கற்போம்: Google Doodle | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

Unity in Diversity - 2012 ஆண்டு சிறுவர்களுக்கான Google Doodle போட்டி


Google Doodle பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். சிலரின் பிறந்த நாள், முக்கிய தினங்கள் போன்றவற்றில் கூகுள் தன் முகப்பை இதன் மூலம் அழகு படுத்தும். இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் Doodle வரைய சொல்லி, அதை தன் முகப்பாக ஒரு நாள் கூகுள் வைக்கும். அதற்கான இந்த வருட தலைப்பு தான்  "Unity in Diversity" அதாவது "வேற்றுமையில் ஒற்றுமை".

இதில் சிறுவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மூன்று பிரிவுகளாக கலந்து கொள்ளலாம். [1-3, 4-6, 7-10.]

சமர்ப்பிக்க கடைசி தேதி - 23 October 2012

முதல் 12 பேர் அறிவிக்கப்படும் நாள் - 29 October 2012

ஆன்லைன் பப்ளிக் வோட் - 29 October 2012 - 3 November 2012

விருது கொடுக்கப்படும் நாள் - 6 November 2012

கலந்து கொள்ள : 

1. முதலில் Google Doodle Form - ஐ தரவிறக்கி கொள்ளுங்கள். 

2. அவற்றை நிறைய பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துள்ள தலைப்பில் உங்கள் குழந்தைக்கு தோன்றுவதை வரைய சொல்லுங்கள். 

3. இதில் மிக முக்கியமான விஷயம் குழந்தை வரையும் Doodle கண்டிப்பாக Google என்ற சொல்லில் சுட்டிகாட்டுவதாகவும் இருக்க வேண்டும். இதை நீங்கள் முந்தைய Doodle களில் பார்த்து இருக்கலாம். உதாரணங்களை பார்க்க இங்கே - Google Doodles

4. வரைந்த படத்தை தெளிவாக Scan செய்து அல்லது உயர்ரக காமிராவில் தெளிவாக படம் பிடித்து அதை PDF ஆக மாற்றி, Doodle Form - இல் இரண்டாம் பக்கத்தில் உள்ள தகவல்களை நிரப்பி indiad4g@google.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

5. அஞ்சல் மூலமும் அனுப்பலாம். அதற்கான முகவரி. 

Wizcraft International Ent. Pvt. Ltd,
Plot No 8,
Sector 32,
Urban Estate,
Gurgaon, Haryana - 122001


வரைவதற்கு சில நிபந்தனைகள்: 

  • A4 பேப்பர் அளவுக்குள் தான் வரைய வேண்டும். 
  • கை மூலமே அல்லது கணினி வழியாகவோ எப்படி வேண்டும் என்றாலும் வரையலாம். 
  • கணினி மூலம் என்றால் ஏற்கனவே உள்ள படங்களில் இருந்து மாற்றம் செய்து உருவாக்க முயற்சி செய்ய கூடாது. 
  • 3D Effect தரக்கூடாது. 
  • தேசிய கோடி, தேசிய சின்னம் போன்றவற்றை இதில் பயன்படுத்த கூடாது. 
  • மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

பள்ளிகளின் கவனத்துக்கு:

நீங்கள் indiad4g@google.com என்ற முகவரிக்கு உங்கள் பள்ளி மாணவர்களிடம் இருந்து இந்த படங்களை பெற்று அனுப்பலாம், இதன் மூலம் Participation Certificate கிடைக்கும்.  படங்களை அனுப்பும் முன் உங்கள் பள்ளியை அதே மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பள்ளி குறித்த தகவல்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

பெற்றோரின் கவனத்துக்கு:

தனியாக அனுப்ப விரும்பினால் நீங்கள் தான் குழந்தைக்கு வழி காட்ட வேண்டும். குழந்தை சார்பாக நீங்கள் தான் அனுப்பவும் வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல்கள் அறிய இங்கே செல்லவும் - Doodle 4 Google India 2012 – Unity in Diversity

வரைவதில் ஏதேனும் சந்தேகம் அதற்கான உதவி பக்கம் - Doodle Resources

குழந்தைகளின் ஓவிய திறமையை வளர்க்கும் இதில் உங்கள் குழந்தைகளையும் கலந்து கொள்ள செய்யுங்கள்.

- பிரபு கிருஷ்ணா


உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்

கூகுளின் முகப்பு பக்கம் முக்கிய நாட்களுக்கு ஏற்றபடி மாறுவதை நாம் பார்த்திருப்போம், இதை விட ஒரு சூப்பர் மேட்டரை கூகுள் நமக்காக செய்கிறது.நீங்கள் இதை கவனிக்க மறந்திருக்கலாம்....நம் பிறந்த நாளுக்கு ஏற்றபடி கூகுள் தன் முகப்பு (Home Page) பக்கத்தை மாற்றி நம்முடன் சேர்ந்து நம் பிறந்த நாளை கொண்டாடுகிறது



கூகுள் இதை எப்படி செய்கிறது ?

நீங்கள் உங்கள் கூகிள் அக்கவுன்ட் டில் Log inசெய்யும் போது அது உங்கள் பிறந்தநாளை செக் செய்கிறது.அது அன்றைய தினத்துடன் மேட்ச் ஆகினால் உங்கள் கூகுள் ஒரு புதிய டூடுளை (doodle)(கூகிள் முகப்பு படம்) உங்கள் முகப்பு பக்கத்தில் காட்டி உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.

