுவும் வராது.


அடுத்து "Block Apps" என்ற பகுதியில் குறிப்பிட்ட Application அல்லது Game பெயரை கொடுத்து அவற்றையும் Block செய்யலாம்.


அவ்வளவு தான் இனி Game, Application  என எந்த தொல்லையும் இல்லாமல் பேஸ்புக்கில் உங்கள் வேலையை பார்க்கலாம்.

பின் குறிப்பு: இதே பக்கத்தில் நீங்கள் Event Invite அனுப்பும் நபர்களை கூட Block செய்யலாம். "Block event invites" என்ற பகுதியில் அதை செய்யலாம்.

- பிரபு கிருஷ்ணா

ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்


எந்த துறை வளர்கிறதோ அந்த துறையில் அதற்கேற்றார் போல் மோசடி நபர்களும் நுழைவார்கள். இதற்கு இப்போதையை இணையமும் விதிவிலக்கல்ல. தற்போதைய சூழ்நிலையில் மிக அதிகம் பேர் ஏமாறும் துறையும் இது தான். இதில் நடக்கும் சில மோசடிகளையும், அதில் தப்பிக்கும் வழிகளையும் பார்ப்போம். 

1. நேரடியாக பணம் தருவதாக சொல்லும் செய்திகள்

இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து உங்களுக்கு சில கோடிகள் கிடைத்துள்ளது என்றும் அதை உங்களுக்கு அனுப்ப உங்கள் தகவல்கள் வேண்டும் என்றும் கேட்கப்படும். உதாரணம்: லாட்டரி மூலம் பணம் பணம் கிடைத்துள்ளதாக வரும் செய்தி, சாரிட்டிக்கு பணம் தேவை, பேஸ்புக்/மைக்ரோசாப்ட்  கோடிக்கணக்கில் பணம் தருகிறது.

இம்மாதிரியான மின்னஞ்சல்கள் வந்தாலே நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் Delete பட்டனை அழுத்தி விட்டு உங்கள் வேலையை பார்க்க செல்வது. 

இதே தகவல்கள் SMS வழியாக கூட வரக்கூடும் அவற்றையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. 

குறிப்பிட்ட சாரிட்டிக்கு உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றினால், குறிப்பிட்ட சாரிட்டியின் தளத்துக்கே சென்று உதவலாம் அல்லது அதில் இருக்கும் தெரிந்த நபர்களை தொடர்பு கொள்ளலாம். 

நம்பிக்கை இல்லாத பட்சத்தில் எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பாதீர்கள், சாரிட்டி பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் அதற்கு மட்டும் அனுப்புங்கள். 

Paypal, eBay போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்களை போன்று சில மின்னஞ்சல்கள் அனுப்பி உங்களை ஏமாற்றும் முயற்சியும் கூட நடக்கும். எனவே இதில் கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம். இம்மாதிரியான மின்னஞ்சல் வந்தால் இந்த தளங்களில் உள்ள உங்கள் கணக்கில் நுழைந்து பாருங்கள்,அங்கே உங்களுக்கு தகவல் இருந்தால் மட்டுமே அது உண்மை. இல்லை என்றால் மோசடி தான். 

ஜிமெயில் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் ஒரு சாவி symbol இருக்கும். 

2. Online Stores/Websites செய்யும் மோசடிகள் 

இந்த மோசடிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பெரும்பாலான தளங்கள் உங்களுக்கு Original பொருட்களைத் தான் கொடுக்கின்றன. எனவே அந்த விசயத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. குறிப்பிட்ட தளத்தின் மீது சந்தேகம் இருப்பின் Twitter, Facebook, Google Plus போன்றவற்றில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் ஆலோசனை கேட்டுவிட்டு வாங்கலாம். 

