நம்முடைய Facebook Timeline Wall -இல் மற்றவர்களை போஸ்ட் போடாமல் தடுப்பது எப்படி? | கற்போம்

நம்முடைய Facebook Timeline Wall -இல் மற்றவர்களை போஸ்ட் போடாமல் தடுப்பது எப்படி?


நாம் சென்ற பதிவில் Facebook Photo Tag பிரச்சினையை தவிர்ப்பது எப்படி? என்பதை பற்றி பார்த்தோம். ஆனால் எனது Wall-இல் போஸ்ட்களையும் பகிர்கிறார்கள்,அதற்கு  என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு. இதன் மூலம் உங்கள் Timeline-இல் யாரும் போஸ்ட்களை பகிர முடியாது.

முதலில் உங்கள் முகபுத்தகத்தில் Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை சொடுக்குங்கள் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பக்கம் கிடைக்கும். 



அதில் Privacy Settings என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதை தேர்வு செய்தவுடன் ஒரு பக்கம் தோன்றும் அதில் Timeline Tagging என்பதிற்கு நேரே உள்ள Edit Settings என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் .




பின்பு தோன்றும் பக்கத்தில் who can post on your timeline ல் No  One என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் ,



இனி கவலையை விடுங்கள் . யாரும் உங்களை தொந்தரவு செய்ய இயலாது .

கேள்வி கேட்ட நண்பர் வரலாற்று சுவடுகள் அவர்களுக்கு நன்றி. 

- சூர்ய பிரகாஷ் .K .P .


8 comments

மிக்க நன்றி சகோ..,

Reply

கண்டேன் புதையலை .. :)

உதவிக்கு மிக்க நன்றி நண்பரே ..!

Reply

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

Reply

மிகவும் பயனுள்ள தகவல்.

Reply

அன்பின் சூரிய பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - செய்து விடுகிறேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Reply

Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.