ரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013] | கற்போம்

ரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]

தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய் 10,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம். 

பட்டியலில் உள்ள போன்கள் ஐந்தும் குறைந்த பட்சம் 5MP கேமரா உள்ளவைகளாக தெரிவு செய்துள்ளேன்.

விலை Flipkart தளத்தில் இருந்து Update செய்யப்பட்டுள்ளது. தேதி 10-04-2013. மற்ற தளங்களில் விலை மாறுபடலாம்.
Intel Processor மூலம் தனது மார்கெட்டை தொடங்கிய XOLO நிறுவனத்தின் சமீபத்திய வரவு A800. 4.5 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 8 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim என அசத்தலான வசதிகளுடன் உள்ளது. கொடுக்கும் விலைக்கு மேலேயே வசதிகள் கிடைக்கின்றன. குறைந்த விலைக்கு மிக அதிகமான வசதிகளை எதிர்நோக்கும் நபர்களுக்கு உகந்த மாடல். 

Micromax A101 - ரூபாய் 9999


குறைந்த விலை போன்களின் ஆதர்ச நிறுவனமான Micromax இன் இந்த மாடல் 5 Inch TFT Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. 5 Inch Display என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 

Samsung Galaxy Ace S5830i - ரூபாய் 9230 Full Specifications


சாம்சங் நிறுவனம் 2011 ஆண்டு வெளியிட்ட இந்த போன் இன்னும் பல வாசகர்களுக்கு பிடித்துள்ளது. இது 3.5 Inch TFT Capacitive Touchscreen, 832 MHz Processor, Android v2.3 (Gingerbread) OS மற்றும் 5 MP Camera போன்றவற்றுடன் வருகிறது. OS பழைய Version மற்றும் கேமராவில் Flash இல்லை போன்றவை குறைபாடுகள். இவை பற்றிய கவலை இல்லாதவர்கள் வாங்கலாம்.

Lava Iris 501 - விலை 9199 Full Specifications


ஸ்மார்ட்போன் மார்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வரும் Lava நிறுவனத்தின் Iris 501 மாடல் 5 Inch Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. மேலே சொன்ன Micromax A101 போலவே 5 Inch Screen என்பது சிறந்த அம்சம்.

மறுபடியும் அதே Xolo தான். இந்த B700 போனும்  4.3 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் உள்ளது. மிகக் குறிப்பிடத்தக்க விஷயம் 3450 mAh பாட்டரி. இது 23 மணி நேரம் Talk Time மற்றும் 380 மணி நேரம் Standby Time போன்றவற்றுடன் வருகிறது. 

இந்த ஐந்து போன்களை தவிர மற்ற சிறந்த போன்கள் கீழே உள்ளன. 
  1. XOLO B700 - Rs. 8999
  2. XOLO X500 - Rs. 8499
  3. XOLO A700 - Rs. 7999
  4. Karbonn Smart A12 - Rs. 7990
  5. Huawei Ascend Y300 - Rs. 7980
இது எனது பரிந்துரை மட்டுமே. உங்கள் பார்வையில் இந்த விலைப் பட்டியலில் வேறு போன்கள் இருந்தால் அவற்றை கீழே சொல்லுங்கள். 

இந்த பகுதியை இனி தொடரலாம் என்று நினைக்கிறேன், அதற்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். 

- பிரபு கிருஷ்ணா

17 comments

புதிய மொபைல் வாங்குபவர்களுக்கு பயனாக இருக்கும் சகோ! தொடருங்கள்!

Reply

You missed micromax a110 canvas2. Price Rs.9999/-

Reply

தகவல்களுக்கு நன்றிங்க

Reply

நன்றி சகோதரரே!

Reply

Thanks for info. Micromax A 101 and Micromax A 110 Canvas 2, which
one is better for me. A senior Citizen of 72 years old. Better
features will help me to learn more about Mobile Technology.

Reply

தொடருங்கள். Dual Sim ஐ வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? அதன் நன்மைகள் என்ன என்று சொல்லிக்கொடுத்தால் தேவலை.

Reply

தகவல்களுக்கு நன்றி...

Reply

Samsung Best 5 Mobile? சொல்லுங்க Friend

Reply

WHAT ABOUT BEST TABS WITH CHEAP PRICE PLEASE LET US KNOW

Reply

இரண்டு சிம்களை ஒரே போனில் பாவிக்கலாம். ஒவ்வொரு சிம்மிற்கும் தனித்தனி போன் தேவையில்லை.

Reply

i want samsung single sim with 2.3.6 android os details please

Reply
This comment has been removed by the author.

நல்ல தகவல்கள். குறைந்த விலை ஆண்ட்ராய்ட் மொபைலை வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . நன்றி பிரபு..

Reply

try pantech burst p9070 mobile @ around 9000 available in ebay...1.5 ghz dual processor 1gb ram..16gb internal memory..best..vfm..

Reply

good article...i like to recommend..pantech burst mobile..1.5ghz dual core processor..1gb ram..16 gb internal memory. excellent for gaming ..4g mobile..in bsnl 2g net comes around 300kbps..i am using for last one year..highly recommended..it's available in ebay geb..

Reply

onida i099 with 1ghz processor ans ice-cream sandwich os just rs.5500

Reply

Post a Comment