இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 6 | கற்போம்

இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 6

கடந்த மாத கட்டுரையில் YouTube இல் ஆடியன்ஸை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதை பார்த்தோம். இந்த மாதம் பார்க்கவிருப்பது YouTube Analytics பகுதி. இதில் தான் உங்கள் வீடியோவின் பர்பாமென்ஸ் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக எவ்வளவு பேர் உங்கள் வீடியோவை பார்க்கிறார்கள், எங்கிருந்து எதில் பார்க்கிறார்கள், என்ன வயது, எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் போன்ற பலவற்றை அறிந்து கொள்ள முடியும். இதில் உங்கள் வீடியோவின் பர்பாமென்ஸை அவ்வப்போது செக் செய்து ஏதேனும் குறை இருப்பின் அவற்றை சரி செய்வதன் மூலம் நீங்கள் YouTube Videos மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க முடியும். ̀



Overview

Analytics இல் இருக்கும் Overview பக்கத்தில் Watch Time, Average View Duration, Views, Estimated Revenue, Top 10 Videos, Top Geographies, Gender, Traffic Source, Playback location போன்றவற்றை பார்க்கலாம். ஒவ்வொன்றையும் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவற்றின் மீது க்ளிக் செய்யலாம் அல்லது இடது பக்கம் உள்ள மெனுவிலும் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.



Analytics பகுதியில் வலது பக்கம் Last 28/30 days என்று ஒன்று இருக்கும். இது எந்த காலத்திற்கு நீங்கள் ரிப்போர்ட்களை பார்க்கிறீர்கள் என்பதை காட்டும். இதில் உங்களுக்கு தேவையான காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம். This Week/Month/Quarter/Year, Last Week/Month/Quarter/Year, Last 7/28/30/90/365 days, First 7/28/90/365 days போன்ற வசதிகள் இருக்கும். கடைசியாக உள்ள Custom Range என்பதில் நீங்கள் உங்களுக்கு தேவையான காலத்தை எடுத்து செக் செய்யலாம்.

[இந்த கட்டுரை முழுக்க Last Month என்பதை அடிப்படையாக கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ]

Real Time

இதில் உங்கள் வீடியோ, சேனல் கடந்த 1 மணி நேரம் & 48 மணி நேரத்தில் எவ்வளவு முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். Analyticsஇல் இருக்கும் மற்ற வசதிகள் எல்லாமே 48 மணி நேரத்திற்கு பின்பு தான் அப்டேட் ஆகும்.

அதே நேரம் இதில் ஒரு சில வீடியோக்களுக்கு காட்டப்படும் Views ஆனது Video Manager அல்லது Video Play செய்யும் போது காட்டுவதை விட அதிகமாக இருக்கும். முன் கூறிய இரண்டிலுமே சிறிது நேரத்திற்கு பின்புதான் Views அப்டேட் ஆகும். [இதனால் தான் பிரபல நடிகர்களின் ட்ரைலர்கள், பாடல்கள் வெளியாகும் போது வீடியோ பார்த்தவர்கள் எண்ணிக்கையை விட ஆரம்பத்தில் லைக்ஸ் அதிகமாக இருக்கும்]

Revenue Reports

இதில் இரண்டு விஷயங்கள் இருக்கும். முதலாவதாக இருக்கும் Revenue பகுதியில் உங்கள் வீடீயோக்கள் கடந்த மாதத்தில் எவ்வளவு Revenueவை உங்களுக்கு கொடுத்துள்ளது என்பதை Estimated ஆக காட்டும். அதேபோல எந்த நாட்டில் இருந்து எவ்வளவு Revenue வந்துள்ளது மற்றும் எந்த தேதியில் எவ்வளவு Revenue வந்துள்ளது என்பதையும் இதில் பார்க்கலாம்.

இதே போல ஒரு குறிப்பிட்ட வீடியோவிற்கு எவ்வளவு Revenue என்பதை பார்க்க Search for content என்பதில் வீடியோவை தேடலாம் அல்லது Revenue பகுதியிலேயே கீழே இருக்கும் ஏதாவது ஒரு வீடியோவை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

இதில் இரண்டாவதாக இருக்கும் Ad Rates பகுதியில் உங்கள் வீடியோக்களின் மொத்த Revenue எவ்வளவு என்று பார்க்கலாம். இதில் காட்டப்படுவது YouTubeஇன் பங்கையும் சேர்த்து. இதிலிருந்து 55% உங்களுக்கும், 45% YouTubeக்கும்  கிடைக்கும். உங்களுக்கு வரும் Revenue உங்களின் 55% இல் இருந்து சற்றே குறைவாக கூட இருக்கலாம்.

இதில் கீழே Ad Type பகுதியில் என்ன விதமான விளம்பரம் உங்களுக்கு எவ்வளவு Revenue கொடுத்துள்ளது என்ற தகவலையும் பார்க்கலாம்.

Watch Time Reports



Watch Time

இந்த பகுதியில் சேனல் மற்றும் குறிப்பிட்ட வீடியோவிற்கு எவ்வளவு Views & Watch Time (in minutes) என்பதை பார்க்கலாம். இதில் Watch Time என்பது எப்போதும் அதிக சதவிகிதத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக 1000 Views உள்ள வீடியோ 10000 நிமிடங்கள் பார்க்கப்பட்டு அதன் சதவிகிதம் 20 என்று இருந்தால், உங்கள் வீடியோவில் 20% மட்டுமே சராசரியாக பார்க்கப்படுகிறது என அர்த்தம். இப்படி இருப்பின் வீடியோவில் என்ன பிரச்சினை, நீளம் அதிகமாக இருக்கிறதா என்பதை கவனித்து சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு வீடியோவிலும் கடைசியாக இருக்கும் Average View Duration என்பது Watch Minute சதவிகிதத்திற்கு நிகராக இருக்கும்.

