September 2013 | கற்போம்

பேஸ்புக்கில் புதிய வசதி - ஷேர் செய்த பிறகு Statusஐ எடிட் செய்யலாம்

பேஸ்புக் தளம் அவ்வப்போது புதிய வசதிகளை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தான் எப்போதும் ராஜா என்பதை நிரூபித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வந்துள்ள புதிய வசதி நாம் பகிர்ந்த Status களை Edit செய்யும் வசதி. இதன் மூலம் நாம் ஒரு Status - இல் ஏதேனும் எழுத்துப் பிழை செய்திருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம்.

இதை செய்ய நீங்கள் ஏற்கனவே பகிர்ந்த Status ஒன்றிற்கு செல்லுங்கள். அதில் வலது மூலையில் உள்ள Options Icon ஐ கிளிக் செய்யுங்கள். அதில் Edit ஒன்று ஒரு புதிய வசதி வந்திருக்கும்.



இப்போது மாற்றம் செய்யும் வசதி வரும். தேவையான மாற்றத்தை செய்யுங்கள். பின்னர் Done Editing என்பதை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவு தான் உங்கள் Status எடிட் செய்யப்பட்டு விட்டது. ஆனால் இதை வைத்து ஏதும் ஏமாற்றும் வேலைகளை நீங்கள் செய்ய முடியாது. காரணம் Edit செய்து முடித்தவுடன் Done Editing என்று வந்து விடும். இதனால் நீங்கள் எப்போது, என்ன மாற்றம் செய்தீர்கள் என்று எல்லாமே வந்து விடும். யாரெல்லாம் போஸ்டை பார்க்க முடியுமோ அவர்களால் நீங்கள் எடிட் செய்ததையும் பார்க்க முடியும்.



ஏதேனும் தவறாக எழுதி இருப்பின் இதை பயன்படுத்தி மாற்றம் செய்யலாம். இது நிறைய பேருக்கும் பயன்படும் வசதியாக இருக்கும்.

Facebook Android App-ஐ பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் ஆகியுள்ளது. iPhone பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி கிடைக்கும்.

Blue Screen Error (Blue Screen of Death -BSOD) பிரச்சனைகளும், தீர்வும்

Windows has been shut down to prevent damage to your computer என்ற செய்தியுடன் நீலத்திரைப் பிழை (Blue Screen Error, Blue Screen of Death-BSOD) சில சமயம் கருந்திரையாகவும் (Black Screen) வருவதுண்டு. இது பல காரணங்களால் வருகிறது. விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் இப்படியான தவறுகள் லீனக்ஸ் கணினிகளில் வருவதில்லை. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.

Page Fault error எனப்படும் 0x00000050 என்பது Blue Screen of Death (BSOD) எனவும் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. Hard Disk, ட்ரைவர்(Device Driver), சில மென்பொருள் காரணமாக, இயங்கிக் கொண்டிருக்கும் கணினியில், தரவுகள்(data) அழியாமலும், கணினியைக் காப்பதற்காகவும் கணினி நீல நிறத் தவறு (Blue Screen Error ) எனக் காட்டி கணினி இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.



Hard Diskல் ஏற்பட்ட பிழைகள் மற்றும் இணைக்கப்பட்ட வன்பொருள் பழுதடைந்த அல்லது சரியாக இயங்காத அல்லது நிரம்பியுள்ள நிலையில் உள்ள RAM நினைவகம், அதைத் தொடர்ந்து CPU என்ற செயலகம் செயலில் ஈடுபட தேவையான நினைவக இடம் இல்லாத நிலையிலும் (RAM memory, L2 RAM cache, video RAM), NTFS போர்மட்டில் ஏற்பட்ட தவறும், ஆன்டிவைரஸ் மென்பொருள் காரணமாகவும், சிஸ்டத்தில் ஏற்பட்ட தவறும் எனப் பல காரணங்களால் கணினி BSOD ஐக் காட்டி நின்று விடுகிறது. பொதுவாக மென்பொருளை விட, Hard Diskலும், RAM நினைவகத்திலும் ஏற்படும் தவறுகளே அதிகமாக BSOD தவறுகளுக்கு காரணமாகி விடுகிறது.

இதை சரி செய்ய சில வழிகள்:

>> எந்த காரணமாக இருந்தாலும் முதலில் கணினியை Restart செய்து விடலாம். இதன் மூலம் முன் இருந்த நிலைக்கு செல்லலாம்.

>> கடைசியாக இன்ஸ்டால் ஆன மென்பொருளை அப்டேட் செய்யலாம் அல்லது நீக்கலாம்.

>> Hard Diskல் ஏற்படும் தவறுகளை Run சென்று "Chkdsk /f /r" என்று கொடுத்து சரி செய்து கொள்ளலாம்.

>> Safe mode இல் தொடக்கி, சில startup program களை நீக்கி சரி செய்யலாம். தற்காலிக நினைவகத்தை (RAM+Page File) அதிகரிக்கலாம்.

>> RAM ஐக் கழற்றி சுத்தம் செய்து திரும்ப இணைக்கலாம்.

