இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 4 | கற்போம்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 4

கடந்த கட்டுரையில் Monetization, Title, Description, Tag போன்றவற்றை பற்றி பார்த்தோம். இப்போது எளிய முறையில் YouTubeஇல் வீடியோ எடிட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Video Editing பற்றி அதிகம் தெரியாதவர்கள் YouTubeஇல் இருக்கும் Editor வசதியை பயன்படுத்தி எளிய வீடியோக்களை உருவாக்கலாம். [குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய இது சரியானது அல்ல] உங்கள் வீடியோவை அப்லோட் செய்த பின்னர், youtube.com/editor என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.

Editor பக்கம் படத்தில் இருப்பது போல தோன்றும். இப்போது நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வீடியோவை Drag videos here என்ற பகுதிக்கு drag செய்து கொண்டு வரவும். இப்போது எடிட் செய்யும் வசதிகளை பார்க்கலாம்.

Quick Fixes: இந்த பகுதியில் இருக்கும் Auto-fix, Brightness and Contrast, Pan & Zoom, Stabilize video, Slow motion, Rotation வசதிகளின் மூலம் வீடியோ குவாலிட்டியை மாற்றலாம்.

Filters: இந்த வசதி மூலம் வீடியோற்கு ஒரு குறிப்பிட்ட Effect கொடுக்கலாம்.

Text: இதன் மூலம் வீடியோவில் வீடியோவில் உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

Audio: இதில் வீடியோவின் ஆடியோவில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்றால் அதை செய்யும் வசதியும் YouTube Editorஇல் இருக்கிறது. ஆரம்பத்திலோ, இறுதியிலோ நீக்க வேண்டும் என்றால் உங்கள் வீடியோவின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் Mouse Cursor ஐ கொண்டு சென்றால் வீடியோ Trim செய்யும் ஆப்ஷன் வரும்.

உங்கள் வீடியோவிற்கு வேறு ஆடியோ வேண்டும் என்றால் ஆடியோ குறியீடு இருக்கும் பக்கம் சென்று தேவையான ஆடியோவை Drag செய்து கொள்ளலாம். இப்போது உங்கள் வீடியோவில் ஏற்கனவே இருக்கும் ஆடியோவை தேவையில்லை என்றால் முழுமையாக குறைத்து விட வேண்டும்.

இவை தவிர இரண்டு வீடியோக்களை இணைக்கும் Transition வசதி, வீடியோவின் முன் Text சேர்க்கும் வசதி, கணினியில் இருக்கும் புகைப்படங்களை அப்லோட் செய்து அவற்றை ஒரு வீடியோவாக உருவாக்கும் வசதி போன்றவையும் இந்த எடிட்டரில் உள்ளன.

போட்டோக்களை அப்லோட் செய்து எடிட் செய்யும் போது தேவையான புகைப்படங்களை அப்லோட் செய்த உடன் ஒவ்வொன்றின் மீதும் + என்ற குறியீடு இருக்கும், அதை க்ளிக் செய்து அவற்றை எடிட் செய்யும் பகுதியில் சேர்க்கலாம். அதன் பின்னர் ஆடியோ வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் வீடியோ சரியாக இருக்கிறாத என்று ப்ளே செய்து பார்த்து விட்டு Create Video என்பதை க்ளிக் செய்தால் உங்கள் வீடியோ ரெடி ஆகிவிடும்.

மேலே சொன்னது போல YouTube Editor என்பது மிகச்சாதாரணமான வேலைகளுக்கு மட்டுமே உதவும். குறும்படம் அல்லது ஒரு பெரிய வீடியோ என்றால் இதை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் எடிட் செய்து பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும். Voice - over செய்பவர்கள், புகைப்படங்களை வீடியோ ஆல்பம் போல மாற்றி குறிப்பிட்ட முறையிலான வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு இந்த முறை ஆரம்ப கட்டத்தில் உதவியாக இருக்கும்.