உண்மையான மோசடி என்பது 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 500 ரூபாய்க்கு தருவதாக செய்யப்படும் விளம்பரங்கள். நிறைய தளங்கள் இதில் செய்யும் வித்தை, நிறைய பேரை இதற்கு Book செய்ய வைத்து விட்டு யாரேனும் ஒருவர்க்கு மட்டும் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்று சொல்வது,மற்றவர்கள்  கட்டிய பணத்திற்கு எங்கள் தளத்தில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்பது. 

யாரோ ஒருவருக்கு பொருள் கிடைப்பதாக இருந்தாலும், கிடைக்காதவர்கள் எந்த பொருளை வாங்குகிறாரோ அது கண்டிப்பாக மற்ற தளங்களை விட விலை அதிகமாகவே இருக்கும். எனவே இது போன்ற தளங்களை பற்றிய மின்னஞ்சல் வரும் போது அவற்றை தவிர்ப்பது தான் நலம். 

இன்னும் சில தளங்கள் Free Trail, Half Price போன்று பல Offer - களை உங்களுக்கு வழங்குவார்கள். இதிலும் பெரும்பாலும் மோசடியே. உண்மையில் இவர்கள் Hidden Charges என்ற பெயரில் மிக அதிகமான பணத்தை தான் உருவுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை கேட்க மாட்டார்கள். 

இதே போல திடீர் என இலவச போன் , கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், SMS வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது. 

ஆன்லைன் ஷாப்பிங் குறித்து ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ற பதிவில் விரிவாக காணலாம்.

3. சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் 

நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்றவற்றிலும் நம்மை ஏமாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. கூகுள் பிளசை விட மற்ற இரண்டும் இதில் கொஞ்சம் அதிகம் தாக்கப்படுகின்றன. 

பேஸ்புக்கை பொருத்தவரை பெரும்பாலானவை Chat மூலமே நடை பெறும். இது வைரஸ் அல்லது நேரடியான மனிதர் மூலம் நிகழும். முதலாவது உங்கள் நண்பர் ஒருவர் திடீர் என ஏதேனும் ஒரு File ஒன்றை உங்களுக்கு அனுப்புவது போல இருக்கும்,அதை கிளிக் செய்தால் டவுன்லோட் ஆகும் அந்த File உங்கள் கணினியில் நீங்கள் சேமிக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடி விடும். எனவே இது போன்று வரும் போது குறிப்பிட்ட நபரிடம் அது என்ன? பயன்படுத்தி உள்ளாரா, என்பது போன்றவற்றை கேட்டுக் கொள்ளவும், அதை விட முக்கியம் அவர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் அவசியம். 

இரண்டாவது உங்கள் நண்பர் போல உங்களுடன் பழகும் முகம் தெரியாத நபர் கடவுச் சொல் மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை கேட்பது.மிகக் குறிப்பாக பணம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு தகவல்கள் கேட்கும் நபர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தேகப்பட வேண்டும். நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் தகவல்கள் மூலம் ஒருவர் உங்கள் வரலாற்றையே அறிய முடியும்.  இது போன்று நடப்பின் அந்த நபரை நீங்கள் பிளாக் செய்வது தான் உங்களுக்கு நன்மை. 

பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நபர்களை கண்டிப்பாக தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும். இந்த விசயத்தில் கடந்த கால மோசடிகள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். 

ட்விட்டர் தளத்தை பொறுத்தவரை பெரும்பாலான மோசடிகள் Message மூலமாகவே வரும். எனவே நம்பிக்கை இல்லாத மெசேஜ்களை நீக்கி விடுங்கள். அவற்றில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்.