>> Device பாதை (IRQ) வேறொரு பாதையில் மாறி, conflict ஏற்பட்டால் Device manager சென்று மஞ்சள் குறியீடு உள்ளதா எனப் பார்த்து update அல்லது திரும்ப இன்ஸ்டால்(uninstall / install ) செய்து கொள்ளலாம்.

System Drive களில் தவறுகள் என சந்தேகப்பட்டால் Safe mode போகும் போது உள்ள ஆப்சனில் Last Known Good Configuration என்பதில் சென்று சரி செய்யலாம். System Service களில் தவறு என்றால், Control Panel -Administrative Tools- Services இல் சந்தேகத்திற்குரியதை நிறுத்தி(disable) வைக்கலாம். sfc scanம் செய்யலாம். Startup Repair செய்யலாம். இந்த BSOD தவறை சரிசெய்ய சிலர் பல சமயங்களில் முற்றாக புதிதாக இயங்குதளத்தை நிறுவியும் இருக்கின்றனர்.

கடைசியாக கணினியில் என்ன செய்தீர்கள் என்பதை ஞாபகப்படுத்தினாலே, கணினியில் ஏற்படும் பல தவறுகளை சரி செய்து விடலாம். BSOD பிழைகளின் போது stop code திரையில் வரும்.அதை வைத்தும் பிழைகள் என்ன என்பதைக் கண்டறிய முடியும்.

[இதைவிட நமக்கு வேண்டாதவர்கள் பக்கத்தில் இருந்து தொண தொண என்று பேசிக் கொண்டு நம் கணினியில் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்தினால் தற்காலிகமாக ஒரு Blue Screen ஐ உருவாக்கி, கணினி பழுது என்று சொல்லித் தப்பித்தும் விடலாம்!!]

இந்த நிலையில் RAM-நினைவகம் மற்றும் Hard Diskல் உள்ள Page File-Virtual memory பற்றி சிறிதாவது தெரிந்து கொள்வது சிறந்ததாகும். கண்டது கற்றது பண்டிதன் ஆவான்.



RAM இல் ஏற்படும் பிழைகள் பொதுவாக page file ற்கும் nonpaged area விற்கும் இடையில் ஏற்படும் தொடர்பின்மை காரணமாக ஏற்படுகிறது. RAM இல் உள்ள nonpaged area வில் அந்தச் சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லா செயல்களையும் RAM தயார் நிலையில் வைத்திருக்கும். அதே சமயம் Page File-memory இல், இயங்கத் தேவையான பக்கங்களின் விபரங்களையும், தகவல்களையும் RAM சேமித்து தயார் நிலையில் வைத்திருக்கிறது. nonpaged area-memory இல் தயாராக இருக்கும் செயல் ஒன்றை செயல்படுத்த RAM என்ற நினைவகம் Page File இல் உள்ள பக்க விபரங்கள், தகவல்களை பெறும் நோக்குடன் அதன் உதவியை நாடுகிறது. அப்போது Page File-memory ஆல் கொடுக்க முடியாது என்றால், CPU மேற்கொண்டு செயலாற்ற (Process) முடியாத நிலையில், கணினியை காப்பாற்றவும், தரவுகளை அழிந்து போகாமல் தடுக்கவும் CPU-செயலகம் கணினியை நிறுத்தி விடுவதால் இந்த Blue Screen Error வருகிறது. இதற்கு RAM -physical memory யும் Page File -Virtual memory யும் போதாமை அல்லது தொடர்பின்மை காரணமாக இருக்கிறது.

RAM இரண்டு விதமாக செயல்படுகிறது. ஒன்று கணினியின் Motherboardல் இணைக்கப்பட்ட RAM-Physical Memory, இன்னொன்று Hard Diskல் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Virtual memory (Page File) ஆகும்.



Hard Diskல் வைத்து வேலை பார்ப்பதைவிட, RAM நினைவகத்தில் வைத்து வேலை பார்ப்பது சுலபமானதும், வேகமானதும் ஆகும். உதாரணமாக பிரவுசர் மூலம் கற்போம் தளத்தை படிக்க அல்லது YouTube வீடியோவைப் பார்க்க செல்வோமானால், முதலில் அவை RAM நினைவகத்தில் தரவிறக்கப்பட்டு சேமித்து பின்னர் நமது பார்வைக்குத் தருகிறது. முடிந்ததும் அடுத்து வரும் வேலைகளைத் தொடருவதற்காக இவற்றை அழித்து விடுகிறது. Cookie என்ற ஒரு சிறிய file மட்டும் அடுத்த முறை இணையத்தில் இலகுவாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்வதற்காக, பிரவுசரில் சேமிக்கப்படுகிறது.

இப்படி தரவுகளோ வீடியோக்களோ,படங்களோ தரவிறக்கப்பட்டு RAM நிரம்பிவிடும் போது, சிலவற்றை Hard Diskல் உள்ள Page File (virtual memory) இல் சேமிக்கப்படுறது. ஒரு ப்ரொகிராம் சிறிதாக்கப்படும்(minimize) போது அல்லது அதிக நேரம் பயன்படுத்தப்படாதபோது, page file இல் இருப்பவை RAM ற்கு மாற்றப்படுகிறது. மீண்டும் பெரிதாக்கும் (maximize ) போது மீண்டும் அவை page file ற்கு செல்கிறது. இந்த செயலை நாம் கணினியில் உள்ள பச்சை நிற led-light விட்டு விட்டு எரிவதில் இருந்து காண முடியும்.