Audience Retention

இதில் ஒட்டுமொத்தமாக உங்கள் சேனல் அல்லது குறிப்பிட்ட வீடியோ சராசரியாக எவ்வளவு நேரம் பார்க்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். இதில் இருக்கும் ஒரு குறிப்பிட்டதகுந்த வசதி ஒரு வீடியோவை மட்டும் தேர்வு செய்து பார்க்கும் போது அது எந்த நொடியில் எத்தனை சதவிகித வாசகர்கள் பார்க்கிறார்கள் என்பதை காட்டும். 1 நிமிடத்திற்குள்ளேயே 50%க்கும் குறைவாக இது இருப்பின் குறிப்பிட்ட வீடியோவில் என்ன பிரச்சினை என்பதை கவனிக்க வேண்டும்.

Demographics

இந்த பகுதியில் எந்த நாட்டில் இருந்து எந்த வயதினர் உங்கள் வீடியோக்களை பார்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம். அத்தோடு பார்ப்பவர்களில் எத்தனை சதவிகிதம் ஆண் & பெண் என்பதையும் அறியலாம்.

Playback Locations

இதில் எங்கிருந்து ஒரு வீடியோவை பார்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம். சிலர் உங்கள் வீடியோவை YouTubeஇல் பார்க்ககூடும், சிலர் உங்கள் வீடியோ YouTube அல்லாத வேறு ஏதேனும் தளத்தில் அல்லது செயலியில் பார்க்கலாம். அப்படி வேறு தளம் என்றால் அது எது என்பதையும் பார்க்கலாம்.

Traffic Sources

இதன் மூலம் எப்படி உங்கள் வீடியோவை பார்க்க வருகிறார்கள் என்பதை அறியலாம்.

Devices

எதில் உங்கள் வீடியோவை பார்க்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். Mobile Phone/Tablet/Computer போன்றவற்றில் எது, அப்படியே என்ன ஆபரேட்டிங் சிஸ்டம்  என்பது உட்பட இதில் பார்க்கலாம்.

Engagement Reports:

Subscribers

இந்த பகுதியில் உங்கள் சேனலுக்கு எவ்வளவு Subscribers, எங்கிருந்து சப்ஸ்க்ரைப் செய்துள்ளார்கள் போன்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Likes and Dislikes

வீடியோவிற்கு வரும் likes & dislikes பற்றி விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Videos in Playlists

உங்கள் வீடியோக்களை பார்ப்பவர்கள் தங்களுக்கு பிடித்துள்ளது என்றால் Playlistஇல் சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த தகவல்களை இதில் காணலாம்.

Comments

ஒவ்வொரு வீடியோவிற்கும் வந்துள்ள கமெண்ட்களின் எண்ணிக்கை, எந்த நாட்டில் இருந்து வந்துள்ளது, எந்த தேதி போன்ற தகவல்களை இதில் காணலாம்.

Sharing

உங்கள் வீடியோக்கள் எத்தனை முறை ஷேர் செய்யப்பட்டுள்ளன, எந்த வசதியை பயன்படுத்தி அதை செய்கிறார்கள் உட்பட பல தகவல்களை இதில் அறிந்து கொள்ளலாம்

Annotations

உங்கள் வீடியோக்களுக்கு  Annotations ஏதும் வைத்திருப்பின் அதை Click & Close செய்த எண்ணிக்கைகளை இதில் காணலாம்.

Cards.

உங்கள் வீடியோக்களுக்கு  Cards வைத்திருப்பின் அதை Click செய்த எண்ணிக்கையை இதில் காணலாம்.

இந்த வசதிகளை ஒட்டுமொத்த சேனலுக்கோ அல்லது ஒரு வீடியோவுக்கோ அல்லது ஒரு ப்ளேலிஸ்ட்க்கோ நம்மால் பார்க்க முடியும். 2 வீடியோக்களை கம்பேர் செய்தும் பார்க்கும் வசதி இதில் இருக்கிறது. இதை செய்ய வலது மேல் மூலையில் இருக்கும் Comparison… வசதியை பயன்படுத்த வேண்டும்.

தேவையெனில் Export Report மூலம் Excel file ஆக இவற்றை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். Export Reportக்கு அருகில் இருக்கும் செட்டிங்க்ஸ் பட்டன் மூலம் சில Default செட்டிங்க்ஸ்களை மாற்றலாம். உதாரணமாக எந்த நாணய மதிப்பில் Revenue தகவல்களை பார்க்க வேண்டும், எந்த கால அளவு Default ஆக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் மாற்றிக்கொள்ளலாம்.

Youtube குறித்த தகவல்கள் இந்த கட்டுரையுடன் முடிவடைகிறது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் prabuk@live.in என்ற மின்னஞ்சல் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம். அடுத்த கட்டுரையில் பேஸ்புக் மூலம் எப்படி சம்பாதிப்பது என்று பார்க்கலாம்.

Post a Comment