அடிக்கடி புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு அசத்தும் Samsung நிறுவனத்தின் புதிய போன் Samsung Galaxy S4 mini. இது கடந்த மாதம் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 27990 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகள் உள்ளன. அதே போல முன்னாலும் ஒரு 1.9 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRIx9QzYbmMxzVTiZ3Yc8oJSvOrCXFofcsELzDYtCIDv59Yh8iaZ4IRbgpBheadX7Yr4HhzWUmcKGJ6fCvvJiqw8iM8mMkxMygpc9STKr6sbcrdREMYR-RKB9EROGdRxBTeYaRbP_l8Cs/s320/Samsung-Galaxy-S4-mini.jpg)
இது 4.3 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 1.5 GB RAM மற்றும் 1.7 GHz Krait dual-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Samsung Galaxy S4 mini Specifications
Operating System | Android OS, v4.2.2 (Jelly Bean) |
Display | 4.3 inch (540 x 960 pixels) Super AMOLED capacitive touchscreen |
Processor | 1.7 GHz Krait dual-core processor |
RAM | 1.5 GB RAM |
Internal Memory | 8 GB Internal Memory (5 GB user memory) |
External Memory | microSD, up to 64 GB |
Camera | Rear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash |
Front Camera: 1.9 MP | |
Battery | Li-Ion 1900 mAh Battery |
Features | 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
கொடுக்கும் விலைக்கு 1.5 GB RAM தவிர மற்றவை அனைத்தும் குறைவானவை தான். 1 GB RAM உடன் வரும் Samsung Galaxy S3 இதை விட சிறந்த போன். இரண்டில் எது சிறந்தது என்று இங்கே காணலாம். Samsung Galaxy S4 mini vs Galaxy S3
Post a Comment