அதே போல் பெரிய ப்ரொகிராம் ஒன்று வேலை செய்யும் போது, Hard Diskல் உள்ள page file ஐ கணினி பயன்படுத்துவதால் சிறிது வேகம் குறைகிறது. இதைத் தவிர்க்க தேவையற்ற ஒரு செயல் backgroundல் இயங்குமானால் (Taskbar manager இல் பார்க்க முடியும்), அதை முற்றாக நிறுத்தி விடுவதால் கணினியை வேகமாக்க முடியும். RAM ஐ upgrade செய்வதாலும் வேகத்தை அதிகரிக்க முடியும். சிலர் Page File ஐ நீக்கி(disable) விடுவதால், வேகம், performance அதிகரிக்கும் என்று சொல்வது தவறான விளக்கமாகும். இது தவிர இரண்டு Hard Disk இருக்கும் கணினிகளில் page file இரண்டாவது Hard Diskற்கு மாற்றினால், இரண்டு Hard Diskகள் ஒரே சமயத்தில் வேலை செய்வதால் வேகம் குறையும். ஒரே Hard Diskல் வேறு பிரிவில் (partition) page file வைத்திருந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது.

கணினியைத் தொடக்கவும், தொடர்ந்து கணினியில் உள்ள செயலிகள் மற்றும் அனைத்தும் முறையாக இயங்கவும், P-RAM (Physical- Random Access Memory ) என்ற தற்காலிக நினைவகம் தேவைப்படுகிறது. இந்த P-RAM ற்கு உதவும் நோக்குடன், கணினியின் Hard Diskல் உள்ள வெற்றிடத்தில் (free space ) இருந்து உருவாக்கப்பட்ட Page File (V-RAM -Virtual memory ) பயன்படுத்தப்படுகிறது. கணினி செயல்கள் அதிகரித்து செயல்படாமல் அல்லது வேகம் குறையும் போது RAM ல் உள்ள தரவுகளை, விபரங்களை Hard Diskல் உருவாக்கப்பட்ட நினைவக சேமிப்பில் (Page File) தற்காலிகமாக சேமித்து பின் திரும்பப் பெறுகிறது. Hard Diskல் உருவாக்கப்படும் நினைவகத்தை (Virtual Memory -Page File), விண்டோஸ் தானியங்கியாக அமைத்துக் கொண்டாலும் கூட, நாம் நமக்கு வேண்டிய வகையில், நமது Hard Diskல் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்து மாற்றி அமைக்க முடியும். மாற்றி அமைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.

Start - Control Panel - System and Maintenance -System - Advanced system settings -Advanced tab- Performance -Settings -

Advanced - Virtual memory - Change- Automatically manage paging file size for all drives -Maximum size (நமக்கு வேண்டியபடி)- OK

இந்த அளவு RAM அளவின் 1.5 மடங்கு (குறைந்த அளவு) ஆகும். கணினி Hard Diskன் காலி இடத்தைப் பொறுத்து மூன்று -நான்கு மடங்கு வரை அளவை (maximum) அதிகரிக்கலாம்.

உதாரணமாக. RAM=512MB; Virtual Memory 512 x 1.5 = 768 MB ல் இருந்து 512 x 4 = 2048 வரை (Hard Disk ல் போதுமானfree space இருந்தால்) அதிகரிக்கலாம். இருப்பினும் 1GB க்குக் குறைந்த RAM ஆக இருந்தால், குறைந்த அளவு 1.5மடங்கும், அதிக அளவு 3 மடங்கும் சிறந்ததாகும். 1 GB க்கு மேலாயின் குறைந்த அளவு 1 மடங்காகவும்,அதிக அளவு 3மடங்காகவும் இருப்பது சிறந்ததாகும்.

(Virtual Memory = Swap File = Page File ).

இந்த RAM Memory ஐ USB மூலமும் அதிகரிக்கலாம். இதைப் பற்றிய பதிவு - பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

Google Project Glass - ஒரு பார்வை

கூகிள் கிளாஸ் பற்றி ஏற்கனவே கற்போமில் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" எழுதிய பதிவை படித்திருப்பீர்கள். அது பற்றிய இன்னும் சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.



இந்தக் கண்ணாடி ஒரு சிறிய கணினியைப் (அணியக்கூடிய கணினி) போல் செயல்படுகிறது. இதில் படங்கள்,வீடியோ எடுக்கும் காமெரா, GPS உட்பட WIFI, Bluetooth முறையில் இணையத் தொடர்பு, speakers, microphone, touchpad, gyroscope, tiny screen மற்றும் Google Maps, Google+,கால நிலை அறிவது போன்ற பல வசதிகளும் உண்டு. இது தவிர siri app போன்று இந்த கண்ணாடியும் நமது உத்தரவுகளை ஏற்று செய்யக் கூடியது. அதாவது படம் பிடி, வீடியோ எடு, மொழி பெயர், செய்தியை அனுப்பு, தேடு, பயண விபரங்கள் போன்ற செய்திகளை நாம் சொல்லி செய்விக்க முடியும். அதே சமயம் சிலர் கைத்தொலைபேசியை வைத்து தவறான படங்களைப் பிடிப்பது போல், சம்பந்தப்பட்டவர்களை அறியாமலேயே படம்பிடிப்பது மிகச் சுலபமானதாகும். சமீபத்தில் பொது இடத்தில் அனுமதி இன்றி, சிலரை Google Glass கொண்டு சில விதமாகப் படம் பிடித்தவர்களை போலீசார் கைது செய்தது.

