தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே கொண்டு வருவது எப்படி ? | கற்போம்

தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே கொண்டு வருவது எப்படி ?


இன்று பதிவர்கள் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் ஓட்டுப்பட்டைகளில் ஒன்று தமிழ்மணம். ஆனால் அவர்கள் தளத்தில் சொல்லி உள்ளபடி நாம் அதை இணைக்கும் போது அது பதிவுக்கு மேல் வரும். அதனை எப்படி பதிவுக்கு கீழே கொண்டு வருவது என்று இந்த பதிவில் பார்ப்போம். 

முதலில் Blogger >> Template >> Edit HTML பகுதியில் Template Coding பகுதியில்  CTRL+F மூலம் tamilmanam என்பதை தேட வேண்டும். 

இப்போது குறிப்பிட்ட வரியில் <!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --> என்று ஆரம்பித்து இருக்கும். இது தான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையின் ஆரம்பம். 

அதில் ஆரம்பித்து <!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --> என்பது முடியும் வரை உள்ள Coding-களை Cut செய்து கொள்ளுங்கள். [நீக்கியும் விடலாம்.]

இப்போது அவற்றை ஒரு Notepad File ஒன்றில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அது கீழே உள்ளது போல இருக்க வேண்டும். 

<!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'></script><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'></script></b:if><!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->

இப்போது அதே Edit HTML பகுதியில் மறுபடியும் CTRL+F கொடுத்து <data:post.body/> என்பதை தேடுங்கள். 

அதற்கு அடுத்த லைனில் மேலே உள்ள Coding - ஐ பேஸ்ட் செய்து Save Template என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

சில Template களில் ஒன்றுக்கும் மேற்பட்ட <data:post.body/> இருக்கலாம். அப்படி இருந்தால்எதில் வரவில்லையோ அதை நீக்கி விட்டு மற்றதின் கீழே பேஸ்ட் செய்து பாருங்கள். 

இப்போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டை உங்கள் பதிவின் கீழே இருக்கும். புரியாதவர்கள் கீழே கமெண்ட் மூலம் சொல்லவும். 

- பிரபு கிருஷ்ணா

6 comments

தங்களுடைய அருமையான பதிவு படித்து தமிழ்மணம் ஒட்டுப்பட்டை இணைத்துள்ளேன் ...பதிவு வெளிவருமா என்று தெரியவில்லை ..ஆயினும் நன்றி

Reply

அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பலருக்கும் பயன்படும் தகவல் - கற்போமில் வருவதை எல்லாம் படித்துவிடுவேன் - தேவைஎனில் பயன் படுத்துவேன். நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

Reply

பலருக்கும் உதவும்... நன்றி...

Reply

pls tell me how to add facebook like page in blog side bar??

Reply

http://www.bloggernanban.com/2011/06/like-box.html

இந்த பதிவை பாருங்கள்.

Reply

Post a Comment