இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 5 | கற்போம்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 5

கடந்த கட்டுரையில் YouTube மூலம் எப்படி வீடியோ எடிட்டிங் செய்வது என்று பார்த்தோம். இப்போது YouTubeஇல் நாம் வீடியோ அப்லோட் செய்த பிறகு ஒரு குறிப்பிட்ட வீடியோவில் இருந்து இன்னொரு வீடியோவிற்கு எப்படி பார்வையாளர்களை கொண்டு வருவது என பார்ப்போம்.

உதாரணமாக உங்களின் ஒரு குறிப்பிட்ட வீடியோ நிறைய பேரால் பார்க்கப்பட்டுள்ளது என்றால் அதிலிருந்து மற்ற வீடியோக்களுக்கு பார்வையாளர்களை வர செய்யலாம்.


Description:


வீடியோவின் Description பகுதியில் குறிப்பிட்ட வீடியோ குறித்த தகவல்களை கொடுத்த பின்னர் அந்த வீடியோ தொடர்பான மற்ற வீடியோக்களின் டைட்டில் & லிங்க்கை தரலாம். உதாரணமாக நீங்கள் சமையல் குறித்த வீடியோக்களை அப்லோட் செய்தால் குறிப்பிட்ட வீடியோ சிக்கன் பற்றியது என்றால் Description பகுதியில் தொடர்புள்ள மற்ற சிக்கன் வீடியோக்களை குறிப்பிட்டு அவற்றையும் பார்க்க சொல்லலாம். இதில் 3 வீடியோக்கள் வரை கொடுக்கலாம். தேவையெனில் playlistஐயும் கொடுக்கலாம்.
Playlist

YouTube இல் Playlist என்பது ரொம்பவே முக்கியமான ஒரு விஷயம். இதன் மூலம் குறிப்பிட்ட Playlistஇல் ஒருவர் ஒரு வீடியோவை பார்க்க ஆரம்பித்தால் அதில் இருக்கும் அத்தனை வீடியோக்களையும் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.

சரி எப்படி ஒரு Playlistஐ உருவாக்குவது? - Video Manager பகுதியில் ஒவ்வொரு வீடியோவிற்கு அருகிலும் செலெக்ட் செய்வதற்கு ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் நீங்கள் உருவாக்க விரும்பும் Playlistக்கு தேவையான வீடியோக்களை செலெக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது மேலே Actions, Add To என்ற இரு வசதிகளை காணலாம். அதில் Add to என்பதை க்ளிக் செய்து Create New Playlist என்பதை க்ளிக் செய்து ஒரு உருவாக்கி கொள்ளுங்கள். வேறு Playlistகளை உருவாக்கும் போதும் இதே முறையை பின்பற்றலாம்.

அடுத்த முறை நீங்கள் ஒரு வீடியோவை பப்ளிஷ் செய்யும் போதே Basic Info பகுதியில் Add to playlist வசதி மூலம் தொடர்புள்ள playlistல் உங்கள் வீடியோவை Add செய்து விடலாம்.  தேவையானால் இங்கேயே கூட ஒரு playlist ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

இப்போது இடது பக்கம் Video Manager என்பதற்கு கீழே Playlists என்று ஒரு வசதி இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள்.

அதில் நீங்கள் உருவாக்கிய Playlist எல்லாமே இருக்கும். இங்கேயும் கூட ஒரு playlistஐ உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட playlistஇல் வலது பக்கம் இருக்கும் Edit என்பதை க்ளிக் செய்தால் அதை எடிட் செய்வதற்கான வசதிகள் வரும். Add a description என்பதில் playlist பற்றிய சிறிய விளக்கத்தை கொடுக்கலாம். Playlist பெயரை மாற்ற விரும்பினாலும் இங்கேயே செய்து கொள்ளலாம்.

அடுத்து playlist settings என்பதை க்ளிக் செய்து Additional Options என்பதற்கு கீழே உள்ள ‘Set as official series for this playlist’ என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள். Ordering என்பதில் உங்களுக்கு எந்த ஆர்டரில் வீடியோக்கள் வர வேண்டுமோ அப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் ஒரு வீடியோவை ஒரு ப்ளேலிஸ்டில் மட்டுமே Add செய்யுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட Playlistல் சேர்க்க விரும்பினால் ‘Set as official series for this playlist’ என்பதை க்ளிக் செய்ய வேண்டாம்.