இதில் என்னென்ன பாகங்கள் எங்கே உள்ளன என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.




முதலில் சாதாரண பிரேமாக உருவாக்கப்பட்ட போதிலும்,இதில் நாம் கிட்டப்பார்வை தூரப்பார்வை என பார்வைக் குறைவு உள்ளவர்களும், மற்றும் sunglass ஐயும் பொருத்தி வைத்துக் கொள்ளலாம். சுலபமாக முன் பக்கத்தை அசைப்பதன் மூலம் அனைத்து வடிவங்களையும் தூரத்தையும் துல்லியமாக பார்க்க,படம் பிடிக்க முடிகிறது. Start Trek இரசிகர்களுக்கு ஒரு அதிசமாக இருந்தாலும், வாகனத்தில் செல்பவர்கள்,ஓட்டுனர்கள் இப்படி பலருக்கும் இது ஒரு சிறந்த உதவிதான். இந்தக் கண்ணாடி உருவாக கருவைக் கொடுத்தது Star Trek என்ற அமெரிக்க சினிமாத் தொடர் தான். விரைவில் Crossbar- nano தொழில் நுட்பம், Google apps போன்றவை இதில் சேர்க்கப்படும்.

OS-android 4.0.4

Lithium Polymer Battery

4430 SoC DualCore

16 GB Flash with 12 GB usable memory

1 GB RAM

MyGlass app.


வாகன ஓட்டுனர்கள்,பெற்றோர்கள்,மருத்துவர்கள் என பலருக்கு உதவினாலும் கூட, கைத்தொலைபேசி, சினிமா, தொலைக்காட்சி, இணையம், சமூக தளங்கள் போன்றவற்றை தவறான வழியில் பாவிப்பதைப் போல், வளர்ந்து வரும் இது போன்ற தொழில் நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தாவிட்டால், அனைவரும் பயன் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

Apple iOS 7 - முதல் தமிழ் Review

2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.



இதன் பயன்கள் பல இருப்பதால் - முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.

1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிரது.

2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.

3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.

4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.

5. டூ நாட் டிஸ்டர்ப் - ஒரு செம்மை ஆப்ஸ் - பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.

6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.

7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றூம் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.

8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.

9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கனக்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.

10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ் ஓவர்

11. ஐ டியூன்ஸ் ரேடியோ - சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது - அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே - கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.

12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை - நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.

13. ஆப்ஸ் ஸ்டோர் - ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.

14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் - மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.

15. பேட்டரி லைஃப் - இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.

All Picture Snapshots

- ரவி நாக்

நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்பது என்ன?

இரும்பை பொன்னாக்கும் இரசவாத வித்தை என நாம் படித்திருப்போம். இந்த தனிமமாற்றம் (transmutation) வித்தையாக ஒரு சிலரால் பார்க்கப்பட்டாலும், பழைய கிரேக்கர், எகிப்தியர்கள், தமிழர்கள் இந்த முறையில் இருந்து மாறி, குறிப்பிட்ட உலோகங்கள் மேல் வேறொரு உலோகத்தைப் பூசுவதன் மூலம், செயற்கை முறையை அறிமுகப்படுத்தினார்கள்.



இந்த முறை அறிவியல் துறை உட்பட பலவற்றுக்கு பயன்படுகின்றன. ராக்கெட்டுக்கள் (thermal protection system (TPS) உட்பட பலவற்றை, உயர் வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்க, பல பொருட்கள் கலந்த பூச்சு முறை பயன்படுகிறது. விலை உயர்ந்த தங்க நகைகளை (covering) வாங்க முடியாத ஏழைகள் கூட இந்த பூச்சு முறையால் பயன்பெறுகிறார்கள். மேலே சொன்ன தனிமமாற்றம் முன்னர், சோதிடத்துடன் இணைந்து alchemy -இரசவாதம்- pseudoscience - என்று பெயரிலும் சிலர் பார்த்தார்கள். ஏனெனில் அன்று வாழ்ந்த மக்கள், இன்றும் கூட, உலகில் உள்ள மக்கள், கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் கட்டுப்படுத்தப் படுகிறார்கள் என நம்பினார்கள், நம்புகிறார்கள்.

ஆனாலும் அறிவியல் முறையில் பார்த்தால், சில உலோகங்கள் இன்னொரு உலோகத்துடன் சேர்ந்து வேறொரு உலோகத்தை உருவாக்கும்.இது உலோகக் கலவை (மாழைக்கலவை- alloy) எனப்படுகிறது. உதாரணமாக பித்தளை (Brass = zinc + copper); வெண்கலம் (Bronze= copper+tin) போன்றவற்றை சொல்லலாம்.