கேக் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் உங்களுக்கு மட்டும் காட்டப்படும் இந்த பிரத்யேக முகப்பு பக்கத்தின் அருகே நீங்கள் உங்கள் மவுஸின் கர்சரை கொண்டு சென்றால்."Happy birthday..............(உங்கள் பெயர்)" என்று எழுதி காட்டும்.அதை நீங்கள் க்ளிக் செய்தால் உங்கள் கூகிள் பிளஸ் Profile திறக்கப்படும்.


இந்த விசயத்தை கூகிள் எப்போதிருந்து செய்கிறது?


2010 ம் வருடத்திலிருந்து இந்த "பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்' கூகிளின் முகப்பு பக்கம் நடைமுறையில் உள்ளது இது ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் முகப்பு பக்கத்தில் கேக் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்கிறது (பார்க்க படம்).



சில மாதங்களுக்கு முன் கூகுள் இந்த டூடிலை(Doodle) மறு வடிவம் செய்திருக்கிறது.(இதுல 6 கேக் இருக்கு!!!).


கூகிள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல:

1.கூகிளில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கனும்

2.கூகிள் பிளஸ் -ல் உங்கள் பிறந்த நாளை (Date of birth) கொடுத்திருக்க வேண்டும்.

3.உங்க பிறந்த நாள் அன்று நீங்கள் அக்க்வுன்டில் லாக் இன் ஆகியிருக்க வேண்டும்.

இதெல்லாம் நீங்க செய்திருந்தீர்கள் என்றால் கூகுள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.

Google நிறுவனத்தினர் எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ???
இணைய உலகின் தல கூகுள் தான்.தல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல.


About The Author: 

பதிவை எழுதிய விஜயன் துரைராஜ் கடற்கரை என்னும் வலைப்பூவில் தொழில்நுட்பம், கட்டுரை, கவிதை என பல எழுதி வருகிறார். கற்போம் தளத்திற்கு தன் தொழில்நுட்ப பதிவுகளையும் தருகிறார்.


நீங்களும் கெஸ்ட் போஸ்ட் எழுத - கற்போமில் பதிவு எழுத விருப்பமா? 

2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி?

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது கூகுள் தளம் அதை சிறப்பிக்கும் வண்ணம் தினமும் சில Doodles-களை வெளியிட்டது. அதில் சில நாம் விளையாடும் படியும்  இருந்தது. நிறைய பேருக்கு பிடித்து இருந்த அவற்றை மறுபடியும் விளையாடுவது எப்படி என்று பார்ப்போம்.

Alan Turing க்கு கூகுள் செய்த சிறப்பு - Google Doodles


Google Doodles என்பது பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். இதில் பெரும்பாலும் உலகின் தலை சிறந்த மேதைகளை பெருமை படுத்தும் வகையில் அடிக்கடி Google Doodle உருவாக்கப்படும். அந்த வகையில் இன்று அலன் டூரிங் அவர்கள் பிறந்த நாளை சிறப்பிக்கிறது. இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அதைத்தான் இந்த பதிவு விளக்கப் போகிறது. 

முதலில் யார் இந்த அலன் டூரிங் ?

//அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 ஜூன் 1912 – 7 ஜூன் 1954) ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.//


இவர் தந்தை இந்தியாவில் பணி புரிந்து பின்னர் இங்கிலாந்து சென்றவர். தனது 41 வயதில் மரணமடைந்த இவருடைய 100-ஆவது பிறந்த நாள் இன்று. 

இந்த மேதையை சிறப்பிக்கும் வகையில், அவரது துறையான கணிதத்தையே Google Doodle க்கு பயன்படுத்தி உள்ளது. இது நாள் வரை வெறும் பார்க்க மட்டுமே இருந்த Google Doodle-கள் மத்தியில் இது சில குறிப்புகளை கொண்டுள்ளது. ஒரு சசிறிய விளையாட்டு போல இது உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலே படத்தில் உள்ளது போல முதலில் வரும், ஒரு Play Button, Binary எண்கள் என்று உள்ள இது ஒரு Task. ஒவ்வொரு டாஸ்க்கையும் முடித்தால் Google என்பதில் ஒவ்வொரு எழுத்தும் தெரிய ஆரம்பிக்கும். எல்லாவற்றையும் தெரியும்படி செய்து விட்டால் நீங்கள் வெற்றி. [ஏற்கனவே Google தெரியுதே என்பவர்கள் அது வழக்கமான நிறத்தில் இல்லை என்பதை கவனிக்க]

இதை எப்படி Solve செய்வது என்று கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

முதலாவதை மட்டும் நான் விளக்குகிறேன்:

முதலில் இரண்டு பூஜ்ஜியங்களின் மீதும் கிளிக் செய்யவும், பின்னர் Play/Run பட்டனை கிளிக் செய்யவும். இப்போது கூகுள் மேலே குட்டி கட்டத்தில் உள்ளதையும், நீங்கள் அமைத்ததையும் சரி பார்க்கும் இரண்டும் சரியாக இருந்தால் G - Enable ஆகும். அடுத்த டாஸ்க் ஆரம்பிக்கும். இது போல எல்லாவற்றுக்கும். 


வெறும் தகவல்களை தேடி தரும் வேலையை மட்டும் செய்யாமல், இது போன்று நிறைய, அரிய முயற்சிகளை செய்வதால் தான் கூகுள் இணையத்தில் நிலைத்து நிற்கிறது போலும்.

- பிரபு கிருஷ்ணா