ஜிமெயில் Attachment-களை எளிதில் தேடுவது எப்படி? | கற்போம்

ஜிமெயில் Attachment-களை எளிதில் தேடுவது எப்படி?

இன்றைக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைவரும் அடிக்கடி நமக்கு தேவையான கோப்புகளை அதில் இணைத்து அனுப்புகிறோம். ஏதேனும் ஒரு சமயத்தில் திடீர் என நமக்கு ஒரு கோப்பு அவசரமாக தேவைப்படும், அந்த சமயத்தில் அது எந்த மின்னஞ்சலில் வந்தது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருப்போம். அதை மிக எளிதாக, உடனடியாக தேடித் தரும் பாதுகாப்பான வசதியைத் தான் நாம் பார்க்கப் போகிறோம். 


1. முதலில் https://gindex.tirino.me/  என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.

2. இதில் உங்கள் ஜிமெயில் கணக்கை கொடுத்து நுழையவும். 

3. இப்போது கூகுள் கணக்கு இதைப் பயன்படுத்த அனுமதி கேட்கும், Allow என்று தரவும். 

4. அடுத்த பக்கத்தில் terms of service and Privacy போன்றவற்றை Accept செய்யவும். 

5. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சலில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கையையும், எத்தனை மின்னஞ்சல்கள் கோப்புகளை கொண்டுள்ளன எனவும் காட்டும். 

6. இப்போது அந்த பக்கத்தின் மேலே உள்ள "Browse", "Search" என்பதில் "Browse" என்பதை தெரிவு செய்யவும். 

7. வரும் புதிய பக்கம் கீழே உள்ளது போல இருக்கும்.



8. இதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்தால் உங்கள் Attachment ஐ மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம்.


9. மேலே Search என்பதை தெரிவு செய்தால், குறிப்பிட்ட Attachment -ஐ நீங்கள் பெயர் கொடுத்து தேடலாம்.

இதை ஆங்கிலத்தில் வீடியோ ஆக கீழே காணலாம்.



- பிரபு கிருஷ்ணா

6 comments

தகவலுக்கு நன்றி நண்பரே

பாதுகாப்பானது தானே.?

Reply

ஆம் நண்பரே. பாதுகாப்பானதே :-)

Reply

அன்பின் பிரபு - அரிய தகவல் - பயணுள்ள தகவல் - சில சமயம் நான் படாத பாடு பட்டிருக்கிறேன். பயன் படுத்துகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

நன்றி ஐயா

Reply

Post a Comment