உலகில் உள்ள உணவு,உடை,பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. இந்த அணுக்களை நம் கண்ணால் மட்டுமல்ல, குறைந்த அளவு மைக்ரொஸ்கோப் களால் கூடக் காண முடியாத சிறியவை. இவற்றை அறிவியல், scanning tunneling microscope (STM), atomic force microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் கண்டறிய முற்பட்டதன் விளைவு நானோ அறிவியல் தொழில்நுட்பம் உருவானது. இந்த தொழில் நுட்பத்தை அறியாமலேயே, நம்மவர்கள் முக்கியமாக, தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கோபுரங்கள், தங்க,வெள்ளி நிறக் கலவைகள் மூலம் அழகு சாதனங்கள் என ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் வெள்ளையன் சொல்லாமல் தமிழன் சொன்னால் யார் தலையிலும், நம்மவர் தலைக்குள்ளும் ஏறாதே!.

ஒன்றும் அறியாத படிப்பறிவில்லாதவர்கள் என நம்மவர்களை, நம்மவர்களே ஒதுக்கி வைத்து விட்டாலும் கூட, நம் முன்னோர்கள், வானியல், மருத்துவம், கட்டிடக்கலை போன்றவற்றில் அரிய சாதனைகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டாலும், அவர்களால் அவற்றின் தொழில் நுட்பத்தை விளக்க முடியவில்லை. சமீப கால அறிவியலால் கண்டறியப்பட்ட, தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சியை, நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டனர்.(திருமந்திரம்)

இந்த வகையில் மூலகத்தையும், அணுவையும் (molecule,atom) ஏற்ப கையாள்வதன் மூலம் சில பொருட்களை, சக்தியை உருவாக்க முடியும் எனக் கண்டார்கள். இது Nano Technology என ஆரம்பமானது (நானோ என்றால் கிரேக்க மொழியில் குள்ளன்(dwarf) என்று பொருள்). நானோ அளவை கண்ணால் மட்டுமல்ல, குறைந்த அளவு மைக்ரொஸ்கோப்களால் கூடக் காண முடியாத சிறிய அளவு என்பதால், அளக்கும் முறை nanoscale எனப்படுகிறது. ஒரு அங்குலம் என்பது நானோ அளவில் 25,400,000 nanometers, ஒரு பேப்பர்(paper) 100,000 nanometers தடிப்பானது, ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் one-billionth இல் ஒரு பகுதி ஆகும். இது (nanometer- nm ) நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத சிறிய அளவாகும்.

அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனப்படும் இந்த நானோ முறைக்கு நோபல் பரிசு பெற்ற Physicist "Richard Feynman" 1959 டிசம்பர் 29 இல், கலிபோர்னிய இன்ஸ்டிடுயுட் ஆஃப் டெக்னொலஜியில் (California Institute of Technology (CalTech), "There`s Plenty of Room at the Bottom" என்ற உரையின் மூலம் வித்திட்டார். இருப்பினும் நானோ தொழில் நுட்பத்தை, (nanotechnology) முதலில் 1974 இல் அறிமுகப் படுத்தியவர் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழக (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவராவர். தற்போது இந்த நனோ டெக்னொலொஜி Nano-Sim, Chips,Nanowires, Carbon Nanotubes, Transistors, in medicine, Solar cells, இப்படி பலவற்றில் பாவிக்க முடிகிறது. சமீபத்தில் வந்த iphone5 இல் நானோ சிம் காட் போட முடியும்.

இந்த முறையினால், நிறை குறைவான, அதிக திறன் கொண்ட, ஒளித்தாக்குதல் குறைந்ததும், பெரிய பொருட்களில் உள்ள வேதிப்பொருள் தாக்கத்தை விட, கூடிய தாக்கத்தை( greater chemical reactivity) உடையனவாகவும், மிகக் குறைந்த மின்னிலும் வேலை செய்யக் கூடியதாகவும் உருவாக்க முடிகிறது.

இரு விரல்களை அழுத்துவதால் கிடைக்கும் மின்னில் இருந்து, கைத்தொலைபேசி சார்ச், சில நிமிட சூரிய ஒளியில் இருந்து கணினி இயக்கம் (கால்குலேட்டர் போல்), MRI போன்ற மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை இப்படி பல, மிகச் சிறியனவாக இருப்பதுடன், குறைந்த அளவு மின்சாரத்திலும் இயங்கப் போகின்றன.சுற்றுப்புற சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

மேற்சொன்ன Carbon Nanotubesகளை கணினி திரையில் பாவிப்பதால் Color, Contrast, Display சிறப்பாக இயங்குவதுடன், மெல்லிய எடை குறைந்த திரைகளை உருவாக்க முடிகிறது.