போன் அல்லது கேமராவில் ரெக்கார்ட் ஆன வீடியோக்களை ஆரம்பத்தில் அல்லது இறுதியில் மட்டும் கொஞ்சம் நீக்கி விட்டு அப்லோட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த முறை பயன்படும். இவ்வாறு செய்வதாய் இருப்பின் Video Edit பகுதியில் Enhancements என்று வசதி இருக்கும். அதிலேயே இதை செய்து கொள்ளலாம். இதற்கும் YouTube Editorகும் என்ன வித்தியாசம் என்றால் எடிட்டரில் நிறைய வீடியோக்களை ஒன்றாக சேர்க்க முடியும், புகைப்படங்களை அப்லோட் செய்து ஆல்பம் போல உருவாக்கலாம், ஆடியோ குவாலிட்டியை அதிகரிக்கலாம். Enhancements பகுதியில் அப்படி இல்லாமல் ஒரு வீடியோவில் மட்டும், குறிப்பாக வீடியோவில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் சரி செய்யலாம். Editor இல் இருக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருக்கும். [பார்க்க படம்]ஆரம்பம் மற்றும் இறுதில், அல்லது வீடியோவின் நடுவில் எங்கேனும் உள்ள தேவையற்ற பகுதியை நீக்க விரும்பினால் Trim என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ஆரம்பம் மற்றும் இறுதியில் சில நொடி அல்லது நிமிடங்களை நீக்க விரும்பினால் அதற்கேற்றார் ஆரம்பம் மற்றும் இறுதில் இருக்கும் நீல பட்டையை நகர்த்திக் கொள்ளலாம். வீடியோவின் நடுவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை நீக்க வீடியோவில் நேரத்தை காட்டும் நீல நிற பட்டையை தேவையற்ற பகுதி ஆரம்பமாகும் இடத்திற்கு நகர்த்திவிட்டு Split என்பதை க்ளிக் செய்தால் அந்த பகுதி மட்டும் துண்டாகிவிடும். தேவையற்ற பகுதி முடியும் இடத்திலும் இதே போல செய்ய வேண்டும். இப்போது குறிப்பிட்ட பகுதியை செலக்ட் செய்தால் அதன் மேல் x குறியீடு வரும். அதை க்ளிக் செய்தால் தேவையில்லாத பகுதி நீக்கப்பட்டுவிடும். இப்போது Done கொடுத்து Save கொடுத்தால் வீடியோவில் நாம் செய்த மாற்றங்கள் சில நிமிடங்களில் அப்டேட் ஆகிவிடும். தேவையானால் Save as new video என்பதை பயன்படுத்தி புதிய வீடியோவாக Save செய்து கொள்ளலாம். வீடியோவை Enhancement செய்யும் எந்த சூழ்நிலையிலும் Revert to original என்பதை க்ளிக் செய்தால் வீடியோ ஒரிஜினலாக எப்படி இருந்தததோ அந்த நிலைக்கு வந்து விடும்.

இந்த கட்டுரையை படித்து முடித்த பின்னர் இது சாதாரண எடிட்டிங் முறை தானே என்று நிறைய பேருக்கு தோன்றலாம், ஆனால் YouTube இல் இப்படி ஒரு வசதி இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. உங்கள் வீடியோ அப்லோட் செய்த பின்னர் அதில் ஏதேனும் தவறு இருப்பதாய் தெரிந்தால் இதில் நான் கூறி இருக்கும் Enhancements வசதி மூலம் சிறு தவறுகளை சரி செய்ய முடியும். இதனால் வீடியோவை மறுபடி அப்லோட் செய்து, மறுபடி நிறைய இடங்களில் பகிர வேண்டிய அவசியம் இருக்காது.

சரி, நான் குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய வேண்டும் அதற்கு என்ன மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பதில் கீழே.

கணினியில் ரெக்கார்ட் செய்து அதை எடிட் செய்ய விரும்புபவர்களுக்கு Camtasia என்ற மென்பொருள் உகந்தது. உதாரணமாக போட்டோஷாப்பை எப்படி பயன்படுத்துவது என்று டுட்டோரியல் வீடியோ ஒன்றை செய்ய வேண்டும் என்றால் இது சரியாக இருக்கும்.

குறும்படம் போன்றவற்றிற்கு Adobe Premiere Pro, Avid, Final Cut Pro(mac) போன்றவை தான் மிகச்சிறந்தவை. இவற்றை எடிட்டிங் அனுபவம் அதிகம் உள்ளவர்கள் நன்றாக அறிவார்கள். தேவையானால் இவைகளை கற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே அறிந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
Post a Comment