அடுத்து இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் வீடியோ, அல்லது போட்டோ போன்றவற்றை பார்க்க குறிப்பிட்ட மென்பொருளை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அது உண்மையா என்று கவனிக்க வேண்டும். இவற்றில் பெரும்பான்மை மோசடி தான்.Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் உங்கள் உலவியில் இருந்தே அதை Update செய்து கொள்ளலாம், அப்படி செய்தும் கேட்டால் அதை தவிர்த்து விடுங்கள். [இது பேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்ல மற்ற எல்லா தளங்களுக்கும், Youtube என்றால் அது Flash Player இல்லை என்றால் மட்டும் கேட்கும்]

இதே போல ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றுக்கு பாஸ்வேர்ட் மாற்றச் சொல்லும் தகவல்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வந்தால் அவற்றின் From Address எது என்று பாருங்கள். அது பொய்யான முகவரி என்றால் அல்லது சந்தேகம் இருப்பின் அந்த மின்னஞ்சலை டெலீட் செய்து விட்டு நேரடியாக பேஸ்புக், ட்விட்டர்க்கு சென்று பாஸ்வேர்டை மாற்றுங்கள். அது தான் பாதுகாப்பு. 

4. ஆன்லைன் ஜாப்ஸ்/ ஜாப் தளங்கள்

உலகிலேயே இணைய தளம் மூலம் அதிகம் பேர் ஏமாந்தது இதுவாகத் தான் இருக்கும். வீட்டில் இருந்தே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம் என்று வரும் மின்னஞ்சல்களை கண்ணை மூடிக் கொண்டு டெலீட் செய்து விடுங்கள். 

இவை பெரும்பாலும் ஆரம்பத்தில் உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்வார்கள்,அதன் பின் அவர்கள் அனுப்பும் பொருளை வைத்து நீங்கள் ஒன்றும் சம்பாதிக்க முடியாது அல்லது குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட வேலை மூலம் உங்களுக்கு வருமானம் வராது.

ஆன்லைன் ஜாப்க்கு நம்பிக்கையான தளம் என்றால் elance.

அடுத்ததாக பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாக சொல்லும் மின்னஞ்சல்கள், தளங்கள் போன்றவற்றை நீங்கள் எப்போதும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்க வேண்டும். இம்மாதிரியான தளங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்லி கேட்டால் அவற்றை புறக்கணித்து விடுவதே நலம். 

இதே போல நம்பிக்கை இல்லாத கன்ஸல்டிங் கம்பெனிகளுக்கும் பணம் செலுத்துவதை தவிர்க்கவும்.

SMS, EMail பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம் போன்றவை உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர்களை மற்றவர்களுக்கு விற்க வாய்ப்புள்ளது. எனவே அது போன்ற தளங்களையும் தவிர்க்கலாம்.

5. Credit Card மோசடிகள் 

இது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ நடக்கும். உங்கள் Credit தகவல்களில் கொஞ்சம் Update, Change என்று சொல்லு உங்கள் Card Number, CVV, Name போன்றவற்றை கேட்டு உங்களை ஏமாற்றுவார்கள். இது போன்றவற்றை நீங்கள் உடனடியாக புறக்கணிக்க வேண்டும். 

பொதுவாக இந்த தகவல்களை வங்கி ஊழியரே கேட்டால் கூட நீங்கள் தரக்கூடாது. Card தொலைந்து போனால் தவிர. 

இந்த தகவல்களை மாற்ற முடியாது, சிலவற்றை மாற்ற வேண்டும் என்றால் வங்கியின் தளத்துக்கே சென்று மாற்றுங்கள். மின்னஞ்சல் மூலம் அதை செய்யாதீர்கள். 

-----------------------------------------------------------------------------

இவையே பொதுவாக நடக்கும் மோசடிகள். எல்லாவற்றையும் கவனித்தால் உங்களுக்கு ஒரு விசயம் புலப்படும் எல்லாமே பண மோசடிதான். எனவே நம்பிக்கை இல்லாத தளமோ, நபரோ, மின்னஞ்சலோ பணப் பரிமாற்றம் குறித்த செய்திகளை அனுப்பினால் அதனை நம்ப வேண்டாம். சொல்லப் போனால் பெரும்பாலான மோசடிகளுக்கு இது தான் தற்காப்பு வழி.