மொபைல்,லாப்டாப் பாட்டரிகளுக்குப் பாவிப்பதால், மிக விரைவாக சார்ச் செய்ய முடிவதுடன், நீண்ட நேரம் பாவிக்கவும், உழைக்கவும் கூடும். Titanium dioxide (TiO2) ,Zinc oxide (ZnO) போன்றவற்றை அழகுசாதனப் பொருட்களுக்கு பாவிப்பதால், ஊதா ஒளி, Ultraviolet light இதனால் உடலுக்கு ஏற்படும் கேடுகளில் இருந்து காப்பாற்ற நானொ பொருட்களான TiO2 and ZnO2 களை மாற்றி அமைத்து உருவாக்க உதவுகிறது.

வானொலிப் பெட்டிகளில் பாவிக்கப்பட்ட PNP,NPN Transistorsகளை எண்ணிப் பார்த்து விட்டு, 1971 இல் உருவான intel 4004இல், 2300 ட்ரன்சிஸ்டர்களை உபயோகித்ததை அதிசயத்துடன் பார்த்த தொழில்நுட்பம், இன்று 20 பில்லியன் ட்ரன்சிஸ்டர்களை (Six-core zEC12) CPU வில் பாவிப்பதை கண்டு அதிசயிக்கவில்லை. ஏனெனில் இதைவிட இன்னும் நானொ தொழில்நுட்பம் முன்னேறி வருவதுதான்.

சுருக்கமாக சொன்னால்,ஒரு தனிமத்தின்(element) மூலக்கூற்றையும், அணுவையும் (molecule+atom) முறையாகக் கையாள்வதன் மூலம் நானொ தொழில்நுட்பம் உருவாகிறது என்று சொல்லலாம். ஒரு அறையினுள் அடக்கப்பட்ட கணினி இன்று கையடக்க கணினியாக ஆகி விட்டது. இதே போல மிகப்பெரிய பொருட்களை கையாள்வதை விட, சிறிய அளவில் உள்ளவற்றை கொண்டு செயலாக்குவது சிறந்தது, உயர்ந்தது, பலம் மிக்கது என்பதே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும்.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

GPS என்றால் என்ன?

GPS (Global Positioning System ) என்ற வார்த்தையை நாம் இப்போது அடிக்கடி கேட்கிறோம். புவி இடம் காட்டும் அமைப்பு என்று தமிழில் அழைக்கப்படும் இது உலகத்தில் எந்த இடத்தையும் மிகத் துல்லியமாக வானில் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியும் கருவி ஆகும். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

GPS (Global Positioning System ) என்ற புவி இடம் காட்டும் அமைப்பு, ஒவ்வொரு சுற்றிலும் குறைந்தது இரண்டு தடவைகள் உலகை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் (man made stars-satellites) மூலம் தகவல்களை பயனாளிகளுக்கு தரும் முறையாகும். குறைந்தது மூன்று /நான்கிற்கு மேற்பட்ட கோள்கள் நமக்கு மேலே வந்து கொண்டிருக்கும். இந்த முறையில் 32 சாட்டிலைட்கள் செயலில் ஈடுபடுகின்றன. இவற்றில் 24 தொடர் இயக்கத்திலும்,சில பழுதடையும் போது பாவிக்கவும்,சில செயலில் ஈடுபடுத்த முடியாத நிலையிலும் உள்ளன. GPS முறையில் portable navigation devices, smartphone apps, GPS sports watches, sports shoes, maps , real-time services, HD Traffic, cars, ships, aircraft, OpenStreetMap (OSM) என பல வாங்கிகள் (Navigation Receiver) இயக்கப்படுகின்றன.




அக்டோபர் 4, 1957 இல் அப்போதய சோவியத் யூனியன் உலகின் முதலாவது சாட்டிலையிட்டை (ஸ்பூட்னிக்) வானில் ஏவியது. அமெரிக்கா தனது முதல் சாட்டிலயிட்டை (Explorer 1 ) 1958 ஜனவரி 31 இல் வானில் ஏவியது.

மேற்சொன்ன வாங்கிகளுக்கு (Receiver), அமெரிக்காவின் GPS பொதுவாகப் முறை பயன்பட்டாலும், வேறு இரண்டு நாடுகளாலும் GPS முறையில் வேறு பல பாவனைகளுக்காக தனியாக இயக்கப்படுகின்றன. அவை,

(1) Global Positioning System (GPS) அமெரிக்காவும்,

(2) Global navigation satellite systems (GLONASS) ரஷ்யாவும்,

(3) ஐரோப்பாவின் Galileo, Global Navigation Satellite System (GNSS).

சீனாவின் Compass சரியாக இயங்கவில்லை.

நான் எங்கிருக்கிறேன், எங்கே போகிறேன், நீங்கள் எங்கிருக்கிறீர்கள், இலக்கை அடைய சரியான வழி, எப்போது அங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கும் பதில் தருவதன் மூலம் இடங்கள் குறித்த சரியான தகவல்களை நமக்கு இது காட்டுகிறது. குழந்தைகளை பெற்றோர் கண்டறியவும்,அவர்களை அறியாது கண்காணிக்கவும், அப்படி கண்டறிவதன் மூலம் அவர்களிடம் செல்லவும், பாதுகாப்பாக அழைத்து வரவும், தவறான செயல்களில் ஈடுபடாது தடுக்கவும் GPS ஐப் பயன்படுத்துகிறார்கள். அதே போல் இணையத்தளங்கள், சமூக தளங்கள் இணைய பயனாளிகள் எங்கிருந்து இணையத்திற்கு வருகிறார்கள் என்பதையும் GeoLocation மூலம் கண்டறிகிறார்கள்.