Annotations:

கணினியில் ஒரு வீடியோவை பார்க்கும் போது சில வீடியோக்களில் ‘click here for next/more videos’, ‘click here to subscribe’ அல்லது வேறு வீடியோக்களின் டைட்டில் போன்றவற்றை பார்த்திருப்பீர்கள். அதை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பக்கத்திற்கும் நீங்கள் சென்று விடுவீர்கள். இது Annotations என்ற வசதி மூலம் உருவாக்கப்படுகிறது.

வீடியோ மேனேஜரில் டைட்டிலுக்கு கீழே இருக்கும் Edit க்கு அருகில் இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் Annotations என்ற வசதி வரும். அதில் வலது பக்கம் Add Annotation என்பதை க்ளிக் செய்ய வேண்டும். 5வசதிகள் வரும். பெரும்பாலோனோர் பயன்படுத்தும் வசதி Note.எனவே அதையே இங்கே பார்க்கலாம்.

Add Annotation -> Note என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது Note என்பதற்கு கீழே நீங்கள் என்ன கொடுக்க விரும்புகிறீர்க்ளோ அதை டைப் செய்யுங்கள். அது குறிப்பிட்ட வீடியோவின் டைட்டிலாக இருக்கலாம் அல்லது Click Here for More Videos அல்லது Subscribe for more videos என இருக்கலாம்.

இப்போது Font Size, Color, Background Color போன்றவற்றை தேவையானால் மாற்றிக்கொள்ளலாம். Start & End என்பதில் Annotation எங்கே ஆரம்பிக்க வேண்டும், எங்கே முடிய வேண்டும் என்ற நேரத்தை குறிப்பிடலாம். அடுத்து இருக்கும் Link தான் நீங்கள் மேலே டைப் செய்துள்ளதை செயல்பட வைக்கும். இதில் குறிப்பிட்ட Video/Playlist முகவரி அல்லது சேனலின் முகவரியை கொடுக்கலாம். கொடுக்கும் முன்னர் வலது பக்கம் இருக்கும் Video என்பதை க்ளிக் செய்து என்ன கொடுக்கிறோம் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். URLஐ கொடுத்த பின்னர் தேவையானால் ‘Open link in a new window’ என்பதை க்ளிக் செய்து கொள்ளலாம்.
நீங்கள் டைப் செய்திருக்கும் விஷயங்களை இடதுபக்கம் இருக்கும் வீடியோவில் காணலாம். இதில் டெக்ஸ்ட் மிக சிறியதாக அல்லது இரண்டு வரிகளால் வந்தால் அதை மாற்ற டெக்ஸ்ட்டின் நான்கு பக்கமும் உள்ள சிறிய dotகளை Drag செய்வதன் மூலம் தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம். எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் Save என்பதை க்ளிக் செய்து Apply Changes என்பதை கொடுத்தால் Annotations வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

Annotationsஐ எப்போதும் வீடியோவின் இடது பக்கம் வைத்துக் கொள்வது சிறந்தது.

Cards:
இதுவும் Annotations போலவே தான். Annotations கணினியில் வீடியோவை பார்ப்பவர்களுக்கு மட்டுமே வரும், மொபைலில் வராது. Cards இரண்டிலுமே வரும். இது வீடியோவின் வலது பக்கம் மட்டுமே வரும். எனவே தான் Annotationsஐ இடது பக்கம் வைத்துக் கொள்வது சிறந்தது.

Cards வசதி Annotations க்கு அடுத்து இருக்கும். இதில் Add Card என்பதில் க்ளிக் செய்தால் Video or Playlist, Channel, Poll, Link என நான்கு வசதிகள் வரும்.


