பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? - எச்சரிக்கை | கற்போம்

பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? - எச்சரிக்கை

அவ்வப்போது பேஸ்புக்கில் ஏதாவது ஒரு ஸ்பாம் வந்து நிறைய பயனர்களின் வயிற்றில் புளியை கரைக்கும். அந்த வகையில் தற்போது வந்துள்ள விஷயம் நமக்கே தெரியாமல் ஆபாச பக்கங்களை லைக் செய்துள்ளதாக வருவது. இந்த பிரச்சினையின் முழு விவரம் இன்னும் தெரிய வரவில்லை. எனவே ஒரு தற்காலிக வழி ஒன்றை இப்போது பகிர்கிறேன். முழு விவரமும் தெரியும் போது மற்ற விவரங்கள் பகிரப்படும்.


இதற்கு முன்பு இம்மாதிரி நடந்த விஷயங்களுக்கு முக்கிய காரணம் Facebook Apps. எனவே அவற்றை நீக்குவது இதற்கு ஒரு தற்காலிக தீர்வாக இருக்கும். இந்த பிரச்சினை இல்லாதவர்கள் கூட இதை செய்யலாம்.

இதை செய்ய உங்கள் பேஸ்புக் கணக்கில் Privacy Settings பகுதிக்கு வரவும்.இதில் இடது பக்கம் Apps என்று உள்ளதை தெரிவு செய்யவும்.இப்போது App Settings-ல் Apps you use பகுதியில் நீங்கள் பயன்படுத்தி வரும் Apps இருக்கும். அதில் உங்களுக்கு சந்தேகமான, தேவையற்ற அல்லது எல்லாவற்றையும் வலது பக்கம் உள்ள x மீது கிளிக் செய்து Remove செய்யுங்கள்.நான் இதுவரை எந்த App-ம் பயன்படுத்தியது இல்லை, இனிமேலும் பயன்படுத்தட்ட மாட்டேன் என்பவர்கள், "Use apps, plugins, games and websites on Faceook and elsewhere ?" என்று உள்ளதில் On என்று இருப்பதை Edit என்பதை கிளிக் செய்து Off செய்யலாம்.இதை செய்து முடித்த பிறகு. ஒரு முறை உங்கள் பேஸ்புக் கணக்கில் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் பக்கம் பிரச்சினை இல்லை.

இனி நீங்கள் என்ன செய்யக்கூடாது ?

  • உங்கள் பேஸ்புக் போஸ்ட்/போட்டோ/லிங்க்கிற்கு நண்பர்கள் யாரேனும் தொடர்பில்லாத கமெண்ட்டை பகிர்ந்தால் முக்கியமாக ஏதேனும் லிங்க்குடன் இருந்தால் அதை கிளிக் செய்யாதீர்கள். அது பெரும்பாலும் ஸ்பாம் ஆக இருக்கும். இதில் சந்தேகம் இருப்பின் குறிப்பிட்ட நண்பரை கூப்பிட்டு அவர்தான் பகிர்ந்தாரா என்று கேளுங்கள்.
  • அதே போல எந்த நண்பரேனும் அவருக்கு சம்பந்தம் இல்லாத, தெரியாத விஷயத்தை பகிர்ந்தால் அதையும் நம்பாதீர்கள். இதுவும் ஸ்பாம் ஆக இருக்கும்.
  • இந்த வகையான App ஆபாச பெயரிலோ அல்லது படத்துடன் தான் இருக்கும் என்ற அவசியமில்லை. மாறாக சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை, படத்துடனும் வரலாம். எனவே தொடர்பில்லாத எதையும் தொடாதீர்கள் :-)


பேஸ்புக்கில் உங்கள் Privacy ஐ பாதுகாக்க Facebook Privacy Settings பகுதியில் நீங்கள் செய்ய வேண்டியவை என்ற பதிவை படியுங்கள்.

இது தற்காலிக தீர்வு மட்டுமே. இதுவே நிரந்த தீர்வாக கூட இருக்கலாம். முழு விவரமும் தெரிந்த பின்னர் இன்னொரு பதிவை விரிவாக எழுதுகிறேன்.

- பிரபு கிருஷ்ணா

Post a Comment