இந்த 32 கோள்களும்,நிலத்தில் இருந்துஏறக்குறைய 20,200 - 26,600 கிமீ தூரத்தில்,ஆறு நீள்வட்டப் பாதையில், 11500கிமீ வேகத்தில் உலகை சுற்றுகின்றன. நமது வன்பொருளை (Receiver) ஐ இயக்கும் போது,நமக்கு மேலே உள்ள நான்கு கோள்களில் இருந்து தரவு சமிக்ஞைகளை carrier waves மூலம் பெற்றுக் கொள்கிறது.(carrier Frequencies, Digital Codes மற்றும் Navigation Message போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது)

1960 இல் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் சோதனை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு, 1970 இல் தரையில் இருந்தும் (The ground-based Omega Navigation System),
பின்னர் 1978 பெப்ரவரி 22 இல் சோதனை செயற்கைகோள் அனுப்பப்பட்டும்,1993 டிசம்பர்(08.12.1993 )முதல் 24 கோள்களுடன் செயல்பட ஆரம்பிக்கப்பட்டு,17.07.1995 முதல் முழு செயல்பாட்டிற்கும் கொண்டுவரப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை (DOD) அறிவித்தது. 2012 இல் 32 கோள்களாக உயர்ந்த இவை, 55 பாகை (degree) சாய்வாக, பூமியை சுற்றிவர எடுக்கும் நேரம், 11 மணி 58 நிமிடங்களாகும்..

இந்த GPS முறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது.

  • Space segment
  • Control segment
  • User segment


இதில் Space segment என்பது வானில் இயங்கும் செயற்கைகோள்கள் இருக்கும் பகுதி.

அடுத்து உள்ள Control segment பூமியில் இருந்து செயற்கை கோள்களின் இயங்கு பாதை, அவற்றின் செயல் போன்றவற்றை கட்டுபடுத்த இயங்கும் பகுதி.

User segment பகுதி தான் நம்மிடம் இருக்கும் கருவிகள். இவற்றின் மூலம் நாம் ஒரு இடத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். கார், மொபைல்போன் உட்பட பல கருவிகளில் Map navigation வசதியாக இது தான் உள்ளது.



Distance = Velocity*Time என்ற அலகை வைத்து இவை கணக்கிடப்படுகிறது. இதில் GPS signal இன் Velocity ஒளியின் வேகமான 300,000 Km/s இலும், GPS transmissions frequencies 1575.42 and 1227.60 Mhz ஆகவும் (L-Band இல்) இருக்கும்.இவை Trilateration என்ற முக்கோண வடிவிலான முறையில் செயல்படுகின்றன.கோள்களில் Atomic Clocks பயன்படுத்தப்படுகின்றன.

இது தவிர தற்போது அமெரிக்காவில் இயங்கும், GPS இன் Wide Area Augmentation System -WAAS- இன் செயல்முறை மிகத் துல்லியமாக கணக்கிடுகிறது. இது விமானங்கள், aircraft, போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

ChromeCast, Crossbar - இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்

ChromeCast மற்றும் Crossbar இரண்டும் சமீபத்தில் அறிமுகமான புதிய தொழில்நுட்ப வசதிகள். இதில் ChromeCast கூகுள் நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதமும், Crossbar கடந்த ஆகஸ்ட் மாதமும் அறிமுகமானது. இரண்டையும் பற்றி இங்கே காண்போம். 

ChromeCast



Google ஜூலை மாதம் அறிமுகப்படுத்திய ChromeCast என்ற சிறிய பென்ட்ரைவ் dongle மூலம் தொலைக்காட்சியில் Netflix, HDTV—movies, TV shows, music, YouTube, Google Play, Chrome மற்றும் ஆடியோ/வீடியோ ஆகியவற்றை சிறிய கணினி, மடிக்கணினி, smartphone திரைகளில் பார்க்காமல் WiFi மூலம் HDMI Port வழியாக இணைத்து பெரிய TV திரையில் காணலாம். The Roku, Apple TV ஐ விட நன்றாகவும், 30/35 டாலரில் கிடைக்கவும் செய்கிறது. அமெரிக்காவில் செயல்படும் ChromeCast விரைவில் மற்றைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள்.

Crossbar Flash Memory - நானோ முறையில் இன்னொரு தொழில்நுட்பம்



Internal Memory எனும் Flash Memory இல் புதிய அறிமுகம் Crossbar Memory ஆகும். வழமைக்கு மாறாக GB இல் இருந்து 1TB வரையான Chip இல் சேமிப்பு, ஆனால் மிகச் சிறியதும், 20 மடங்கு குறைந்த மின்னைப் பயன்படுத்தி, 20 மடங்கு அதி வேகமாகவும், அதே சமயம் 140MB/s வேகமாக எழுதும் சக்தியும்,7 MB/s படிக்கும் சக்தியும் இந்த Crossbar Memory க்கு உள்ளது. இதை Crossbar நிறுவனத்தின் இணை அமைப்பாளரும், மிச்சிக்கன் பல்கலைக்கழக பேராசிரியருமான Wei Lu உருவாக்கி உள்ளார்.

