கற்போம்: Custom Domain | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

Blogger Custom Domain Settings - சில மாற்றங்கள்


பிளாக்கரில் தங்கள் சொந்த டொமைன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் கூகுள், பிளாக்கர் Domain Add செய்வதற்கு CNAME செட்டிங்க்ஸ் பகுதியில் ஒரு புதிய Record சேர்த்துள்ளது. இதன் காரணமாக புதியதாக டொமைன், சப்-டொமைன் போன்றவற்றை சேர்ப்பவர்களுக்கு Domain Verify -யில் பிரச்சினை என்று வரும். அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். 

நீங்கள் டொமைன் அல்லது சப்-டொமைன் Add செய்யும் கீழே உள்ள பிரச்சினை வரும். 

“We have not been able to verify your authority to this domain. Error 12. Please follow the settings instructions.”

படம் : 

உங்கள் டொமைன் பெயருக்கு கீழே உள்ள "Settings Instructions" என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் "Blogger Custom domain Instructions" பக்கத்துக்கு வருவீர்கள். 

அதில் நீங்கள் Domain அல்லது Sub-domain என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். [நீங்கள் எதை Add செய்கிறீர்களோ அதை]


இப்போது வரும் பக்கத்தில் CNAME Add செய்வதற்கான வழி முறை இருக்கும். பெரும்பாலும் நீங்கள் முதல்  CNAME  Add செய்து இருப்பீர்கள். (www, ghs.google.com என்பது). 

இப்போது புதியதாக இரண்டாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அதையும் CNAME Record - இல் தான் Add செய்ய வேண்டும். அது கீழே படத்தில் சிவப்பு கட்டத்தில் உள்ளது [படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணவும்]


இதே போன்று உங்களுக்கும் ஒன்று இரண்டாவது  CNAME  ஆக வரும். அது சில மாற்றங்களுடன் இருக்கும். ஒவ்வொரு டொமைன்க்கும் ஒவ்வொன்று.

இப்போது நீங்கள் டொமைன் வாங்கிய தளத்திற்கு சென்று, உங்கள் டொமைன் Settings பகுதியில் DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும்.  இதில் Destination ஆக உள்ள மிகப் பெரிய ஒன்றில் .com க்கு பிறகு ஒரு முற்றுப் புள்ளி இருக்கும் [dot] அதை கொடுக்க வேண்டாம்.

Bigrock தளத்தில் டொமைன் வாங்கியவர்கள் கீழே படத்தில் உள்ளது சேர்க்க வேண்டும். உங்களுக்கான  CNAME  Settings ஐ என்பதை மறந்து விடாதீர்கள்.


Bigrock மூலம் Domain வாங்கியவர்கள் முதல் டொமைன் Add செய்வது பற்றிய தெளிவான பதிவை இங்கே படிக்கவும் - BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

இதை செய்து முடித்த பின் 6-8 மணி நேரங்களுக்கு பிறகு உங்கள் டொமைன் அல்லது சப்-டொமைனை Add செய்து பாருங்கள். வேலை செய்யும். 

மீண்டும் பிரச்சினை என்றால் மீண்டும் பதிவை படிக்கவும். சரியாக செய்யாவிட்டால் மட்டுமே இது வேலை செய்யாது. 

வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேட்கவும். 

ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

நன்றி - Tech Hints

-பிரபு கிருஷ்ணா

உங்கள் தளம் லோட் ஆகும் நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொரும் தங்கள் தளம் விரைவில் லோட் ஆக வேண்டும், வாசகருக்கு அதிக நேரம் லோட் ஆகி தொல்லை தரக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சில கோடிங், படங்களை சேர்க்கும் போது லோட் ஆக அதிக நேரம் ஆகலாம். இந்த மாதிரி விசயங்களில் முதலில் நமக்கு எது பிரச்சினை என்று தெரிய வேண்டும். அதை எப்படி கண்டுபிடிப்பது?

Discounts விலையில் Bigrock-இல் டொமைன் வாங்க

பதிவர்கள் பலருக்கும் டொமைன் வாங்கும் ஆசை உள்ளது. அப்படி டொமைன் வாங்க விரும்பும் நண்பர்களுக்கு கடந்த பதிவு ஒன்றில் எங்கே கஸ்டம் டொமைன் வாங்குவது? என்று சொல்லி இருந்தேன். இப்போது bigrock-இல் 10% Discount விலையில் டொமைன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. 

எங்கே கஸ்டம் டொமைன் வாங்குவது?