Video or Playlist - இதில் குறிப்பிட்ட வீடியோவை/ப்ளே லிஸ்ட்டை தேர்வு செய்வதன் மூலம் அது வீடியோவின் வலது பக்கம் படத்தில் உள்ளபடி Info ஐகானில் தோன்றும். அதை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட்க்கு பார்வையாளர் சென்று விடுவார். நிறைய வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட் இருப்பின் தேவையான ஒன்றின் முகவரியை நேரடியாக கொடுக்கலாம்.

Channel - இந்த வசதி மூலம் உங்களின் இன்னொரு சேனல் அல்லது நண்பர்களின் சேனலை Promote செய்யலாம்.

Poll - பார்வையாளர்களை நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விக்கு Poll முறையில் பதில் கூற சொல்லலாம்.

Link  - YouTube ஆல் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்கு இணைப்பை கொடுக்கலாம். (எல்லா தளங்களும் அல்ல)

இதில் முதல் 2 வசதிகளும் நிறைய பேருக்கு பயன்படும். குறிப்பாக முதலாவது அனைவருக்கும் பயன்படும். இன்று நிறைய பேர் தங்கள் போன் மூலம் YouTubeஐ பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால் இதை செய்வதும் கட்டாயம் ஆகும். ஒரு வீடியோவிற்கு 5 Cards வரை கொடுக்கலாம்.

Featured Content

இந்த வசதி மூலம் உங்களின் அனைத்து வீடியோக்களிலும் ஒரு குறிப்பிட்ட வீடியோவை Feature செய்யலாம். இதற்கு Video Manager >> Channel >> Featured Content என்ற பக்கதிற்கு செல்ல வேண்டும். இப்போது குறிப்பிட்ட வீடியோவை Feature செய்ய Feature Content என்பதை க்ளிக் செய்தால் இரண்டு வசதிகள் வரும். Most recent upload & choose a video or playlist.

Most recent upload என்பதை வைத்தால் ஒவ்வொரு முறை நீங்கள் வீடியோ அப்லோட் செய்யும் போது அது Featured content ஆகி விடும். குறிப்பிட்ட ஒரு வீடியோவை/ப்ளேலிஸ்ட்டை வைக்க இரண்டாவது வசதியை க்ளிக் செய்து தேவையான வீடியோ அல்லது ப்ளேலிஸ்ட்டை தேர்வு செய்யலாம். நிறைய வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட் இருப்பின் தேவையான ஒன்றின் முகவரியை நேரடியாக கொடுக்கலாம்.வீடியோவை தேர்வு செய்து முடித்தவுடன் Save கொடுத்தால் Featured Content எப்படி தோன்ற வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளலாம். Display time என்பதில் End of the video, custom start time என இரண்டு வசதிகள் இருக்கும். End of the video என கொடுத்தால் வீடியோக்கள் முடிவதற்கு சில நொடிகள் முன் இது தோன்றும். custom start timeஐ தெரிவு செய்தால் நீங்கள் விரும்பிய நேரத்தில் தோன்ற வைக்கலாம். இதை வைத்தால் Start Time ஐ உங்களுக்கே ஏற்றபடி மாற்றிக்கொள்ளுங்கள். Default ஆக 1:30 என நேரம் இருக்கும்.

Optimize Timing என்பது Featured Content ஐ Display timeஇல் end of the video என்று வைத்திருந்தால் YouTube தானாகவே ஒரு இடத்தில் தோன்ற வைக்கும். இது உங்களின் முந்தைய வீடியோக்களை கொண்டு கணக்கிடப்படும்.

Custom Message என்பதில் 2 அல்லது 3 வார்த்தைகளை கொடுக்கலாம். உதாரணமாக Watch or Don’t Miss or Also Watch என கொடுக்கலாம். மாற்றங்களை செய்த பின்னர் Update கொடுத்து விடவேண்டும்.

இந்த 5 வசதிகள் மூலம் உங்கள் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களை உங்களின் மற்ற வீடியோவை பார்க்க வைக்கலாம். YouTube இல் ஆடியன்ஸை தக்க வைத்து கொள்வது ரொம்பவே முக்கியமானது. எனவே உங்களின் அனைத்து வீடியோக்களுக்கும் இவற்றை தவறாமல் செய்யுங்கள்.

Post a Comment