இது எவ்வாறெல்லாம் ஏமாற்றுகள் நடக்கிறது என்பதை சொல்லும் பொதுவான பதிவு மட்டுமே. இதில் குறிப்பாக சிலவற்றை விளக்கி எழுத வேண்டி உள்ளது. இப்போதைக்கு பதிவின் நீளம் கருதி முடித்துக் கொள்கிறேன். 

குறிப்பிட்ட ஏமாற்று செய்திகளை வரும் பதிவுகளில் காண்போம். 

- பிரபு கிருஷ்ணா

மொபைல் போனில் வரும் பேஸ்புக் Notification-களை தடுப்பது எப்படி?


பேஸ்புக்கை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு சில தொல்லைகளை தரும். அதிலும் குறிப்பாக பேஸ்புக்கில் மொபைல் நெம்பரை கொடுத்து இருந்தாலோ அல்லது ஸ்மார்ட்போன் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினாலோ நமக்கு Notification பிரச்சினைகள் உள்ளன. அதை எப்படி தீர்ப்பது என்று பார்ப்போம். 

SMS Notification:

முதலில் உங்களுக்கு SMS மூலம் Notification வருகிறது என்றால் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய முதலில் உங்கள் Profile இல் About என்பதை கிளிக் செய்யுங்கள். 


இதில் Contact Info என்ற பகுதியில் Edit என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை Remove செய்து விடுங்கள். 


மீண்டும் Notification வந்தால் ஒரு டம்மி நெம்பர் ஒன்றை கொடுத்து விடவும்.  தேவை என்றால் மாற்றிக் கொள்ளலாம். இதனால் உங்களுக்கு Notification வராது. 

Other Notifications:

நீங்கள் உங்கள் போனில் Facebook Application-ஐ பயன்படுத்தினால் இணைய இணைப்பில் இருக்கும் போது அடிக்கடி Notifications வரும். இது குறிப்பாக Android, iPhone, Windows Phone போன்ற Smartphone - கள் வைத்திருப்பவர்களுக்கு வரும். சில போன்களில் Notifications வரும் போது உங்களுக்கு கால் வந்தால் அதை கூட அட்டென்ட் செய்ய முடியாது. 

சில சமயம் நீங்கள் கணினியில் பேஸ்புக் பயன்படுத்தும் போது பார்த்த Notifications கூட மீண்டும் போனில் வரும். 

இதை நிறைய பேர் விரும்புவதில்லை. இதை தவிர்க்க நீங்கள் உங்கள் போனில் பேஸ்புக்கை ஏதேனும் ப்ரௌசெரில் இருந்து பயன்படுத்த வேண்டும்.  இதனால் Notifications ப்ரௌசெரில் மட்டுமே வரும். உங்கள் Smartphone Notification பகுதியில் வராது. 

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களின்/பேஜின் போஸ்ட்களை Notification ஆக பெறுவது எப்படி?


கூகுள் பிளஸ், ட்விட்டர் போன்றவைகளின் போட்டியை சமாளிக்க பேஸ்புக் அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் வந்துள்ள புது வசதி தான் ஒரு குறிப்பிட்ட நபர்அல்லது பேஸ்புக்க பேஜ்களின் அனைத்து போஸ்ட்களையும் Notification-இல் பெறுவது.

சில நபர்கள் அல்லது பேஸ்புக் பக்க பகிர்வுகள் நமக்கு முக்கியமானதாக இருக்கக்கூடும். நமக்கு அதிகமான நண்பர்கள் இருப்பின் குறிப்பிட்ட பதிவுகளை நாம் கவனிக்க மறந்து விடுவோம், இதுவே அந்த புதிய பதிவுகள் Notification - இல் வந்தால் நாம் கண்டிப்பாக பார்ப்போம். அதற்கு உதவுவது தான் இந்த வசதி.  எப்படி என்று பார்ப்போம். 