இந்த புதிய200mm2 chip நினைவகம் மூலம் கையடக்க கருவிகளில் 250 மணி நேர HD வீடியோக்களை சேமித்து பார்க்கவும், 250,000 பாடல்களை சேமித்து கேட்கவும் முடியும். NAND based flash ற்கு மாற்றாக ReRAM (resistive random-access memory)- ( RRAM) மூலம் உருவாக்கி தொழில் நுட்பத்தில் புதிதாக கால் பதித்துள்ளது.



DR.Fujio Masuoka வால் உருவாக்கப்பட்ட,NAND Flash Memory (NAND gate (Negated AND or NOT AND) தொழில் நுட்பம், Digital cameras, portable MP3 players, USB (Flash) sticks போன்றவற்றில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. Crossbar தொழில்நுட்பம் இதற்கு மாற்றாக விளங்கக் கூடிய அற்புதமான தொழில்நுட்பம் என்று தொழில்நுட்ப வல்லுனர்களால் நம்பப்படுகிறது.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் "சக்தி" அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

iPhone 5S & iPhone 5C - இரண்டு புதிய ஐபோன்கள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் நேற்று iPhone 5s & iPhone 5C என்ற இரண்டு புதிய ஐபோன்களை வெளியிட்டது. இரண்டுமே iOS 7 இயங்கு தளத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

iPhone 5s இல் உள்ள Home பட்டன் finger print sensor ஆகவும் இயங்கும். இதன் மூலம் உங்கள் போனை உங்களை தவிர வேறு யாராலும் unlock செய்ய முடியாது. அத்தோடு முதல் முறையாக 64bit Processor உள்ள மொபைல் என்ற சிறப்பம்சத்துடன் வெளியாகி உள்ளது இந்த போன். இதன் செயல்வேகம் முந்தைய ஐபோனை இரண்டு மடங்காக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.



iPhone 5C ஆனது குறைந்த விலை போன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய ஸ்பெஷல் இது பல வண்ணங்களில் கிடைப்பது தான். ஆம் வழக்கம் போல அல்லாமல் வெள்ளை, ஊதா, பச்சை, மஞ்சள், பிங்க் என்ற பல வண்ணங்களில் இந்த போன் உள்ளது.

இதன் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

Apple iPhone 5S Features

Operating SystemApple iOS 7 OS
Display4 inch (640 x 1136 pixels) Capacitive Touch Screen display
ProcessorA7 chip with 64-bit architecture, M7 motion coprocessor
RAM
Internal Memory16/32/64 GB
External MemoryNo
Primary Camera8 MP, 3264×2448 pixels, autofocus, dual LED flash, 1.5 µm pixel size, Simultaneous HD video and image recording, touch focus, geo-tagging, face detection, panorama, HDR, Full HD (1080p) recording
Front  Camera1.2 MP, HD (720p) recording
BatteryNon removable 1440 Li-Po battery with Up to 250 hrs Standby Time and 10 hrs talk time
Connectivity3G, 4G, WiFi, Bluetooth, GPS and Micro USB

Full Specificaitons - Apple iPhone 5S

Apple iPhone 5C Features

Operating SystemApple iOS 7 OS
Display4 inch (640 x 1136 pixels) Capacitive Touch Screen display
ProcessorDual-core Apple A6 Processor
RAM1 GB RAM
Internal Memory16/32 GB
External MemoryNo
Primary Camera8 MP, 3264×2448 pixels, autofocus, LED flash, TTouch focus, geo-tagging, face detection, panorama, HDR, ƒ/2.4 aperture, Full HD (1080p) recording
Front  Camera1.2 MP, HD (720p) recording
BatteryNon removable battery with Up to 250 hrs Standby Time and 10 hrs talk time
Connectivity3G, 4G, WiFi, Bluetooth, GPS and Micro USB

Full Specificaitons - Apple iPhone 5C

கற்போம் செப்டம்பர் மாத இதழ் – Karpom September 2013

கற்போம் செப்டம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

கற்போம் இதழில் தங்கள் கட்டுரைகளை பகிர அனுமதி அளித்திருக்கும் Cyber Simman மற்றும் உழவன் ராஜா ஆகிய இருவருக்கும் நன்றி. நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:


  1. பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? – எச்சரிக்கை
  2. 9 இந்திய மொழிகளுடன் SAMSUNG GALAXY SMART PHONES & TABLETS
  3. பாஸ்வேர்டு: தவிர்க்க வேண்டிய பத்து வழிகள்
  4. நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி ?
  5. நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN CARD) என்றால் என்ன ?
  6. பேஸ்புக் நிறுவனர் MARK ZUCKERBER-ன் கணக்கை HACK செய்த கில்லாடி
  7. தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?
  8. இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி
  9. புது நுட்பம்
  10. தமிழில் போட்டோஷாப் – 9
தரவிறக்கம் செய்ய


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.