Youtube கொஞ்சம் ரகசியங்கள் | கற்போம்

Youtube கொஞ்சம் ரகசியங்கள்

Youtube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி, youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன்.     




1. எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது?

youtube ஆனது ஆரம்பிக்கப்பட்ட போது  4:3 (Width:Height) என்ற அளவில் வீடியோக்களை பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது 16:9 என்று உள்ளது. இதனால் உங்கள் வீடியோக்களை அந்த அளவுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் முழு ஸ்க்ரீன் வீடியோ வரும். சரி 16:9  இல்லை என்றால் என்ன செய்வது? ஒன்றும் இல்லை, Video upload செய்து முடித்த உடன் உங்கள் வீடியோ சிறியதாக இருந்தால் (Youtube இல் பார்க்கும் போது நிறைய கருப்பு ஏரியா இருக்கும் ) Edit என்ற பகுதியில் சென்று Tag என்பதில்  yt:Stretch=16:9 என்று கொடுக்கவும். இது கிட்டதட்ட முழு ஸ்க்ரீன் ஆக வீடியோவை கொடுக்கும். அதே வீடியோ பெரிதாக இருந்தால்  yt:crop=16:9.

ஏற்கனவே upload செய்தவற்றையும் நீங்களும் இப்படி கொடுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.


Watch Video:http://www.youtube.com/watch?v=MFPcAIM8fB0

இது எல்லா வீடியோக்களுக்கும் இது பொருந்தாது. மேலே உள்ள இரண்டும் வீடியோ தரத்தை பொருத்தது. 

2. Tag என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

இந்த பகுதியில் உங்கள் வீடியோக்களை தேடும் போது காட்ட குறிப்புகள் தரலாம். (blogger இல் label போன்று ) இதில் ஒரு வார்த்தை என்றால், //உதாரணம் prabu// என்றால் அப்படியே கொடுக்கவும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட வார்த்தை தொடர் கொடுக்கும் போது //உதாரணம் prabu krishna, karpom videos// இப்படி கொடுக்க வேண்டும்.
அதாவது இப்படி,

  //prabu krishna, karpom, karpom videos, how to videos, computer tricks & tips in tamil //

3. Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும்   Save Vid .அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும்  . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான  Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.    

13 comments

nalla pathivu sako...
sila vidangkalai ungkal pathivil arinthu kondean....
valththukkal.....

Reply

It you stretch the video, then it won't be in a good ratio... You have to create a video with desired ratio...

Reply

@Anonymous

நண்பரே youtube நாம் கொடுக்கும் வீடியோ வை சிறிது படுத்திதான் play செய்யும். yt:stretch=16:9 கொடுப்பதால் நம் வீடியோ ஒரிஜினல் அளவிற்கு youtube இல் play ஆகும்.

Reply

நல்ல பயனுள்ள தகவல் சகோ

Reply

நல்ல தகவல் தொடருங்கள் ...

Reply

1.ithu audio mattum download aaguma?

2. video vum download panna eppadinnu solla mudiyuma?

thanks

Reply

//Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது//

thanks

Reply

//Anonymous Anonymous said...

1.ithu audio mattum download aaguma?

2. video vum download panna eppadinnu solla mudiyuma?//

நண்பரே keepvid தளம் உங்களுக்கு விருப்பமானது போல தரும். ஆடியோ,வீடியோ இரண்டும் அங்கே கிடைக்கும்.

Reply

யூ டியூப் பற்றிய கலக்கலான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க. நோட் பண்ணி வைக்கிறேன் பாஸ். வீடியோ அப்லோட் பண்ணும் கண்டிப்பாக நீங்கள் கூறிய அறிவுரைகளை யூஸ் பண்றேன்.

Reply

you tube பற்றி உபயோகமான தகவல் ...குறித்து வைத்துக்கொள்கிறேன் நண்பரே... rajeshnedveera
www.maayaulagam-4u.blogspot.com

Reply

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com .அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும் . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Read more: http://www.karpom.com/2011/07/youtube.html#ixzz1t2ea0clS//

java install panni iruntha than ithu download agum, atha sollama vituteengala?

Reply

nalla pathivu very helpful

Reply

Post a Comment