இது கடந்த மாத ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபட்டது. ஆனால் இரண்டு நாட்களாகத்தான் எனக்கு வேலை செய்கிறது.

நண்பர்களின் பதிவுகளை Notification - இல் பெற: 

முதலில் குறிப்பிட்ட நண்பரின் Profile பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது கீழே உள்ளது போல Friends என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது அவர் புதியதாக போஸ்ட், போட்டோ எதைப் பகிர்ந்தாலும் உங்களுக்கு Notifications வரும். 


பேஸ்புக் பேஜ்களின் பதிவுகளை Notification - இல் பெற: 

முதலில் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது கீழே உள்ளது போல Liked என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இனி ஒவ்வொரு புதிய பகிர்வும் உங்களுக்கு Notification ஆக வரும். 

- பிரபு கிருஷ்ணா

Privacy Shortcuts - பேஸ்புக் தரும் புதிய வசதி

இன்று பேஸ்புக் தளத்தில் லாக்-இன் செய்தவர்களுக்கு ஒரு புதிய வசதி வந்திருக்கும். "Privacy Shortcuts" எனப்படும் அவற்றின் மூலம் உங்கள் Privacy Settings - ஐ எளிதாக நீங்கள் ஒரே இடத்தில் இருந்து மாற்ற முடியும். எப்படி என்று பார்ப்போம். 

உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்த பின் Home க்கு அருகே ஒரு புதிய Lock symbol வந்துள்ளதை கவனிக்கவும். 


அதை Press செய்தவுடன் கீழே உள்ளது போன்ற வசதிகள் உங்களுக்கு வரும்.


1. இதில் முதலாவதாக உள்ள "Who Can See My Stuff?" என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பது இருக்கும், அடுத்து உங்கள் Activity Log,அடுத்து  உங்கள் நண்பர் அல்லது ஒருவர் உங்கள் Timeline - ஐ பார்க்கும் போது எப்படி தெரியும் என்பவை இருக்கும்.

Who Can See My Stuff? என்பதில் Public, Friends, Custom, Only Me போன்ற வசதிகள் இருக்கும் இதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். Activity Log பகுதியில் நீங்கள் லைக் செய்தது, கமெண்ட் செய்தது, உங்களை Tag செய்துள்ள போட்டோக்கள் போன்றவற்றை நீக்க முடியும். மூன்றாவதாக உள்ள View As மூலம் மற்றவர் பார்க்க கூடாது என்று நினைக்கும் தகவல்களை நீங்கள் மறைக்க/நீக்க முடியும்.

2. இரண்டாம் வசதி, "Who Can Contact Me ?". இதில் முதல் வசதி  உங்களுக்கு யார் எல்லாம் Message அனுப்ப முடியும் என்பதை தீர்மானிக்கலாம். Basic Filtering என்பது நண்பர்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் போன்றவர்களை உங்ககுக்கு Message செய்ய அனுமதிக்கும். Strict Filtering உங்கள் நண்பர்களை மட்டும் உங்களுக்கு Message செய்ய அனுமதிக்கும். இரண்டாவது Who can send me friend requests? இதில் உள்ள இரண்டு வசதிகள் Everyone & Friends Of Friends. எது தேவையோ அதை வைத்துக் கொள்ளலாம்.

3. மூன்றாவது வசதி "How do I stop someone from bothering me?" என்பதன் மூலம் உங்களுக்கு தொல்லை தரும் நபர்களை பேஸ்புக் பக்கத்தில் Block செய்யலாம். View All Blocked Users என்பதில் நீங்கள் யாரை எல்லாம் Block செய்துள்ளீர்கள் என்பதை பார்க்கலாம்.

முன்பு இவற்றை வேறு வேறு பக்கங்களில் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்போது கிளிக் மூலம் செய்யும் படி வந்துள்ளது.

- பிரபு கிருஷ்ணா