சில நாட்களுக்கு முன் இந்திய பதிவர்களின் வலைப்பூ முகவரியை கூகுள் தளம் மாற்றிய பின் நிறைய பதிவர்கள் தங்களை வலைப்பூவை சொந்த டொமைன்க்கு மாற்றி வருகின்றனர். எல்லோராலும் பிளாக்கரில் உள்ள வசதி மூலமே கஸ்டம் டொமைன் பெற முடியாத நிலையில் எங்கு டொமைன் வாங்குவது என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பதிவு. 

Bigrock இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி?

தற்போது கூகுள் இந்திய பிளாக்கர்களின் முகவரிகளை மாற்றிய பின் நிறைய நண்பர்கள் புதிய டொமைன்க்கு மாறி வருகிறார்கள். அப்படி மாறும் நண்பர்கள் பலர் Bigrock தளத்தை தான் தெரிவு செய்கிறார்கள்.  அப்படி உருவாக்கும் நண்பர்களுக்கு அந்த அக்கௌன்ட் மூலம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்க முடியும். எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

BigRock டொமைனுக்கு Sub Domain அமைப்பது எப்படி?

பதிவுலகில் நிறைய நண்பர்கள் இப்போது சப்-டொமைன் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.முன்னர் Custom Domain பற்றிய தொடர்எழுதிய போது  நிறைய நண்பர்கள் அதை மின்னஞ்சல் மூலம் கேட்டு இருந்தனர். அதற்கு அடுத்து Bigrock மூலம் வாங்கிய டொமைனை எப்படி பிளாக்கர்க்கு பயன்படுத்த என்று சொன்ன போது அதைப் பற்றி சொல்லி இருக்கவில்லை. சில நாட்கள் முன்பு நண்பர் ஒருவர் அது குறித்து கேட்டு இருந்தார். அவருக்கும், சப்-டொமைன் தேவைப்படும் எல்லோருக்கும் இந்தப் பதிவு.

Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?

கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின் விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும் கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.

BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

நிறைய பதிவர்களுக்கு சொந்த டொமைன் வாங்க வேண்டும், அதில் பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளதை நான் கடந்த முறை எழுதிய custom domain குறித்த பதிவுகளின் வாயிலாக அறிந்தேன். ஆனால் அவர்களிடம் Credit Card இல்லாத காரணத்தால் சொந்த டொமைன் வாங்க இயலவில்லை என்பதும் புரிந்தது. இப்போது வெறும் டெபிட் கார்ட் மூலம் பல தளங்களில் எளிதாக டொமைன் வாங்கலாம். அவ்வாறு வாங்கிய பின் சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதே இந்தப் பதிவு. 

High Tech Hints ஒரு வளரும் பயிர்

இணையம் என்னும் தோட்டத்தில் பல மரங்கள் உண்டு. அந்த மரங்களுக்கு மத்தியில் முளைத்த ஒரு குட்டிப் பயிர்தான் இந்த "High Tech Hints". இதற்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு வளர்ப்பவன் உங்கள் நண்பன், சகோதரன் பிரபுவாகிய நான்தான். ஆம் எனது புதிய தளம்தான் இது. 

Sub-Domain அமைப்பது எப்படி? - 4

இந்த பதிவு இந்த தொடரின் முக்கியமான ஒன்று. நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்து இருக்கும் போது அவை எல்லாவற்றையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவது தான் இதன் செயல். இதன் மூலம் நிறைய பலன்கள் உள்ளது. அத்தனையும் இந்தப் பதிவில் காண்போம்.

Blogger Custom Domain மூலம் என்னென்ன வசதிகள்?- 3

இந்த தொடரின் கடந்த இரண்டு பதிவுகளில் எப்படி டொமைன் வாங்குவது என்பதை சொல்லி இருந்தேன். இன்று நான் கூறப்போவது மிக முக்கியமான விஷயங்கள். நீங்கள் கொடுக்கும் 10$ க்கு வெறும் டொமைன் மட்டும் கிடைக்கவில்லை. இன்னும் பல வசதிகளை கூகிள் தருகிறது என்னவென பார்ப்போமா?

எப்படி Custom Domain வாங்குவது ? - 2

என்னுடைய கடந்த பதிவில் நான் custom domain வாங்குவதால் என்ன பலன் என்று கூறி இருந்தேன். அந்த பதிவு உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது எப்படி custom domain வாங்குவது என்பதை விளக்குகிறேன்.   

ஏன் Custom Domain வாங்க வேண்டும்? - 1

நான் ரொம்ப நாளாக யோசித்து எனது வலைப்பூவை எனது சொந்த டொமைன்க்கு மாறினேன். சரி அதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம். எனக்கும் இது தோன்றியது. இதோ நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.