கற்போம்: Ms Word | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

MS Word - இல் Drop Cap வசதியை பயன்படுத்துவது எப்படி?


Drop Cap என்பது நாம் அடிக்கடி பார்க்கும் ஒரு வசதி. பக்கத்தின் முதல் எழுத்தை மட்டும் பெரிது படுத்தி காட்டும் இந்த வசதி நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

1. முதலில் உங்கள் MS Word - ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 

2. Insert >> Drop Cap என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. இதை இரண்டு விதமாக நீங்கள் பயன்படுத்த முடியும். முதலாவது Dropped Drop Cap இரண்டாவது In Margin Drop Cap. 


4. Drop Cap Options என்பதை கிளிக் செய்து அந்த முதல் எழுத்தின் Font மற்றும் இதர Settings -ஐ மாற்றலாம். 

5. உதாரணமாக நான் முதல் எழுத்தின் Font - ஐ மாற்றி உள்ளேன். 

- பிரபு கிருஷ்ணா

PDF, PPT, Excel, Audio, Video File-களை Word - இல் Embed செய்வது எப்படி?


நாம் தினமும் பயன்படுத்தும் மென்பொருட்களில் முக்கியமானது MS Word. சில சமயங்களில் PDF, PPT, Excel, Audio, Video File-க Word File க்குள் Embed செய்ய வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

இந்த பதிவில் ஒரு PPT file ஐ எப்படி Embed செய்வது என்று பார்ப்போம். 

1. முதலில் குறிப்பிட்ட Word File - ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 

2. இப்போது அதில் எங்கே Powerpoint Presentation வர வேண்டுமோ அங்கே உங்கள் Cursor - ஐ வைத்துக் கொள்ளுங்கள். 

3. இப்போது Word - இல் Insert பகுதியில் Object என்பதை கிளிக் செய்யுங்கள். 


4. இப்போது வரும் சிறிய Window வில் Create From File என்பதை கிளிக் செய்யுங்கள். 

5. அடுத்து Browse மூலம் குறிப்பிட்ட Powerpoint File - ஐ நீங்கள் தெரிவு செய்து OK கொடுத்தால் Insert ஆகி விடும். 


6. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Powerpoint file இருக்கும். அதன் மீது Double Click செய்தால் போதும், Presentation Start ஆகி விடும். 


7. இதே போல PDF, Excel, Audio, Video File போன்றவற்றையும் Embed செய்ய முடியும். அவற்றின் மீது Double Click செய்து அவற்றை ஓபன் செய்திடலாம். 

- பிரபு கிருஷ்ணா

MS Office Word-சில கேள்வி பதில்கள்

கணினியை பயன்படுத்துபவர்கள் MS Office Word ஐ பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அடிக்கடி பயன்படுத்தும் போதும் இதில் சில சமயம் நமக்கு சில சந்தேகம் வருவது உண்டு. அப்படி எனக்கு தோன்றிய சந்தேகங்களையும்,  கிடைத்த பதில்களும் உங்களுக்கு இங்கே. உங்களுக்கு வேறு சந்தேகம் இருப்பின் கீழே கமெண்ட் பகுதியில் கேட்கலாம்.