Karbonn S2 Titanium - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்

Karbonn S2 Titanium - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

Micromax போலவே சாதாரண போன்களை வெளியிட்டு பிரபலமாகி பின் ஸ்மார்ட்போன் பக்கம் வந்த நிறுவனம் Karbonn. பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் S2 Titanium என்ற புதிய போன் ஒன்றை ரூபாய் 10790 க்கு அறிமுகம் செய்துள்ளது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது. Dual Sim  & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Karbonn S2 Titanium Specifications:

Operating SystemAndroid 4.1 Jelly Bean
Display5 inch (800 x 480 Pixels) capacitive touch screen
Dual SimYes, Dual Sim, GSM+GSM and Dual Standby
Processor1.2 GHz Quad Core processor
RAM1 GB RAM
Internal Memory4 GB Internal Memory (1.79 GB user memory)
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera:8 MP, 3264×2448 pixels, autofocus, LED flash
Front Camera: 2 MP
Battery2100 mAh battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

8 MP கேமரா, 2 MP Front கேமரா போன்றவை குறிப்பிடதக்க சிறப்பம்சங்கள். தரும் விலைக்கு உகந்த வண்ணம் வசதிகள் உள்ளன. கேமரா மூலம் HD (720p) ரெகார்டிங் செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக வாங்கலாம்.

தகவல் - Specs Of All
- பிரபு கிருஷ்ணா

Post a Comment